கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 5, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

கோரியோலானஸ்

 

 (1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதை உறுப்பினர் ஆடவர் 1. கயஸ்மார்க்கியஸ் : கோரியோலியை வென்றதனால் கோரியோலானஸ் என்றழைக்கப்பட்டவன் – ரோமின் ஒப்பற்றவீரன் – வலம்னியா மகன் , வர்ஜிலியாகணவன் – கயஸ் தந்தை – ரோமின் பகைவனான தார்க்குவினை முறியடித்தவன். 2. துள்ளஸ் ஆபீதியஸ் : ரோமர் பகைவரான வால்ஷியரின் தலைவன் – கோரியோலானஸால் முறியடிக்கப்பட்டவன் – கோரியோலானஸ் ரோமின்பகைவனை போது நண்பனானவன். 3. காமினியஸ் :


குஷ்டரோகிகள்

 

 சமூகத்திலிருந்து, மனித நேய உறவுகளிலிருந்து விலகிப்போன தொழுநோய் மனப் போக்காளர்களை வைத்து சோதனைமுறையில் எழுதப்பட்ட ஒரு கதை இது. உலகில் பாதியைச் சப்பித் தின்று தீர்த்துவிட்டுத்தான் ஓய்வேன் என ‘கரோனா தொற்று’ நட்டுக்க நிற்கும் காலத்தில், தொற்றுநோய் குறித்த (Epidemic) கதைகள் தொகுப்பினை வெளியிட வேண்டுமென பிரான்சிலிருந்து வெளியாகும் France-based Editions Jentayu இதழ் விரும்பியது. தமிழிலிருந்து எனது இக்கதையைத் தேர்வுசெய்து அண்மையில் பிரெஞ்சில் மொழியாக்கம் செய்துள்ளார்கள். இந்த சிறப்புத் தொகுப்பு மின்னிதழாக வெளியாகவிருக்கிறது. ‘டைபாய்டு காய்ச்சலால்’


என்னதான் முடிவு?

 

 பரீட்சை முடிவு தெரியவில்லை. வினோத்துக்கு ஒரே டென்ஷானாக இருந்தது. பரீட்சை எழுதியபோதிருந்த நம்பிக்கை இப்போ கொஞ்சம் கொஞ்சமாகத் தளர ஆரம்பித்திருந்தது. ‘விடைத் தாளில் சுட்டெண்ணைச் சரியாக எழுதினோமா?’ என்று வேறு சந்தேகம் முளைத்து மனதை அரித்தது. ஒரே தவிப்பு. எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை. ஆசிரியர்களின் பாழாய்ப்போன வேலை நிறுத்தத்தால் அன்று வெளிவர வேண்டிய பரீட்சை முடிவு தள்ளிப் போய்விட்டது. இனி ஒவ்வொரு நாளும் இதே நினைப்பால் தூக்கமும் கெடப் போகிறது. நத்தையாக ஊரும் நேரத்தை


உள்ளங்கால் புல் அழுகை

 

 “மை நேம் ஸ் றோசி, வட்ஸ் யுவர் நேம்?” எனக் கேட்டு விட்டு அவ என்னைப் பாக்கிறா. எனக்கு அவவைப் பாத்த உடனை, எங்கடை ரீச்சர் மிசிஸ் ஜோன் ஸ்கூலுக்கு ஒரு நாள் வராமல் நிண்ட போது, வந்த அந்தச் சப்பிளை ரீச்சர் தான் ஞாபகத்துக்கு வந்தா. அந்த ரீச்சரின்ரை குரல் மாதிரி அவவின்ரை குரலும் கடுகடுப்பாக இருந்தது. அந்தச் சப்பிளை ரீச்சரை எனக்குப் பிடிக்கவேயில்லை. அம்மாவுக்கு அதைப் பற்றிச் சொல்லி ஒரு நாள் அழுத போது,


சமூகம்

 

 சுமார் நூறு பணியாளர்கள் பணி புரிந்து கொண்டிருந்த கம்பெனி அது. பத்து மணி இருக்கலாம். வேலை செய்து கொண்டிருந்த வேலப்பனை பர்சனல் டிபார்ட்மெண்டில் கூப்பிடுவதாக ஆள் வந்து சொல்லவும் பகீர் என்றது. எதற்கு கூப்பிடுகிறார்கள்? காலையில் உள்ளே நுழையும்போது காவலரிடம் சண்டை போட்டதாலா? அவனாகத்தான் நம்மை கிண்டலடித்தான், அதற்குத்தானே அவனிடம் வாக்குவாதம் செய்தோம்? போய் வத்தி வைத்து விட்டானா? கடவுளே! இனி அங்கு போனால் அவ்வளவுதான், நான்கைந்து பேரை பார்க்க சொல்வார்கள். இது ஒரு மாதிரியான பழி


உன்னை விட மாட்டேன்..!

 

 என் பெயர் பஞ்சாபகேசன். கொஞ்சம் பழமையான பெயர்தான். பஞ்சு என்று கூப்பிட்டுக்கொள்ளலாம். ஆளும் அந்தகாலத்து மனுஷன் தான். வேட்டி, சட்டைதான். நான் பார்க்கும் சரக்கு மாஸ்டர் ஊத்தியோகத்துக்கு இது போதாதா?. சரக்கு மாஸ்டர் என்று ஏன் பெயர் வந்ததோ தெரியாது. ஆனால் உண்மையிலேயே எனக்கு நல்ல சரக்கு இருப்பதால்தான் மயிலை மெஸ்ஸில் பத்து வருஷமாய் மணக்க மணக்க சமைத்துப் போட்டுக் கொண்டு குடும்பத்தை ஓட்டிக்கொண்டு வருகிறேன். சாப்பாட்டில்தான் உப்பு காரம் இருக்கிறதேயொழிய வாழ்க்கை உப்புசப்பில்லாமல். வேலை, வீடு,


முதல் சம்பளம்

 

 ஜீவா முதல் முதல் கிடைத்த சம்பளப் பணத்தை புரட்டிப் புரட்டிப் பார்க்கிறான். கஞ்சிபோட்டு வெளுக்கப்பட்ட துணிபோல் மடமடப்புக் குறையாத புத்தம் புதிய தாள்கள். ஒரு தாளை எடுத்து முகர்ந்த போது புதுமையான வாசம் ஒன்று நாசியில் புகுவதாக உணர்ந்தான். கண்களில் நீர்முத்து ஒன்று தெறித்து திவாகரம் போல் உருண்டோடிக் கீழே விழுகிறது. இந்த நாளுக்காக அவன் எவ்வளவு போராட வேண்டியிருந்தது.? அவனுக்கு இத்தாலி விசா கிடைத்தபோது அவனுடைய குடும்பம் அடைந்த எல்லையற்ற மகிழ்ச்சி அவன் நினைவுக்கு வருகிறது.


காத்திருத்தல்

 

 நான்…நிற்கவும் முடியாமல், நெளியவும் முடியாமல், இருக்கப் பிடிக்காமல், உட்காரவும் முடியாமல் ஒரு அவஸ்தையான ஆத்திர இம்சையில் அந்தக் கிளினிக்குள் உள்ளுக்கும் புறத்துக்குமாக நடந்தேன். மருத்துவரைப் பார்க்கும் அவசியத்தில் என் அம்மா என் முகத்தைப் பார்க்கவேப் பயந்துகொண்டு தலையை வேறு புறம் திருப்பி கூட்டத்தோடு கூட்டமாய் அமர்ந்திருந்தாள். அம்மா என்னை இங்கு அழைத்ததும் எனக்குள் ஆத்திரம் பற்றியது. சீக்கு, சீக்கு! 60 வயது அம்மாவிற்காக மாதத்தில் இரண்டு மூன்று முறையாவது. நான் அவளின் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு மருத்துவரிடமாகக்


வைரவர் கோவிலடிக் கிணறு

 

 யாழ்ப்பாணத்தில் நல்லூர் பருத்தித்துறை வீதியில் முக்கியமான நாற்சந்தி. அரசடி சந்தி. ஒரு காலத்தில் அங்கு ஒரு செழித்து வளர்ந்த அரசமரம் இருந்தது அனால் அதன் கீழ் புத்தர் சிலை இருக்கவில்லை, அதற்குப் பதிலாக வம்பளக்க மரத்தின் அடியை சுற்றி சலவைக் கற்கள் இருந்தன. இப்போது அந்த மரம் அங்கு இல்லை. அந்த இடத்தில் பாரதியார் குடிபுகுந்து விட்டார். ஆனால் அந்த சந்தியில் இருந்து கந்தர்மடத்தடி சந்திக்கு போகும் வீதியின் பெயர் இன்றும் அரசடி வீதி என்றே இருக்கிறது/


விரையும் கரையும்

 

 (1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?’ – பழமொழி. விரை ஒன்று போட்டு, அதிலிருந்து சுரை முளைக்கச் செய்வது மட்டுமல்ல; பரங்கிப் பூ பூக்க வைத்து, பீர்க்கங்காய் காய்க்கும்படி செய்து, வெள்ளரிப்பழம் பழுக்கும்படி பண்ணுகிற அற்புத வித்தை பூலோகத்தில் நடைபெறுகிறது. அதுதான் சினிமா. – யுகதர்மம். விரை தூவு படலம் டைரக்டர் புரட்யூஸர் ஸ்ரீமான் சோணாசலம் சினிமாப் படம் பிடிக்க வேண்டும்