கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 2, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

மனிதத்துடன் சமயோசிதமும் சேர்ந்தால்…?

 

 காலை பதினோறு மணி தனது வேலை நேரத்திற்கு நடுவே , தனது கைச் செலவுகளுக்கான பணத்தை எடுக்க ஏடிஎம் மையத்திற்குள் வந்தான் விஷ்ணு. தனது ஏடிஎம் கார்டை மெஷினுக்குள் சொருகிவிட்டு, தானியங்கி விசைப்பலகையின் நம்பர் பொத்தான்களை விரல்களால் தேய்த்தவாரே “தனது வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது, இப்போதையத் தேவைக்கு எவ்வளவு பணம் எடுக்கலாம்” என்று சில வினாடிகள் வேகமாக யோசித்த வண்ணம் ஒரு சிறியத் தொகையை உறுதி செய்து, மெஷினில் வெளிவந்தப் பணத்தை கையில் எடுத்து


சுவரில் வீசிய பந்து

 

 கதிரவன். அது பெற்றோர் அவருக்குச் சூட்டிய பெயரில்லை. ஆனால், எழுத்துத்துறையில் கம்பீரமாக இருக்கவேண்டாமா என்று யோசித்து, அவர் தானே தன்னை நாமகரணம் செய்துகொண்டார். முதலில் வருந்திய பெற்றோரும், அவர் ஒரு தினசரியின் ஞாயிறு பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றபின், `எல்லாம் அந்தப் பெயரோட ராசி! சும்மாவா? சூரியனில்ல!’ என்று பெருமைபேச ஆரம்பித்தார்கள். அண்ணனுக்கு அந்தப் பெயரால்தான் வாழ்க்கையில் முன்னேற முடிந்தது என்று நம்பிய கதிரவனுடைய தம்பி பகலவனாக மாறினார் “எதுக்கு அவசரமா வரச்சொன்னே?” என்று கேட்ட அண்ணனிடம் அழமாட்டாக்குறையாகச் சொல்ல


வாதனைகள் சில சோதனைகள்

 

 ஹலோ வணக்கம் / வணக்கம்…….நலமாயிருக்கீங்களா இந்த மாதிரி ஒரு இயல்பான உரையாடலாகத்தான் முகநூலில் எமது நட்பு ஆரம்பித்தது. பின்னர் ஒரு நாள் “என்னை உங்களுக்குத்தெரியாது,,……. ஆனால் உங்களை எனக்குத்தெரியும் “என்றாள், எனக்குத் ‘திக்’ கென்றது. “உங்களின்ர ‘பச்சைத்தேவதையின் கொலுசு’ படித்தனான். அதில் உங்கள் அனுபவப் பகிர்வுகளைப்பார்க்க அந்தக்கதை வெறும் புனைவாய் மட்டும் எனக்குத் தெரியேல்லை.” “அப்படியா………. அதொரு இலக்கியப்பத்திரிகையில் வந்த கதையாச்சே………. எப்படி உங்களுக்கு வாசிக்கக்கிடைச்சுது” “அப்ப நாங்கள் இலக்கியப்பத்திரிகைகள் படிக்கப்படாது எங்கிறியளோ.” “நான் அந்த அர்த்தத்தில


அப்பா, நான் உள்ளே வரலாமா…

 

 அத்தியாயம்-25 | அத்தியாயம்-26 | அத்தியாயம்-27 சரோஜா மெல்ல தன் கண்ணைத் திறந்து “நான் ரமேஷ் அமெரிக்காவிலே படிச்சுட்டு சென்னை க்கு வருவான்.அவன் நாம பாக்கற ஒரு நல்ல பிராமணப் பொண்ணே பாத்து கல்யாணம் பண்ணீப்பா ன்.நான் மாட்டுப் பொண்ணோடவும்,பேரன் பேத்திகளோடவும் சந்தோஷமா இந்த ஆத்லே இருந்து வறப் போறேன்னு எத்தனே நாள் கனவு கண்டுண்டு வந்து இருந்தேன்ன்னு உங்களுக்குத் தெரியுமா. இப்போ என் கனவு எல்லாம் பகல் கனவா போயிடுத்தே.இனிமே ரமேஷ் எங்கே சென்னைக்கு வறது.


ஏனோ தெய்வம் சதி செய்தது!

 

 சிவக்குமார் சிங்கப்பூர் வேலை நிமித்தம் வந்தபோது சாதாரண தினக்கூலி வேலை தான். ஊரில் நல்ல படிப்பு படித்திருந்தும் அதற்கான தகுந்த வேலை இரண்டு வருடம் தேடியலைந்து கிடைக்காததாலும், உற்றார் உறவினர் நண்பர்களின் வசை சொல்லை கேட்க சகிக்க முடியாமல்…., குடும்ப கடன் தொல்லையாலும்…., திருமணம் செய்து கொள்வதற்கு முன் சம்பாதிக்க வேண்டும் என்கிற வெறியாலும்…., இப்படி கூலி வேலைக்கு ஒப்புக்கொண்டு வந்தாகிவிட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவன் ஆங்கில திறமை மற்றும் வேலையில் துரிதமாக, காசையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும்படியாக


கடைவாய் பல்

 

 குளிரூட்டப்பட்ட அந்த அரங்கத்தில் உள் புறத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் அமைதியாக திரையை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.திரையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த மேடையில் “மைக்” அருகில் நின்று கொண்டு ஒரு இளைஞன் அந்த திரையில் நடமாடிக்கொண்டிருந்த “என்னை” பற்றி விளக்கி கொண்டிருந்தான். இந்த திரையில் காண்பிக்கப்படும் நபர் நடுத்தர மக்களை சேர்ந்த ஒருவர் இவரின் முகத்தை மட்டும் மறைத்துள்ளேன். இதுவரை ஒரு “மைக்ரோ போனை” வெளியில் எங்கு வைத்தாலும், அவைகள் நமக்கு “ஒலியிலோ”, அல்லது “ஒளி வடிவத்திலோ” வேறொரு இடத்திலிருந்து பார்க்க முடியும். இந்த


திருப்தி

 

 மாதவி படுக்கும் போது வைத்த அலாரம்,காலையில் அடித்தது,அவளுக்கு எரிச்சலாக இருந்தது எழும்புவதற்கு,திரும்பி படுத்தாள்,சீலன் மாதவியை எழுப்பினான்,எனக்கு ஒவ்வொரு நாளும் வேலைக்கு லேட்டாகி போகமுடியாது,நீ இப்ப எந்திரித்தால் தான் சரியாக இருக்கும் என்றான் சீலன்.ஆமா!பெரிய கலெக்டர் வேலைக்குப் போறீங்கள்,கடை வேலைக்கு தானே போறீங்கள்,இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று எரிந்து விழுந்தாள் மாதவி,உன்னுடன் நான் விடியற்காலை சண்டைக்கு வரவில்லை,நிகில் பாடசாலைக்கு ஒவ்வொரு நாளும் லேட் ஆகிப் வருவதாகப் அவனுடைய மிஸ் என்னிடம் கம்லைன் பன்னுறாங்கள் என்றதும்,நீங்கள் ஏன் அவங்களைப்


வேட்டைத் திருவிழா

 

 “மெய்யடியார்களே…” ஒலிபெருக்கியினூடாக வந்த அந்தக் கம்பீரமான குரலைக்கேட்ட கூட்டம் ஒரு கணம் ஸ்தம்பித்தது. தங் களில் யாரும் மெய்யடியார் களல்ல என்று சொல்வது போல, மீண்டும் பழைய பரபரப்பு அங்கு மேலோங்கி நின்றது. குழந்தைகள் கும் மாளமடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். பெண் கள் தேர்த்திருவிழாவுக்கு வரமுடியுமோ வென ‘நாட் கணக்குப் பார்த்துக் கொண்டும், அடுத்தவளின் சேலை, நகை, கண்ணோட்டம், ஒய்யாரம் என்பனவற்றைப் பற்றி சல்லாபித்துச் சிரித் துக்கொண்டும் நின்றார்கள். கோவிலின் தெற்குப்புற அரசமரநிழலிலும், அதற்குக் கிழக்கே நின்ற


இந்திய கலாச்சாரம்

 

 “…. அது தான் இந்திய கலாச்சாரம்; இந்தியன் செய்யும் ஒவ்வொரு சிறுகாரியத்திலும் வெளிப்படும் பண்பாடு, தத்துவம், வாழ்க்கை வழி. அதை விளக்கிக் கூற வாய்ப்பளித்த கலிபோனியர்கள் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி.” முகுந்தன் கூட்டத்தினருக்குக் கைகூப்பிவிட்டுப் பெருமிதத்துடன் மேடையை விட்டுக் கீழே இறங்கினார். ஒரு மணி நேரமாக ‘மெஸ்மரைஸ்’ ஆனது போல நிசப்தத்துடன் கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தினர் எழுப்பிய கரகோஷத்தால் அந்த வெஸ்ட்லேக் ப்ளாஸா அதிர்ந்தது. “அற்புதம், மிஸ்டர் முகுந்தன்! இந்திய கலாச்சாரத்தை இதைவிடத் தெளிவாக எங்களுக்கு


இமைக்கா நொடிகள்

 

 சென்னை, மயிலாப்பூர் லஸ் கார்னர். இரவு இரண்டு மணியிருக்கும். தன்னுடைய பிரம்மாண்டமான வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜ மாணிக்கத்தை அவரது மொபைல் எழுப்பியது. பதட்டத்துடன் எழுந்து உட்கார்ந்து லைட்டைப் போட்டு பேசினார். “மிஸ்டர் ராஜ மாணிக்கம்?” “எஸ்.” “நான் நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை பேசுகிறேன். உங்க மகன் இப்ப எங்கே இருக்கிறான்?” “அவனோட ரூமில் தூங்கிக்கிட்டு இருக்கான் சார்..” “மொபைலோட அங்க போங்க எனக்கு உடனே பார்த்துச் சொல்லுங்க.” ராஜ மாணிக்கம் விரைந்து போய்ப் பார்த்தார்.