கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 24, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஸ்ருதி பேதம்

 

 விழிப்பு தன் சுழிப்பிலிருந்து தானே வெளிவருமுன் ஏதோ சத்தத்தில் வெடுக்கெனக் கலைந்து முழுமையில் கூடிக்கொண்டது. பழக்கத்தில் பார்வை சுவர்க் கடியாரத் தின் மீது பதிந்ததும் அடித்துப் புரண்டு எழுந்தாள். ஐயோ ரொம்ப நேரமாச்சே ! உடனே நினைப்பு வந்தது. இன்றைக் குப் போலாமா வேண்டாமா? இன்றிலிருந்தே வேண்டாமா? கதவைத் தட்டும் சப்தம். அதுதான் எழுப்பியிருக்கிறது. மெதுவாய், படிப்படியாய், உடனே அவசரமா; கூடவே அதிகாரம். இடுப்பில் துணியைச் சரிபண்ணிய வண்ணம் போய்த் திறந்தால் வாசலில் போலீஸ். ஒருவன்தான். “இது


இதுவரை…

 

  அழுகை எல்லாம் எப்போதோ தீர்ந்து போயிருந்தது. ஆக்ஸிஜன் சிலிண்டரின் உபயத்தால் சுவாசித்துக் கொண்டிருக்கும் கணவனைப் பார்த்தாள் விமலா. திரவ உணவு உள்ளே செலுத்த ஒரு ட்யூப் கழிவை வெளியே எடுக்க ஒரு ட்யூப் மூடியிருந்த அவர் இமைமேல் அமர்ந்த ஈயை புத்தகம் விசிறித் துரத்தினாள். உள்ளே வந்த நர்ஸ் கருவியின் மானிட்டரில் உயர்ந்து தாழ்ந்து – ஓடிக் கொண்டிருந்த அவரின் இதயத் துடிப்பின் கோடுகளை சற்று நேரம் மொனமாக கவனித்தாள். “ஏம்மா, டாக்டர் என்ன சொல்றாரு?”


நாய் வில்லர்கள்!

 

 பொமரேனியன், ராஜபாளையம், அல்சேஷன், ஆதிசேஷன், அனந்தசேஷன் – என்று செல்லமாக வளர்ப்பவர்கள் இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, நாய்களின் மீது துவேஷம் காட்டிய என் போன்றோர் மீது தயவுசெய்து பழக்கதோஷத்தில் பாயாதீர்கள் ! தெருவில் செல்லும்போது எதிரில் வரும் நாய், நான் உனது தோழன்’ என்று வாலை ஆட்டி வெள்ளைக் கொடி காட்டிய பின்பும் கால்களின் ஆடுசதை நடுங்க வலசம்மாவை விட வேகமாக ஓடும் எங்கள் மீது அனுதாபம் காட்டுங்கள். குரைக்கும் நாய் கடிக்காது’ என்ற கொள்கையை, பல


அப்பா, நான் உள்ளே வரலாமா…

 

 அத்தியாயம்-23 | அத்தியாயம்-24 | அத்தியாயம்-25 “மாமா,நீங்கோ எனக்கு மாப்பிள்ளேக்கு எந்த ‘பேப்பர்’லேயும் ஒரு ‘அட்வர்ட்டும்’ தர வேணாம். நீங்கோ எனக்கு எந்த புருஷாளையும் கல்யாணத்துக்குப் பாக்கவே வேணாம்.நீங்களே என்னே கல் யாணம் பண்ணீண்டு,எனக்கு ஒரு நல்ல வாழக்கையையை அமைச்சுக் குடுங்கோ.அது போதும் எனக்கு” என்று சொல்லி பரமசிவத்தின் காலில் விழுந்து நமஸ்காரத்தை பண்ணீனாள் சரோஜா.’ ”சரோஜா எழுந்திரு.நீ கேக்கறதே நான் நிச்சியமா பண்றேன். நான் நிச்சியமா உன்னேக் கல்யாணம் பண்ணீண்டு,உனக்கு ஒரு நல்ல வாழக்கையையை அமைச்சுக்


மாசிப் பிறை

 

 ‘டான்ஸுப் பாப்பா… டான்ஸுப் பாப்பா கோபங்கொள்ளாதே. உங்கம்மா வரவே நேரஞ்செல்லும்! சண்டை போடாதே’ – தெரு முனையில் இப்படியொரு பாட்டுச் சத்தம் கேட்டால், அலமி ஆச்சி வந்து கொண்டிருப்பதாக அர்த்தம். ஓ! இன்று திங்கட்கிழமை! ஒவ்வொரு வாரமும் இப்படிப் பாடிக்கொண்டு, அட்ரஸ் புத்தகமும், ஏரோகிராமுமாக ஆச்சி வந்துவிடுவாள். சிங்கப்பூரில் இருக்கும் தன் கணவர் ராமநாதன் செட்டியாருக்கு வாரம் தவறாமல் ஒரு கடிதம் எழுதிவிடுவது ஆச்சியின் தலையாய கடமையாகும்! ஆச்சிக்கு லெட்டர் எழுதும் வேலையை கர்ம சிரத்தையாக சாவித்திரிதான்


39 சைஸ்

 

 இதை இப்போ என்ன செய்யட்டும்? பார்த்து பார்த்து வாங்கி வந்ததாச்சே. யாருக்கு கொடுக்கமுடியும்? அப்படி யாருக்காவது எடுத்துக் கொடுக்க மனசு வருமா? ம்கூம்.. மனசை பிழிஞ்சி சக்கையாக்கி உயிரைக் காய வைப்பதில்.. என்ன கிடைக்கிறது? இதுதான் அவன் விருப்பமா! இல்ல இல்ல.. அவன் கட்டாயம் வருவான்.. எப்படியும் வந்திடுவான். ‘நான் வரமுடியாது” “உன்னைச் சந்திக்க விருப்பமில்லை” அவன் ரொம்பவும் தெளிவாகத்தான் குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறான். ஆனாலும் எதை வைத்துக்கொண்டு அவன் வந்துவிடுவான் என்று காத்திருக்கிறேன்! அவனுக்காக தானே


யாருக்கு வேண்டும் வரம்?

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஓர் ஏழைக் குடியானவள் கண்ண பிராளை மிக பக்தியுடன் பூஜை செய்து வந்தாள். கண்ணன் அவனுக்கு இரங்கி, ”உனக்கு என்ன வேண்டும்? கேள், தருவேன். ஆனால் ஒன்று, உனக்குத் தருவதை நான் எல்லோருக்கும் தருவேன். எதையும் உனக்கு மட்டும் என்று தருவதற்கு முடியாது” என்றான். “கோபாலா! எனக்கு வேண்டியதை நீ தந்தால் போதும். அதை நீ எல்லோருக்கும் தந்தாயானால் எனக்கு என்ன ஆட்சேபணை?


வளர்ப்பு

 

 மித்திரவேல் மணியைப் பார்த்தான்,காலை நான்கு மணி,பக்கத்தில் அமுதினி தூங்கிகொண்டிருந்தாள் மெதுவாக அறையை விட்டு வெளியில் வந்து சோபாவில் உட்கார்ந்தான்,மகன் உதேஷ் ஞாபகம் வந்தது,படிப்பதற்காக ஹாஸ்டல் அனுப்பி ஒரு வாரம் தான் ஆகிறது,இரண்டு முறை போன் பன்னி நான் சந்தோஷமாக இருக்கிறேன்,கவலை பட வேண்டாம் என்று சொன்னான்.என்ன தான் அவன் அப்படி சொன்னாலும்,மித்திரவேலுக்கு கவலையாக இருந்தது பிள்ளை தற்போது என்ன செய்கிறானோ?தெரியவில்லை,தூங்குவான் என்று மனதை ஆறுதல் படுத்திக்கொண்டான் அவன்.அமுதினி பிரண்டுப் படுக்கும் போது பக்கத்தில் மித்திரவேல் இல்லாததை உணர்ந்தாள்,உடனே


அனகன்

 

 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களுக்கு குரல் கொடுத்தவனை போலொரு முகபாவத்துடன் தன் காரில் ஒலித்த பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தான் அகிலன். அவன் குரலை அவனே கேட்கா வண்ணம் அவன் காதுகளை கவசமிட்டது அந்த பாடலின் ஓசை. இதயம் துளைக்கும் புல்லாங்குழல் இசை காதை துளைத்துக் கொண்டிருந்தது அந்த காரில். கார் பயணத்தில் இசையை இப்படி உரக்க கேட்டு ரசிப்பது அவன் வழக்கம். அவன் கார் அந்த சாலையில் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்க, அவன் எண்ணமோ எங்கோ அலைமோதிக்


முன்னி

 

 பெங்களூர். அன்று சனிக்கிழமை செப்டம்பர் பதினெட்டு. காலை ஆறரை மணிக்கு எனக்கு திடீரென பயங்கர மூச்சத் திணறல் ஏற்பட்டது. சுவாசிக்கவே மிகவும் திணறினேன் . உயிர் பயம் ஏற்பட்டது. என் ஒரே மகன் ராகுல் உடனே என்னை அருகிலுள்ள ஆஸ்டர் ஹாஸபிடல் எமர்ஜென்சியில் சேர்த்து விட்டான். அங்கு உள்ள டாக்டர்கள் உடனே என்னை சூழ்ந்துகொண்டு பெரிய விவாதம் நடத்தினார்கள். நிறைய பரிசோதனைகள் மேற்கொண்டார்கள். ஏற்கனவே பை பாஸ் சர்ஜரி செய்யப் பட்டவன் என்பதால் என் மீது அதிகக்