கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 27, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

எதுக்கு தாத்தா இது?

 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜெயபாலனுக்கு தோட்டக்காரத் தாத்தா செய்யும் வேலை பிடிக்க வில்லை. “அது என்ள செடி தாத்தா? பூவும் அழகும் இல்லாத செடியை எதற்கு வைக்கறீங்க?” “இது துளசிச் செடி தம்பி. இது கற்பூரவல்லி. பூவோ, அழகோ இல்லேன்னாக் கூட இது சமயத்துக்குப் பயன்படும். மற்ற பூச்செடிகளோட இதுவும் ஒரு மூலையில் இருந்துட்டுப் போகட்டுமே?” “எதுக்குத் தாத்தா இதெல்லாம்? கண்ட கண்ட செடிகளையெல்லாம் நட்டுத் தண்ணீரையும்


தாலிச்சரண்

 

 நாகமாகச் சீறியது இரு கை விரல்கள் பிடித்துத் தொங்கிய பொன்னின் தாலி. உலகில் மிகக் குறைந்த நபர்கள் பங்கேற்ற தாலிகட்டுக்கள் அதற்கு முன்பும் நடந்திருக்கும். பின்பும் நடக்குமாக இருக்கும். கிழக்குப் பார்த்து விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது. கிழக்கென்பது அனுமானம் தீர்மானித்தது. காங்கிரீட் அடுக்குப் பெட்டிகளுக்குக் கிழக்கும் மேற்கும் என்பது உழக்கில் கிழக்கும் மேற்கும் போல. ஆனால் வாஸ்து புரோகிதர்கள் உழக்கிற்குள்ளும் ஈசானமூலை, கன்னிமூலை, அக்னிமூலை என வாய்ப்பாடு சொல்வார்கள். பிள்ளையார் பிடிக்க பசுமாட்டுச் சாணம் வேண்டும். கிடேரியானால் சாலவும்


காட்டில் ஒரு நாள்!

 

 செல்போனில் அழைப்புமணி ஒலிக்க,அதை எடுத்தால் சுவாதி,அப்போது மறுமுனையில், சுவாதி வேமா கிளம்பு, அப்புறம் என்னால வர முடியாதுன்னு எந்த காரணமும் சொல்ல கூடாது,ஏதாவது சொல்லி பிளான்னா கேன்சல் பண்ண, நா செம்ம டென்ஷன் ஆயிடுவேன்,ம்ம் நா கிளப்பிட்டு தான் இருக்கேன் தியா, நம்ம இன்னைக்கு காட்டுக்குள்ள பிக்னிக் போறோம் அது உறுதி,அப்புறம் மனோஜ்,சாந்தி,கரண், சந்துரு எல்லாரும் கிளம்பிட்டாங்களா கேளு,எல்லாரும் கிளம்பிடாங்கா,நீ உன் வீட்டு வாசல்ல கிளம்பி நில்லு நாங்க எல்லாரும் கார்ல வர்றோம்,ஆன் தி வே என்றால்.அனைவரும்


மெல்லுறவு

 

 அன்றைக்கு அந்தப்பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குத் துவாரகா சென்றபோது நேரம் ஏழைத்தாண்டியிருந்தது. கதையை ஆரம்பித்த தேவகி, சற்று நிறுத்திவிட்டு குரொப் பண்ணிவைத்திருந்த ஸ்கிரீன்ஷொட்டை மீண்டும் எடுத்துப்பார்த்தாள். சுதர்சன் இராஜேஸ்வரன். முதல் கொமெண்ட். அவள் ஸ்டேடஸ் போட்டு இரண்டே நிமிடங்களில் போட்டிருக்கிறான். எல்லாமே ஜனவரி எட்டிலிருந்தே ஆரம்பித்தது. இரட்டை முகமூடி. ஹிப்போகிரிட். இதை வெளிப்படையாக எழுதுவதால் அவளுக்கு என்ன அவமானம்? எதுவுமே இல்லை. அவள் என்ன தவறு செய்தாள்? என்ன மண்ணுக்காக அவள் துவாரகா என்ற பெயரில் எழுதவேண்டும் புனைவு


அப்பா, நான் உள்ளே வரலாமா…

 

 அத்தியாயம்-24 | அத்தியாயம்-25 | அத்தியாயம்-26 அடுத்த நாளில் இருந்து சுந்தரம் பரமசிவத்தின் வீட்டுக்கு வந்து சமையல் வேலையைப் பண்ணிக் கொண்டு வந்தான். ரமேஷ் நான்கு வருடங்களும் மிக நன்றாகப் படித்துக் கொண்டு வந்தான். ரமேஷ் நாலாவது வருடக் கடைசியிலே BE.’கம்ப்யூட்டர் சயன்ஸ்’ பரிக்ஷயில் மிக நல்ல மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணீனான். பரமசிவமும் சரோஜாவும் மிகவும் சந்தோஷப் பட்டு ரமேஷைப் புகழ்ந்தார்கள். ரமேஷ் தன் அம்மா அப்பாவின் காலைத் தொட்டு தன் நன்றியைச் சொன்னான். கொஞ்ச


அன்பு அதிர்ச்சி! – ஒரு பக்க கதை

 

 “என்ன சிம்லா, நீ வாங்கனுமுன்னு சொல்லிக்கிட்டு இருந்த, 42 இன்ச் எல்.இ.டி. டிவியை உனக்காக சஸ்பென்சாக வாங்கி வந்து மாட்டினா, சந்தோசத்துல கட்டிபிடிச்சிக்குவேன்னு பார்த்தா, இப்படி கோவப்படுற?” என்று கேட்டான் முத்துச் சோழன். “என்னையும் கேட்டிருக்கலாமில்ல. ஏன்டா கேட்காம வாங்கின?” என்றாள் சிம்லா. “உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாமுன்னு நினைச்சி வாங்கினேன். உனக்கு ரொம்ப பிடிக்குமேன்னு க்ரீன் ஆப்பிளும் வாங்கி வந்து காத்திருந்தா இப்படி கோவப்படுவேன்னு நினைக்கலை.” என்று வருத்தமாய் சொன்னான் முத்துச் சோழன். “உனக்கு


இரண்டாவது வசந்தம்!?

 

 ஷார்ஜா, மீன் காட்சி சாலையில் அலுவலகத் தோழிகளோடு மீன்களைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்த போது தன் கண்ணாடியில் பிரதிபலித்த உருவத்தைப் பார்த்து ஒருமுறை அதிர்ந்துபோனாள் ராணி. திரும்பிப் பார்த்த போது, அதே பசுத்தோல் போர்த்திய புலியாக புன் சிரிப்புடன் செல்வம் நின்று கொண்டிருந்தார். இவர் எப்போது துபாய்க்கு வந்தார்? போன முறை ஊருக்குப் போயிருந்த போது கூட இவர் கண்ணிலே விழிக்கக் கூடாது என்றுதானே சொந்த ஊருக்குக் கூட போகாமல் அஞ்சுகிராமத்தில் அக்கா புவனா வீட்டிலேயே தங்கி


பூம்பூம் மாடு

 

 மாலை 6 மணி அசோசியேஷன் சந்திப்பு துவங்கியது. அனைவரும் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தனர். இந்த தீடீர் சந்திப்புக்கான காரணம் பலருக்கும் தெரியாது. பெரியசாமி தான் அசோசியேஷனின் தலைவர். மேலதிகார வர்க்கத்தின் பெரும்புள்ளி. மூக்கிற்கு கீழே காகம் பறப்பது போல பெரிய மீசை. பார்ப்பதற்கே படுபயங்கரமான கறார் ஆசாமி போல இருப்பார். ரமணியை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தார். அவள் மறுகணம் அவள் மூன்று வயது மகனை இடுப்பில் இறுக பற்றிக் கொண்டாள். “ராமசாமி.. நீங்க மட்டும்


அன்புள்ள அப்பா

 

 “கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே” என்ற சுப்ரபாத பாடல் காலையில் சத்தமாக ஒலிக்கவே சந்தியா கண்களை கசக்கிக் கொண்டு மெதுவாக எழுந்து அமர்ந்தாள். “என்னமா சந்தியா எழுந்துட்டியா… இந்தா காபி குடி” என ஆவி பறக்க காபியை நீட்டினார் பாலமுருகன். “எதுக்குப்பா நீங்க இதெல்லாம் செய்றீங்க, நான் பாத்துக்க மாட்டேனா” என தூங்கி வழிந்து கொண்டே சொன்னவள், “அப்புறம் இவ்வளவு சத்தமா சுப்ரபாதம் போட்டு கேட்கிறீங்க தல வலிக்குது” என தலையில் கை வைத்த


கொள்ளுத் தாத்தா

 

 கதை கேட்க: https://www.youtube.com/watch?v=bSDLT_ORioU அப்பா இனி பிழைக்க மாட்டார் என டாக்டர்கள் கையை விரித்து விட்டனர். அவரை வீட்டிற்கு கொண்டு வந்து ஒரு தனியறையில் படுக்க வைத்தோம். உறவினர்களுக்கு உடனே தெரிவிக்கப் பட்டது. எல்லோரும் வந்து அப்பாவின் இறப்பிற்காக காத்திருந்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. காத்திருந்து பிறகு ஒவ்வொருவராக ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று விட்டார்கள். இது நடந்தது இரண்டு வருடங்களுக்கு முன்பு. அப்போதே அப்பாவுக்கு எழுபத்தியேழு வயது. பிழைத்துக் கொண்டது மட்டுமில்லாமல் தற்போது வீட்டிற்குள்ளேயே நன்றாக நடமாடுகிறார்.