கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 24, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

மீட்சி

 

 (1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கீழே ஓடும் சாக்கடையின் குறுக்கே போட்டிருந்த கல் வாசற்படியிலே சுரத்தின்றிக் கன்னத்தில் கை வைத்தவண்ணம் பிரேமா உட்கார்ந்திருந்தாள். காலையிலிருந்து அன்று அவளுக்கு ஏனோ ஒன்றுமே பிடிக்கவில்லை. பொழுதே போகவில்லை போல் இருந்தது. அவளுடைய வீட்டுக்கு எதிரே ஆலமரத்தடியில் அவளை ஒத்த பிராயத்தினர் தாம் விளையாடிக்கொண்டிருந்தனர். தினமும் அந்தச் சிறுவர்கள் பள்ளிக்கூட உபாத்தியாயருக்கு ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு அங்கு வந்துதான் விளையாடுவார்கள். ஆனால் பிரேமாவின் அம்மா


அனுபவ அறிவு

 

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தன் முயற்சியில் சற்றும் மனம் தள தராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதைச் சுமந்து கொண்டு அவன் மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து “மன்னனே! நீ இந்த பயங்கர நடுநிசியில் இப்படி சிரமப்படுகிறாயாயே, இது யாராவது பண்டிதருக்காகவா? உண்மையில் அந்தப் பண்டிதருக்கு அனுபவ அறிவும்


தாயகக் கனவுடன்…

 

 (அவள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாள். குமர்ப்பிள்ளைகளோடு கண்டபடி பேசக்கூடாது என்ற அம்மாவின் அறிவுறுத்தல் ஒரு பக்கம் என்னைப் பின் வாங்க வைத்தது. நாங்கள் வெளியே ஓடியாடி விளையாடும்போதெல்லாம் அறையன்னலுக்கால் அவள் ஏக்கத்தோடு எட்டிப் பார்ப்பதை அவதானித்திருக்கிறேன்) ஸ்டோர்ரூம் சுவரில் சாய்ந்தபடி நான் விம்மியழுததை சுவேதா கவனித்திருக்க வேண்டும். ‘அப்பா, ஏன் அழுவுறீங்க?’ என்றாள் ‘இல்லை, ஒன்றுமில்லை.’ என்று தலையை அசைத்தபடி கண்களைத் துடைத்துக் கொண்டேன். ‘அழாதீங்கப்பா, அத்தைப் பாட்டியோட வீடு மட்டுமல்ல, இங்கே எல்லா வீடும்தான் சிதைந்து போச்சு, மெல்ல


அப்பா, நான் உள்ளே வரலாமா…

 

 அத்தியாயம்-29 | அத்தியாயம்-30 கொஞ்ச நேரமானதும் “என் அக்காவும்,அத்திம்பேரும் என் கல்யாண செலவே முழுக்க ஏத்துண்டு பண்னதாலே தான் எனககு ஒரு கல்யாணம் ஆச்சு.இல்லாட்டா,சுந்தரம் மாமா மாதிரி, நானும் ஒரு கட்டே பிரம்மசாரியாத் தான் இருந்துண்டு வந்து இருக்கணும்” என்று சொல்லி வருத்தப் பட்டான். “பொண்ணே பெத்தவா கல்யாணத்துக்கு அவா சக்திக்கு என்ன முடியுமோ அதே பண்ணச் சொல்லி,அவா பொண்ணெ பிடிச்சு இருந்தா கல்யணம் பண்ணீக்கணும்.வெறுமனே அவாளே ‘இதே பண்ணுங்கோ’ ‘அதே பண்ணுங்கோ’ ‘இதேப் போடுங்கோ’ அதேப்


சிதைவு

 

 (பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ்.அகஸ்தியரின் நினைவு தினத்தை (29.8.1926 – 08.12.1995) முன்னிட்டு) நாட்டுப் பிரச்சினையளப்பற்றி வந்த பழைய பேப்பர்ச் செய்தியளிருந்தாத் தட்டிப் பாத்திட்டு எனக்கும் தா. நானும் இப்ப வாற செய்தியளைப் படிச்சுப் போட்டு உனக்குத்தாறன். ‘இந்த நாளையப் பிரச்சனைகளை வச்சு எழுதின கதை’களெண்டு சிலவேளை ரண்டு பேருக்குமே பரிசு கிடைக்கலாம்… ‘என்ராப்பா உப்பிடிக் களைச்சு விழுந்து ஓடிவாறாய்?’ ‘வீடியோக் கடை பூட்டப் போறாங்கள். எடுத்த ‘கெசட்’டுகளைக் குடுத்துப்போட்டு, வேற படங்கள் எடுக்கப்போறன்’ ‘வீடியோ’க் கடைக்கெண்டா,


சசாங்கனின் ஆவி

 

 (1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த விஜயகீர்த்தியின் நடை பொறுமை இழந்த அவன் மனத்தைக் காட்டிற்று. அரைமணி நேரத்திற்கு முன்பாகவே வந்திருக்க வேண்டிய சசாங்கன் இன்னும் வரவில்லை. ஏன் இன்னும் வரவில்லை? ஒரு பக்கத்தில் இரண்டு ஆசனங்கள் போட்டிருந்தன. நடுவே உயரமான ஒரு பீடத்தில் சதுரங்கப் பலகையும் காய்களும் வைத் திருந்தன. பாத்திரத்திலுள்ள அகிற் கட்டைகளைக் கிளறிவிட்டு, வட்டமிடும் அகிற்புகையைப் போல வந்தாள் ஹேமாங்கனை. அரசனையும்


கூப்பிட்றேன்..கூப்பிடுதேம்மா

 

 லெவல் 1 “கூப்பிடறேன்.. கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணு.. எப்போ ?- கூப்பிடறேன் டா செல்லம்..வெயிட்…(ஸ்மைலி) கட்டாயம் கூப்பிடுவீங்க தானே. அய்யோ வீடியோ காலா, ஆடியோ காலா..கேட்கலையே. கேட்டிருக்கனும்..எதுக்கும் தலையை வாரிட்டு இந்த அழுக்கு நைட்டியை மாத்திட்டு அவனுக்குப் பிடித்த வெளிர் மஞ்சள் நிற டாப் போட்டுக்கலாமா.. அய்யோ.. அவனாவது வீடியோ கால் பண்றதாவது.. இடியட்.. “கூப்பிட்றேன்.. கூப்பிடுதேம்மா” லெவல் 2 கூப்பிடுவார் கூப்டுவாரில்ல..ம்ம் நேரமாகுதே.. கூப்பிடுவார்தானே! பாவம்.. வேலை அதிகமாக இருந்திருக்குமோ..வீட்டில யாராவது வந்திருப்பாங்களோ.. அப்படித்தான்


என் மாதாந்திர ஓய்வூதியம்

 

 அமெரிக்கா லாஸ் ஏஞ்சலஸ் 2009ஆம் ஆண்டின் தொழிலதிபருக்கான விருது வழங்கும் விழா. தேவமனோகர் பணக்காரத் தோரணையில் கம்பீரமாக மேடையில் அமர்ந்திருக்கிறார். அருகில் ஜனாதிபதி மற்றும் பல பிரமுகர்கள் அரங்கமைப்பும் விருது விழா ஒழுங்கமைப்பும் மனக்கண்ணுக்கெட்டா வண்ணம் மச்சமாக இருந்தது. எது எப்படி இருப்பினும் தேவமனோகருக்கு இது வாழ்வின் உச்சாணியில் நிற்கும் ஓர் இன்ப அனுபவமே. சேர்… இந்தாங்கோ , நோட்டீஸ் சேர்… சேர்… நோட்டீஸ் எங்கட பள்ளிக்கூட வருடாந்த விளையாட்டுப் போட்டி வாற சனிக்கிழமை. அதான் பிறின்சிப்பல்


என்னைப் பார் காய்ச்சல் வரும்

 

 பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 மாயா அக்காவிற்கு நடந்ததைப் பற்றி அம்மாவிடம் விசாரித்தேன். மாயா அக்கா மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், மேலும் அன்றுப் பகலில்‌ நீ சரிவர உணவு உண்ணாமல் இருப்பதால் தான் இது போன்ற நோயெல்லாம் வருகிறது என்று பெற்றோர்கள் சிறிது வாய்ச் சொல்லால் கண்டித்திருக்கின்றனர். ஆகவே தான் அவர் மாயா இப்படிச் செய்திருக்கிறாள் என்று அம்மா கூறினார். மேலும் வழக்கமாக அப்பா அண்ணனைக் கடையில் வைத்துவிட்டுக்


நாடோடி

 

 அந்த முதல் அனுபவத்தையும், முதல் இரவையும் அவனால் மறக்க முடியவில்லை. 28 வயதில் முதன்முறையாக அவன் ஒரு பெண்ணை ஸ்பரிசித்தான். அந்தப் பெண் அவனுடைய மனைவி இல்லை என்பதோ, அவர் ஒரு பாலியல் தொழிலாளி என்பதோ அவனுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. அவனது பாலியல் விருப்பங்கள் நிறைவேறியது ஒரு பாலியல் தொழிலாளியிடம் என்றாலும் அவனுக்கு எந்தவித குற்ற உணர்ச்சியோ வருத்தமோ ஏற்படவில்லை. அந்த முதல் அனுபவம் ஒருவாரம் வரை அவனைப் பரவசத்தில் வைத்திருந்தது. ஏதோ பெரிதாகச் சாதித்து