கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 18, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு காதல் கதை

 

 (1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காதலித்துக் கல்யாணம் செய்யக் கொடுத்துவைக்கவில்லை எனக்கு என் நண்பன் ராகவனுக்குத்தான் கிடைத்தது அந்தப்பாக்கியம். சின்ன வயசிலேயே எனக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டார் கள். அப்பொழுது என் மனைவிக்கு அறியாப்பருவம். அவள் என் தாய் மாமன் மகள். பிறந்த உடனேயே எங்கள் தாய்தந்தையர்கள் எங்களுக் குக் கல்யாண நிச்சயதார்த்தம் செய்துவிட்டார்கள். எங்களுடைய கல்யாண வைபவங்கள் கூட எனக்கு ஞாபகம் இல்லை. ஒன்றே ஒன்று தான்


எதிர்பாராதது!

 

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத் தின் மீது ஏறி அதில் தொங்கும் உட லைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதைச் சுமந்து கொண்டு அவன் மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து “மன்னனே! நீ இந்த பயங்கர நடு ராத்திரியில் ஏன் இப்படிக் கஷ்டப்படுகிறாய்? இதற்கான பலன் கிடைக்குமா? அல்லது நீயும்


கார் வித்த காசு

 

 கார்த்தால கண்ணு முழிக்கறச்ச மணி பதினொண்ணரை. பதினொண்ணரை கார்த்தால சேர்த்தியா மதியத்துல சேர்த்தியா? அஞ்சரை மணிக்கி எழுந்துண்டு, மெரினாவுல ஒரு டிரைவ் போய் வந்து எக்ஸஸ்ஸைஸ் சிட்டு அந்த நாளை ஸ்டார்ட் பண்ணி, நைட் பத்துப் பதினொண்ணு வரைக்கும் பம்பரமாய் சுத்திண்டிருந்த காலமெல்லாம் மலையேறிடுத்து. கார்த்தால ஒம்போதிலயிருந்து நைட் ஒம்போது வரைக்கும் நம்மக் கடையிலதான் வாசம். நடுவுல நடுவுல வேற ஆக்ட்டிவிட்டீஸ். வியாபாரிகள் சங்கத்துல தீவிர உறுப்பினர். ரோட்டரி க்ளப் செக்ரட்ரி. ஃபில்ம் ஸென்சார் போர்டுல மெம்பர்.


அர்த்தமற்ற ஒரு வாழ்வு அர்த்தமுள்ளதாகிறது

 

 உயிருக்காகத் தானே உணவு! உணவுக்காக வேலை! நாலு பேர் பார்க்குமிடத்திற்கு வேலைக்கு வர வேண்டி இருப்பதற்காய் ஏதோ சில அலங்காரங்கள். அலங்காரம் செய்து கொள்கிறாள் என்பதனால் நயீமாவுக்கு வாழ்க்கை மிகவும் இனிப்பாயிருக்கிறது என்று யாரும் எண்ணிவிட முடியாது. பிடிக்கிறது என்பதனால்தான் எல்லாரும் வாழ் கிறார்களா? ஏதோ வாழ வேண்டுமே என்பதற்காகவும் பலர் வாழத்தான் செய்கிறார்கள். ஓடும் குதிரைக்கு முன்னால் “கரட்” கட்டித் தொங்கவிடும் கதை போல வாழ்க்கைப் பாதையின் தொலைவில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இருந்தால் தான்


திரும்பி வந்த மான்குட்டி

 

 ஒரு காடு. அந்தக் காட்டிலே ஒரு மரத்தடியில் இரண்டு புள்ளி மான்கள் படுத்திருந்தன. அவற்றிலே ஒன்று அம்மா மான்; மற்றொன்று குட்டி மான். அம்மாமான் தன் குட்டியைப் பார்த்து, “நீ எப்போதும் என் கூடவே இருக்கணும். தனியாக எங்கேயும் போய்விடாதே!” என்றது. “ஏம்மா, தனியாகப் போகப்படாதா?” என்று கேட்டது குட்டிமான். திரும்பி வந்த மான் குட்டி “நல்லவேளையாக இந்தக் காட்டிலே சிங்கம், புலியெல்லாம் இல்லை. இருந்தால், நம்மை அடித்துச் சாப்பிட்டுவிடும். ஆனாலும் வேட்டைக் காரர்களால் நமக்கு எந்த


ஒத்த ரூபா…!

 

 மணி ஒன்பது அடித்ததும் ராதாவிற்கு படபடப்பு கூடியது,’ ம் என்னதான் ஓடி ஓடி செஞ்சாலும் நேரம் போறதே தெரியலை… அவசரமாக கிச்சனுக்குள் நுழைந்து காஸ் ஆப் பண்ணியிருக்கோமா என்று செக் செய்து கதவை பூட்டி பஸ்ஸை பிடிக்க ஓடினாள். இன்னும் பத்து நிமிடங்கள்தான் இருந்தது பரவாயில்லை வேகமாக நடந்தால் சீட்டில் உட்கார்ந்து விடலாம்.. நேற்றே அந்த சிடுமூஞ்சி மானேஜர், “ மேடம் உங்களை பார்த்து மத்தவங்களும் லேட்டா வர்றாங்க.. நாளையிலர்ந்து டைமுக்கு வரலைன்னா அட்டெண்ட்டஸ்ல ஸைன் பண்ணாதீங்க…”


நம்பினோர் கெடுவதில்லை

 

 (1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கங்கைக் கரையில் பண்டிதர் ஒருவர் கங்கை யாற்றின் பெருமையைப் பற்றியும் அதில் நீராடு கிறவர்கள் தங்களுடைய பாவங்களைப் போக்கிக் கொள்ளும் சிறப்பும் பற்றியும் சொல்லிக் கொண்டு வந்தார். பலர் அவருடைய புராணத்தைக் கேட்டு மகிழ்ந்தார்கள். அப்பொழுது கைலாசத்தில் இருந்த கைலாசபதியைப் பார்த்துப் பார்வதி தேவி, “கங்கையில் மூழ்குகிறவர்கள் எல்லோருக்கும் பாவம் ஒழிந்து நல்ல கதி கிடைக்குமென்றால், கைலாசத்தில் அத்தனை பேர்களுக்கும் இடம் காணாதே”


உத்தியோகம் புருஷ லட்சணம்..?

 

 அந்த மனிதனை ஒரு ‘பிச்சைக்காரன்’ என்று என்னால் சொல்ல முடியவில்லை. ‘அவன் ஒரு பிச்சைக்காரன்’ என்று என்னால் தீர்மானிக்கவும் முடியவில்லை . சமுதாயத்தில் சக மனிதனிடம் கையேந்தி வாங்கிச் சாப்பிடும் அளவுக்குத் தாழ்ந்து வீழ்வதற்கு ஒரு பிரஜையின் நிலைமை ஏன் மாறுபடுகின்றது…? பிச்சைக்காரர்களாக ஒரு பிரிவினர் மாறிவிட்ட பிறகும், அவர்கள் மத்தியிலும், பல உயர்வு, தாழ்வு கொண்ட பிரிவினர் வேறுபட்டுக் காணப்படுகின்றனரே…? எனக்கு சமுதாய ஆய்வு செய்யக் கூடிய அளவுக்கு ஞானம் போதாது… எனது சந்தேகம்… அதற்கான


வாலிபர்கள் ஜாக்கிரதை

 

 அன்று ஒரு புதுப்படம் ரிலீசானது. ஆட்டு மந்தை போல் ஆண்கள் கூட்டம் அலைமோதியது. அமைதிச்சீட்டு விலை ஆறு மடங்கு அதிகமாய் விற்றது. அப்படியிருந்தும் மக்கள் வெள்ளத்தால் அரங்கம் நிறைந்து வழிந்தது. ஆர்வத்தோடு ஓடிவந்த வாலிபன் காட்சன், அரங்கத்தின் வாசலில் தொங்கிக் கொண்டிருக்கும் “ஹஷஸ்புள்” (HOUSE FULL) என்ற போர்டைப் பார்த்ததும் ஏமாந்து சோர்ந்து போனான். அந்தக் கூட்டத்தில் ஒரு ஓரத்தில் ஒரு கண்ணியமான வாலிபப் பெண், படித்தப் பெண், பணக்கார வீட்டுப்பெண், பளிச் பளிச் என்று மின்னும்


மாயாவதியின் கனவு

 

 ‘புரிந்துணர்வுப் போர்நிறுத்தம்’, ‘தற்காலிகப் பேச்சு வார்த்தை’, ‘புலிகளே முன்வரும் போர்நிறுத்தம்’, ‘இனி வடக்குக்கும் போய் வரலாம்’, ‘ஏ – 9 பாதை திறப்பு’, ‘ஆஹா! இனி வடக்குக்கும் தெற்குக்கும் இடையே போக்குவரத்துக்கு எந்தத் தடையுமில்லை…’, ‘நாகதீபத்துக்குச் சென்று எத்தனை வருடங்களாகிவிட்டன’, ‘அந்தப் புத்த பகவானின் கருணை விழிகளின் முன்றலிலே அன்றலர்ந்த வெண்தாமரைகளாகிப் பனித்துளி மின்னக் கிடந்த காலைப் பொழுதுகள் தான் எத்தனை……?’ ஆத்மலயமும், சுருதியும் பிரபஞ்ச வெளியில் மோனரகஸ்யங்களுடன் ஒன்றி… ஒரே வெளிச்ச வீட்டில் வாசம் செய்த