கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 11, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

புலவர் செய்த சோதனை

 

 (1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “கொங்கு நாட்டிலிருந்து ஒரு புலவர் வந்திருக்கிறார், ஆணுாரில் உள்ள சர்க்கரை என்ற வள்ளலின் அவைக்களப் புலவராம்” என்று அறிவித்தான் காவலன். “புலவரா! அவரை நான் அல்லவா எதிர் கொண்டு அழைக்கவேண்டும்?” என்று சொல்லியபடியே அந்தச் செல்வர் தம்முடைய வீட்டு வாசலுக்கே வந்து விட்டார். புலவரும் உபகாரியும் சந்தித்தார்கள். இருவரும் மாளிகையின் உள்ளே சென்றார்கள். செல்வர் புலவருக்கு உபசாரம் செய்து அமரச்செய்தார். இருவரும் உரையாடத்


நிலம்

 

 இருபத்திரண்டு வருடங்களுக்குப்பின் ராமலட்சுமிக்கு பொத்தைமுடி ஏறிப்போய் வெட்டுவேல் அய்யனாரைச் சேவிக்கவேண்டுமென்று ஆசை வந்தது. எப்போது அவளுக்குள் அந்த எண்ணம் வந்தது என்று அவளுக்குத்தெரியவில்லை. உறைகுத்தின தோசைமாவு மறுநாள் காலை மூடியைத் தள்ளிவிட்டுப் பூத்துமலர்ந்திருப்பதுபோல காலையில் அவள் அது தன்னிடமிருப்பதை உணர்ந்தாள். அவள் முகம் பூரித்திருப்பதைக்கண்டு அன்னமயில் ‘ஏனம்மிணி, மொகத்திலே எளவெயிலுல்ல அடிக்குது?’ என்று கேட்டாள். ராமலட்சுமி புன்னகைத்துக்கொண்டாள். அடுத்தக்கணமே மனம் கூம்பியது. முகத்தை சுவரை நோக்கித் திருப்பிக்கொண்டாள். நாலைந்துவருடம் முன்புகூட காலையில் அப்படி அகம்பூரித்திருந்தால் நாலைந்துநாள் தள்ளிப்போயிருக்கிறது


ஆராய்ந்து முடிவெடு..!

 

 “குருவே, நான் எந்த முடிவெடுத்தாலும் தப்பாகவே போய் விடுகிறது. இப்படி தப்பாய் முடிவெடுப்பதால் நிறைய இழந்து விட்டேன். ஏன் என்னால் சரியாக முடிவெடுக்க முடியவில்லை?’ தன்னிடம் பதற்றமாய் சொன்னவனை அமைதியாகப் பார்த்தார் குரு. “ஏன் இப்படி பதற்றப்படுகிறாய். அமைதியாய் இந்தச் சம்பவத்தைக் கேள்’ என்று ஒரு சம்பவத்தை அவனுக்குச் சொல்ல ஆரம்பித்தார் குரு. ரயில் பெட்டி ஒன்றில் ஒரு இளைஞனும் அவனது தந்தையும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எதிரே ஓர் ஆள் அமர்ந்திருந்தான். வந்ததிலிருந்தே அந்த இளைஞனின் செய்கைகள்


பராசக்தி

 

 ஊரில் கெத் கெத்தென்று தண்ணீர் தத்தளித்துக் கிடந்த கண்மாயைப் போனவருசம் வந்தவேளை கண்டிருக்கிறாள். கண்மாயின் ஒரு அத்தத்திலிருந்து இன்னொரு அத்தத்துக்கு முங்கு நீச்சல் போட்டு நீர்ப்பாம்பு சேர்ந்ததுபோல், மேகங்களினூடாக ஒரே நீச்சலில் விமானத்தில் தமிழ்நாட்டை எட்டிப்பிடித்துவிட்டாள் நிலா. வசிப்பது அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தின் குளிர் மூலை; வந்தடைந்தது வெப்பப் பிரதேசத்தின் தென்கோடி. சென்னைப் பன்னாட்டு விமான நிலையத்திற்கு இரண்டு வருடம் முன்பு வரை பகலும் இரவும் மாறி மாறி மொத்தமாய் 28 மணிநேரப் பயணம். இடைத்தங்கல், விமான


தலைமன்னர் ரெயில்

 

 (1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜீவகளை ததும்பி இயங்கிக் கொண்டிருந்த ஸ்டேசனில் மனிதக் கூட்டம் குறைந்திருந்தது. அப்போது நேரம் இரவு ஒன்பது மணி. சிலந்தி வலைப் பின்னலாய் நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்லும் தபால் வண்டிகளும் புறப்பட்டு விட்டன. மாலை நாலு மணி தொடக்கம் இரவு எட்டரை மணிக்கு மட்டக்களப்பு தபால் வண்டி புறப்படும் வரை கலகலப்பாக, சுறு சுறுப்பாக, களை பூண்டிருந்த ஸ்டேசன் சிறிது ஓய்ந்திருந்தது. இறுதியாக


பொற்குகை ரகசியம்

 

 வெளிப்புறத்தில் சுண்ணாம்பு பூசப்படாமல் சொரசொரப்பான சுவர்கள் கொண்ட கட்டிடமாயிருந்தது அது. பக்கவாட்டுச் சுவற்றுக்கு அருகில் ஒரு பெரிய வண்டியில் உடைந்த ரம்பங்களும், துருப்பிடித்த குதிரை லாடங்களும், பழுதாகிப் போன தொலைபேசிப் பெட்டிகளும் குவித்து வைக்கப் பட்டிருந்தன. அந்த வண்டியின் மீது ஏறினால் முதல் ஜன்னலில் கால் வைத்து, இரண்டாவது ஜன்னலைப் பற்றி விட முடியும். கட்டிடத்தின் முன்னும், பின்னும்தான் ஆட்கள் நின்றிருந்தனர். இந்தச் சுவர்ப்பக்கம் தரையில் குடித்து வீசப்பட்ட மது பாட்டில்களும், எச்சில் இலைகளும், வாழைமட்டைகளும் சிதறிக்கிடந்தன.


பெரியமனுசத்தனம்

 

 “ஐயா! கும்புடுறேனுங்கோ!” “என்னய்யா ராமசாமி! என்ன திடீர்னு என்னை பாக்க வந்திருக்க.. ஏதாவது விஷேசமா?”, என்றார் மீசையை முறுக்கியவாறே ஊரின் பெரிய மனிதரான ஜம்புலிங்கம். பக்கத்திலேயே அவரது வலதுகை கணேசு நின்று கொண்டிருந்தான். “விஷேசந்தாங்கையா, பொண்ணுக்கு இன்னும் பத்து நாள்ல கல்யாணம் வச்சிருக்கேனுங்க.. நீங்கதாய்யா வந்து நல்லபடியா நடத்திக் கொடுக்கோணும்”, என்றார் கும்பிட்ட கையை அகற்றாமலேயே ராமசாமி. “அதுக்கென்னய்யா.. வந்துட்டா போச்சு. நீ எந்த கவலையும் படாதே”, என்றவர் கணேசுவை பார்த்து, “எலே கணேசு! நாம எல்லா


நாவப்பழம்..! நாவப்பழம்…!

 

 “நாவப்பழம்…! நாவப்பழம்…!” குரல் கேட்டு திரும்பினேன். தலையில் மூங்கில் கூடை சுமை. வயிறு வேறு பெரிசாய் எட்டு மாதம். வியர்வை ஒழுகும் முகம். அவள் அசைந்து அசைந்து வருவதைப் பார்க்கவேப் பாவமாக இருந்தது. கூடவே எட்டு வயது சிறுவன் வேறு. மேல் சட்டை போடாமல் அரைக்கால் டிரவுசரோடு அவன் தலையிலும் ஒரு சின்ன கூடை. அவளை ஒட்டி வந்தான். வறுமை எவ்வளவு கொடுமை..?? !! வயிற்றில் சுமையோடு தலையில் பாரம் சுமந்து பாவம் இவள் பிழைப்பு. படிக்கும்


ஆலமரத்து ஆவி

 

 இயற்கையின் சக்திகள் பசுமையான மரங்களில் குடி கொண்டிருப்பதாக மனிதன் நம்புகிறான். கனடா பூர்வகுடி மக்கள் மரங்களை தெய்வமாக வழிபடுகிறார்கள். இது இந்தியாவிலும் இலங்கையிலும் மர வழிபாடாய் மலர்ந்தது. நீங்கள் எந்தத் தெய்வக் கோயிலுக்குச் சென்றாலும் அங்கு அந்தத் தெய்வத்திற்கென்று ஒரு மரம் இருப்பதைக் காணலாம். இம்மரம் தலவிருட்சம் என்று கூறப்படும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு மரம் உண்டு. சிவனுக்கு ஆலமரம். கணபதிக்கு அரசு. அம்மனுக்கு வேம்பு. *** திருகோணமலையில் இருந்த தென் மேற்கே சுமார் 50 கிமீ


பரதனும் பாதுகையும்

 

 (1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாசகர்களுக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுத் துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில மெளனப் பிள்ளையார் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இப்போது அதையே திரு.கோபுலுவின் அற்புதமான சித்திரங்களுடன் இரண்டாம் பதிப்பாக மங்கள நூலகத்தார் கொண்டு வந்துள்ளார்கள். திரு. கோபுலுவுக்கும் மங்கள நூலகத்தாருக்கும் என் நன்றி. இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள கதைகளைச் சமீபத்தில் ஒரு முறை படித்துப் பார்த்தேன். சில இடங்களில்