கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 21, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

நொண்டிக் குருவி

 

 (1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “காக்கை குருவி எங்கள் சாதி – நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்று பாடிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தேன். கல்லூரியிலிருந்து மாலையில் வீடு திரும்பும் எனக்குச் சாதாரணமாக அலுப்பும் சலிப்பும் நிறைந்திருக்கும். அன்று மட்டும் என் மனத்தில் குதூகலம் பொங்கி வழிந்து கொண் டிருந்தது. என் அறைக்குள் சென்று புத்தகங்களையும் பையையும் மேஜைமேல் சாய்த்தேன். இரண்டு கைகளையும் ஒரு தடவை மேலே உயர்த்தியபடியே


கடவுளுக்கு ஒரு கடிதம்

 

 கொழும்பு மத்திய தபால் பரிமாறும் (Central Mail Exchange) அலுவலகத்தில் பணிபுரியும் சுப்பர் வைசர் இருந்தார், அவரின் வேலை தெளிவற்ற முகவரிகளைக் கொண்ட அனைத்து அஞ்சல்களையும் செயலாக்குவதாகும். ஒரு நாள், உண்மையான முகவரி இல்லாமல் கடவுளுக்கு ஒரு அழகான கையெழுத்தில் ஒரு கடிதம் வந்தது. அது என்னவென்று பார்க்க அதைத் திறந்தார்.அதை அவர் வசித்தார் . அன்புள்ள எனனை படைத்த கடவுளே, நான் ஒரு 83 வயது விதவை, மிக சிறிய ஓய்வூதியத்தில் வாழ்கிறேன். நேற்று யாரோ


பட்டம்

 

 ஜீவித்தா மெதுவாக நடந்து கொண்டிருந்தாள்,பின்னால் யாரோ கூப்பிடுவது போல் இருந்தது,திரும்பி பார்த்தாள் அவள்,மாலினி ஓடி வந்து ஜீவித்தாவை கட்டிப் பிடித்துக் கொண்டாள்,எப்படி இருக்க,கண்டு எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது,ஏன் இவ்வளவு மெலிந்து போய்விட்ட என்றாள் மாலினி,உனக்கும் தான் தலையெல்லாம் நரை விழுந்து விட்டது என்றாள் ஜீவித்தா,ஆமாம் பதினாறு வயது எல்லாம் தாண்டி,ஐம்பதில் வந்து நிற்கிறோம் என்று சிரித்தாள் மாலினி,இன்னும் கோயில் பக்தியை விடவில்லை நீ,ஜீவித்தா கையில் இருந்த பூஜை பொருட்களைப் பார்த்து விட்டு கேட்டாள் மாலினி,அதை எப்படி விட


அப்பா, நான் உள்ளே வரலாமா…

 

 அத்தியாயம்-28 | அத்தியாயம்-29 | அத்தியாயம்-30 “அப்படி இல்லே மாமா.நான் தினமும் என் சமையலை ரொம்ப கவனமாத் தான் பண்ணீண்டு வறேன்.இப்போ இன்னும் சந்தோஷமா சமையல் பண்ணீன்டு வருவேன்னு தான் சொன்னேன்”என்று சொன்னார் சுந்தரம். “நான் உன்னே ‘சீண்ட’த் தான் சுந்தரம் சும்மா சொன்னேன்.உனக்குத் தான் நன்னா தெரியுமே எனக்கு உன்னையோ,வரதனையோ ‘சீண்டாட்டா’ பொழுது போகாதுன்னு” என்று சொல்லி சிரித்தார் பரமசிவம். கொஞ்சம் நேரம் ஆனதும் பரமசிவம் “சதாசிவா,இவன் பேர் வரதன்.உன் பாட்டிக்கு சொந்தத் தம்பி.ரொம்ப வருஷமா


அப்பாவின் கணிப்பு

 

 உங்க அப்பா வந்திருக்காரு ! முகத்தை கடு கடுவென வைத்தவாறு ராமனாதனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் பார்கவி, அப்பொழுதுதான் குளித்து முடித்து துண்டை கட்டிக்கொண்டு வெளியே வந்திருந்தார். ராமனாதனுக்கும் எரிச்சலாய் வந்தது, என்ன மனுசன், அப்படி என்ன பணத்தேவை இவருக்கு வந்து விடுகிறது. அம்மாவும், இவரும்தான், வீடு சிறியதாய் இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் போதும். சுற்று வட்டாரத்தில் பெயர் பெற்ற வைதீகர், மாதம் இரண்டு மூன்று இடங்களுக்கு ஹோமம் செய்ய பூஜை புனஸ்காரம் செய்ய யாராவது கூப்பிடுவார்கள். அவர்கள் கொடுக்கும்


தங்கமூடி பேனா..!

 

 இரவு மதுரைவீரன் கெட்டப்பில் சிவகுமாரின் கனவில் மீண்டும் வந்தார் அப்பா கணபதி. முறுக்கு மீசை, கையில் அரிவாள், கரிய அடர்த்தியான பயமுறுத்தும் புருவங்கள்… “டேய்..சிவா.. உண்மையைச் சொல்லு..நீதானே எம்பேனாவ எடுத்த.! திருட்டு பயலே. ரத்தம் கக்கியே சாகப்போற பாரு..” போனவாரம் ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் , கருப்பு கண்ணாடி, தொப்பி, கையில் துப்பாக்கியுடன் வந்தது அவனுக்கு அவ்வளவு பயம் தரவில்லை..மாறாக சிரிப்புதான் வந்தது.. “ஏய்.. என் பேனா உங்கிட்ட தான் இருக்கு..குடுக்கல..சுட்டுடுவேன் சுட்டு..” அப்பா..இந்த ஜேம்ஸ்பாண்ட் உங்களுக்கு செட்டாகல.’


அவளும் அவனும்

 

 அவள் அழகாகவே இருந்தாள். பார்த்தவுடன் மனதை வசீகரிக்கின்ற புன்னகை. மல்லிகை மொட்டுகளாய் பல் வரிசை எப்போதுமே முகத்தினிலே மணக்கிறது. அந்தப் பளீச்சென்ற புன்னகை. கூரான மூக்கு. சீராயமைந்த ரோஜா உதடுகள். நடந்து வருகின்ற போதே மற்றவர் களிடமிருந்து தனியாகத் தெரிகின்ற கம்பீரம். எந்த வண்ணத்திற்கும் பொருந்திப் போகின்ற ஒருவித மஞ்சள் வண்ணமான உடல் நிறம். கண்ணுக்கு எப்போதுமே சற்று அதிகமாகத்தான் மையிட்டுக் கொள்வதால் புன்னகைக்கு அடுத்ததாயோ சமமாகவோ எவரையும் தொடுகின்ற கண்கள் அவளுக்கு. பஸ்ஸிலிருந்து இறங்கி ஒவ்வொரு


மதுரஸா தேவி

 

 (1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தினசரிப் பத்திரிகைகளில் சில தினங்களாக ஓர் ஆச்சரியமான விஷயம் “அடிபட்டுக்கொண்டிருக்கிறது. தேச சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள், மனிதவர்க்கத்தின் பண்டைய வாழ்வைச் சோதனை செய்பவர்கள், கற்பனை மன்னர்கள் ஆகியவர்களின் மூளையை மிகவும் குழப்பியுள்ள செய்தி அது. நேபாளத்தின் எல்லைக் கோட்டுக்கு அருகிலே, ரூப்கந்த் ஏரியின் சுற்றுப்புறத்தில், ஏராளமான மனித எலும்புகள் நாலு புறமும் சிதறிக் கிடக்கின்றன என்பதே அந்தச் செய்தி. ஆயிரக் கணக்கான வருஷங்க ளாக


என்னைப் பார் காய்ச்சல் வரும்

 

 பாகம் 1 | பாகம் 2 இராமநாதபுரம் நகரிலுள்ள ஒரு அமைதியான, அத்தனை வசதிகளும் நிறைந்த ஒரு அழகானத் தெரு இளங்கோவடிகள் தெரு. என் வீட்டிற்கு ஒரு வீடு தள்ளி மாயா அக்காவின் வீடு. அக்காவின் தாயார் ஒரு சிறியப் பெட்டிக்கடை ஒன்றை வைத்து வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தார். என் வீட்டில் பள்ளிப்பருவத்தில் வாங்கியுண்ணத் தரப்படும் முக்கால்வாசி சில்லறைகள் அந்தக் கடையைத் தான் சென்றடையும். ஜவ்வு மிட்டாய், சூட மிட்டாய், புளிப்பு மிட்டாய், கொக்கோச்சு, கடலை மிட்டாய்,


லூட்டி

 

 ஸ்பிடி (Spiti valley, Himachal Pradesh) பள்ளத்தாக்கிற்கு என்னைக்காவது போயிருக்கீங்களா? இந்தியாவிற்கு வடக்கே இமைய மலையில் இருக்கும் ஒரு தொலைதூர பள்ளத்தாக்குதான் இந்த ஸ்பிடி. மக்கள் தொகை குறைவான, மொபைல் சிக்கனாலே கிடைக்காத இடம் இது. அதனாலதான் நான் அங்கே போனேன். நிம்மதியா ஒரு சுதந்திரப் பறவை மாதிரி உணரத்தான் நான் அங்கே போனேன். நான், என் தோழி மற்றும் என் டிரைவர் மட்டும்தான் அங்கே போனோம். அன்று ராத்திரி என் டிரைவர் எங்களுக்கு ஒரு பேப்பர்