கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 12, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

மகாகனம் பொருந்திய…

 

 (1987 வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எமது நாட்டு மக்களோடு நான் கொண்ட நிபந்தனை யற்ற உறவு என் படைப்புகளில் ஆத்மார்த்த சுருதியாக வெளிப்படுவதை என்போலவே எனது வாசகர்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள். எனது வாசகர்களுக்கும் எனக்கும் உள்ள நெடுங்காலப் பந்தமும், அவர்களுடன் எனக்குண்டான உரிமையும் எனது இலக்கியச் சுருதியில் விளைந்தவை. எனது படைப்புகளைப் படிக்காமலே என்னை விமர்சிக்கும் விபரீத வாசகர்களும், நாவலின் ஆரம்ப அத்தியாயம் ஒன்றையே பார்த்துவிட்டு முழுவிவரணத் திற்கும்


பிரகாசமும் சாயையும்

 

 (1946 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆரம்பத்திலேயே மட்டம் தட்டியிருந்தால், இம் மாதிரி நடந்திராது. அப்பொழுது முடியவில்லை. முடியும் என்றாலும்-உலகத்தில் எவ்வளவோ நடக்கின்றன எல்லாமா எனக்குத் தெரிகின்றன? இந்தக் கதையைப் படியுங்கள். இதனால் எவ்வித ஹானியும் ஏற்படாது என்பது என் நம்பிக்கை. கதை எழுத உட்காரும்போது எல்லாம் உண்மையாக எழுதவேண்டுமென்று பிரதிக்ஞை செய்து கொள்ள முடிவதில்லை. இரண்டொரு தவறுகளும் இருக்கலாம். அபிப்பிராய பேதங்களும் இருக்கலாம். இதனால் என்ன குடியா முழுகிப்போய்விடப்


‘பலிக்கும்’ ஜோதிடங்கள்

 

 ஜோதிடம், எண்கணிதம், ஜாதகம் போன்றவற்றில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா..?. அதில் நம்பிக்கை உள்ளவர்கள், இப்படி வாங்களேன் உங்களுக்குக் கைகொடுக்கனும். நம்பிக்கை இல்லாதவங்களும் வாங்க உங்களுக்கும் கைகொடுக்கனும். இரு தரப்பினர்க்கும் கைகொடுக்கறேன்னா காரணம் இல்லாமல் இருக்குமா.? காரணத்துக்கு ஒரு கதை இருக்கிறது. கதையைச் சொல்லவா? அந்த தோட்டத்துக்கு இரு ஜோதிடர்கள் வந்தாங்களாம். இருவரும் ஒரே குருகிட்ட பாடம் படிச்சவங்களாம். தோட்டத்திற்கு நுழைஞ்சதும் அவங்களுக்கு தாகமா வந்துச்சாம். அப்போ ஒரு வீட்டு வாசல்ல நின்னுகிட்டு தண்ணி கேட்டாங்களாம். அந்த நேரம்


மகனுக்காக…

 

 “இந்த பய புள்ள எங்க போனான்னு தெரியலியே …. காலையிலேருந்து தேடுறேன்.. டேய் சக்தி… ஏன் ஆத்தா என் பையன பாத்தியளா…” “இல்லையே… பள்ளிக்கூடம் லீவு வுட்டாகல்ல இந்த ஒரு மாசமும் இனிமே ஒனக்கு அவன தேடுறதுதாண்டி பொழப்பு…” என்று பக்கத்து வீட்டு பாட்டி சொல்லிக்கொண்டே போக… “ஆமாத்தா…”, என்று சொல்லிக்கொண்டே பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த கவிதாவிடம் வந்தார்.. சக்தி என்கிற சக்திவேலுவின் அம்மா… “ஏய்..கவிதா…” “என்னத்த கூப்டியா…?”, என்று அவள் கேட்க… “எங்கடி ஒன் கூட்டாளி? காலையிலேருந்து


க்ஷணப்பித்தம்

 

 (1973 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மக்களுக்காக ஓடிக்கொண்டிருக்கும் பஸ்ஸில் மக்கள் ஓடிச் சென்று ஏறிக்கொள்கின்றனர். வெள்ளவத்தை பஸ் நிறுத்துமிடத்தில் ஏறிய ஒரு கிழவன். ஒரு பெண், ஒரு வாலிபன் ஆகியோருக்கு இருக்க இடமில்லை. ஆடிச்சென்று கொண்டிருக்கும் பஸ் அதிலிருந்தவர்களையும் ஆடவைத்துக் கொண்டு இருக்கிறது. கிழவனுக்கு பின்னால் நிற்கும் வாலிபனின் வசீகரம் பெண்ணின் மனதைக் கவர்கிறது. அது காதல் அல்ல. ஒரு வகையான கவர்ச்சி. சுமார் ஆறடி உயரம், சிரிக்கும்


திக்கற்ற பார்வதி

 

 (1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘ஆய்வராத’ வண்டி கறுப்பனை வேறே வைத்தார்கள். வேறே வைப்பது என்றால், குடியானவர்களுக்குள் ஒருவ னுக்கு விவாகம் செய்து மனைவி வீட்டுக்கு வந்ததும் அவனும் அவன் மனைவியும் வாசிக்க ஒரு தனிக் குடிசை போட்டுக் கொடுத்து விடுவார்கள். புருஷனும் மனைவி யும் பாடுபட்டு உழைத்துச் சீவனம் செய்யவேண்டும். இது ஒரு நல்ல வழக்கமாகும். உடலுழைப்பு அறியாத உயர் – வகுப்பாரில் இன்னும் இருந்து வரும்


பேரம்

 

 பாஸ்கரின் குடும்பம் சற்றேரக்குறைய பாபநாசம் பட சுயம்புலிங்கத்தின் குடும்பம் போலத்தான். அவர்களுக்குள் இருக்கும் அந்த பாசம், பிடிப்பு, மகிழ்ச்சி, கட்டுக்கோப்பு, எல்லாமே சுயம்புலிங்கத்தின் குடும்பம் போலத்தான் இருக்கும். என்ன?, குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை ரெண்டு பேர் கூட. பாஸ்கர், அவன் மனைவி கனகா அவனுடைய அப்பா தணிகாச்சலம், அம்மா பாக்கியலட்சுமி, இரண்டு பெண் பிள்ளைகள் தாரணி, மீனா. பெரியவள் ப்ளஸ் டூ வும், சின்னவள் டென்த் ம் படிக்கிறார்கள். ஆக மொத்தம் ஆறு பேர். பாஸ்கரின் அப்பா


தன்மை இழவேல்

 

 ‘கதவே உடையற மாதிரி இப்படிக் காட்டுத் தனமா யாரு கதவிடிக்கறாங்க?’ என்று யோசித்தபடியே விரைந்து வந்து கதவுத் தாழ் நீக்கினார் சுந்தரபாண்டி. ஆசிரியர் கதவைத் திறந்து வெளியில் பார்த்தபோது செல்லதுரை தன் மகன் ராசப்பனோடு நின்றிருந்தார். ராசப்பனின் வலது கன்னம் வீங்கியிருக்க அவன் கண்களிலிருந்து அருவியாய்க் கொட்டியது கண்ணீர். அப்பா இப்படிச் செய்வார் என்று ராசப்பன் சிறிதும் எதிர்பார்க்க வில்லை. பூனைப் பார்வைக்குத் தப்பி புதைக்குழியில் விழுந்துவிட்டது போல ஆகிவிட்டது ராசப்பனின் நிலைமை. “கிளம்புடா… அந்தப் பய


முதல் இரவு

 

 அனு மொத்த உடம்புக்கும் ஓய்வு கொடுத்துக் கட்டிலில் படுத்திருந்தாள்.உடம்பில் பிசுபிசுத்துக் கொண்டிருந்தது மணப்பெண் வாசனை. அறை எங்கும் கல்யாண வாசனையும் பரவி இருந்தது. அட்டெண்டன்ஸ் நோட்டுகளில் மட்டுமே அழகேசன் என அழைக்கப்பட்டு ஊரெல்லாம் செல்லமாக அழகு என்று அழைக்கப்படும் அழகுக்கும், அனுவுக்கும் இன்று காலை 9:15 மணி முகூர்த்த நேரத்தில்தான் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நிறைவேறியது. கல்யாணத்துக்காக வந்து மத்தியானத்திலிருந்து ஓவராக சரக்கு அடித்து மட்டையான தன் நண்பனை பாதுகாப்பான ஒரு வீட்டில் படுக்க வைத்துவிட்டு முதல்


ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம் 5 இன்ஸ்பெக்டர் சங்கரன் சில முக்கிய விஷயங்களைச் சேகரித்து வைத்துக்கொண்டு துளசிங்கத்தின் வருகையை எதிர் பார்த்த வண்ணம் இருந்தார். துளசிங்கத்தைக் கண்டவுடன் அவருடைய முகம் மலர்ந்தது. “விஜயவல்லியின் கடிதத்தைப் பற்றிய செய்தி நேற்று இரவே எனக்குத் தெரிந்துவிட்டது. உடனே அவளைப்பற்றி விசாரிக்க ஏற்பாடு செய்தேன், காஞ்சீபுரத்திலிருக்கும் ஸி. ஐ.டி. இலாகாவிலிருந்து எனக்குச் சில