கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 9, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

வேர்கள்

 

 “அய்யிரு செத்துப் போனதிலிருந்து ஆறு மாசமா பெருமாளு பட்டினிதான், சாமி. புள்ளாகோவுல்லாம் தெனப்படி நடக்குது. பெருமா கோவுலை உட்டுட்டாங்களே!’ என்று அங்கலாய்த்தான் அளவுகார ராமசாமி நாயக்கன். தாத்தா வரதாச்சார், கொள்ளுத் தாத்தா சடகோபாச்சார் மற்றும் ஆசூரி பரம்பரையே பட்டாச்சார்களாக இருந்து கைங்கர்யம் பண்ணிவந்த கருமாணிக்கப் பெருமாள் கோயிலை மூடிவிட்டார்கள். அர்ச்சகம் பண்ண ஆள் இல்லை. ஊரில் இருக்கும் பிராமணர்களுக்கு மனதில்லை; வெளியிலிருந்து யாரும் வந்து செய்வதற்கும் முன்வரவில்லை. ஏனென்றால், கோயிலுக்கு வரும்படி ஒன்றும் அதிகம் கிடையாது. ஆகவே


யாதுமாகி நின்றவள்..!

 

 பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று, அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல், கொண்ட கொழுநன் குடி வறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு


முதல் பயணம்

 

 +2 எக்ஸாம் முடிஞ்சு 2 நாள்தான் ஆனது. நான் அதுவரை எங்கள் மாவட்டத்தின் தலைநகருக்கு கூட சென்றதில்லை. பள்ளி படிப்பை முடித்தவுடன் எதோ பெரிய சுமையை இறக்கி வைத்ததுபோல் இருந்தது. இனிமேல் எதிர்காலத்தை விருப்பம்போல் அமைத்துக்கொள்ளலாம், எங்கும் செல்லலாம் இன்னும் பல முதிர்ந்த எண்ணங்கள் பூத்தது. பெற்றோர்களிடம் சென்னைக்கு செல்வதாக கூறினேன். அம்மா மறுத்தாங்க. அங்கு என் மாமா வீடு இருப்பதால், ஏதேதோ கூறி சண்டைபோட்டு, நாற்பது நாட்கள் மட்டும் விடுமுறைக்கு சென்று முடிந்தால் வேலைக்கு செல்வதாக


அப்பா, நான் உள்ளே வரலாமா…

 

 அத்தியாயம்-19 | அத்தியாயம்-20 | அத்தியாயம்-21 “நான் நிச்சியமா உங்காத்துக்கு காத்தாலேயும்,சா¡யங்காலமும் ஒரு ‘அஸிஸ்டெண்ட்’ வாத்தி யாரே அனுப்பறேன்” என்று சொல்லி விட்டுப் போனார் வாத்தியார். ஒரு ‘அஸிஸ்டெண்ட்’ வாத்தியார் காலையிலும்,மாலையிலும் ராகவன் வீட்டுக்கு வந்து பரம சிவத்திற்கு ‘சந்தியாவந்தனம்’ பண்ணும் மந்திரங்களையும், ‘அபிவாதயே’ மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்தார். பரமசிவம் ‘சந்தியாவந்தன’ மந்திரங்களையும் ‘அபிவாதயே’ மந்திரத்தையும் இரண்டு நாளிலே யே நன்றாகக் கற்றுக் கொண்டு விட்டான். பரமசிவம் பள்ளீக் கூட நாட்களில் தினமும் காலையிலும் மாலையிலும் தவறாமல்


எருதுகட்டு

 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இன்று, புதன்கிழமை, ‘எருதுகட்டு’. உக்கிரமான நாள். நிறைகுளவள்ளி அம்மனுக்கு வருஷா வருஷம் ஆவணிக்குள்ளே முளைக்கொட்டு நடத்தி ஆகணும். தவறினால் ஆத்தா ‘கோவம்’ ஊர் தாங்காது. எருதுகட்டு ஒரு வில்லங்க மான காரியம். ஆப்பநாட்டுச் சனம். பொங்கி விடும் பொங்கி குடிக்காத ஆள் இருக்க மாட்டான். சிறிசு. பெருசு… அத்தனையும் தள் னாடும். ‘குடிக்கக் கூடாது’ன்னு ஊர்க் கட்டுப்பாடு உண்டுதான். எவன் கேக்குறான்? வருஷத்திலே


பைபிள் ஒரு பணப்பயிர்

 

 வீட்டு சேவல் கூவியது. விடிவெள்ளி மறைந்தது. அடிவானம் சிவந்தது. ஆதவன் உதித்தது. இருள் அகன்றது. இடியாப்பசத்தம் கேட்டது. அதிகாலை எழுந்து ஆறரை மணிக்கு வழக்கம் போல் வீடு சந்திக்கப் புறப்பட்டார் சபை போதகர் பொவனெர்கேஸ் கோபால். வாசல் பெருக்கி, முற்றம் தெளித்து,வரவேற்ற வீடு ஒன்றைக் கண்டு, காலிங் பெல் போட்டார் போதகர். ஓடி வந்து, கதவைத் திறந்து கனம் பண்ண முந்திக் கொண்டாள் வாலிபப்பெண் ஜமீல்ராணி. அண்ணன் ஆகாய் லவ்சன் இஞ்சினியரிங் கடைசி செமஸ்டர் தேர்வுக்காய் படித்துக்


மந்திரி இட்ட… தீ!

 

 உல்லாச விடுதியின் உப்பரிகையில் அரைக் கீற்று நிலா.. மங்கிய ஒளியில் காய்ந்துக் கொண்டிருந்தது. அந்த விடுதி;க்குள்ளிருக்கும் உணவு சாலையும்¸ மது மேசைகளுங்கூட மங்கிய வெளிச்சத்துக்குள்தான் அடங்கியிருந்தன. அந்த மது மேசையைச் சுற்றி அமர்ந்திருக்கும் அவர்கள் கொழு கொழுவென்று கொழுக்கட்டையாக இருந்தார்கள். அந்த நால்வரும் நண்பர்களாக இருக்க வேண்டும். வியாபாரிகளாகவும் தெரிய வில்லை. வேறு தொழில் செய்பவர்களாகவும் புரிந்துக் கொள்ள முடியவில்லை. பளிச்சிடும் வெள்ளை ஜிப்பா உடை… வெள்ளை வேட்டி… அவர்களைச் சுற்றி இரண்டு.. மூன்று ‘ஜிப்பா சட்டை’


சம்பாத்தியம்…

 

 சென்னையில் நண்பனின் மகளை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுப் பார்ப்போம், சந்திப்போமென்று கனவிலும் நினைக்கவில்லை கதிரவன். சின்னக் குழந்தையாய்க் கைகளில் தவழ்ந்தவள். அப்புறம் வளர்ந்து, படித்து… திருமணத்திற்குப் பிறகு தந்தையின் சாவில் சந்தித்ததோடு சரி. அதன் பிறகு இதோ… கதிரவன்… சென்னை தியாகராய நகரில் சாலையோரம் நடந்து செல்ல… அருகில் ஊர்ந்து உரசியபடி கார் ஒன்று வந்து நிற்க… அதன் முன் பக்க கண்ணாடி கதவு திறந்து எட்டிப் பார்த்து.. “அங்கிள் ! ‘’ இளம் பெண்ணின் குரல்


ஈடு

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலை பதினோரு மணி. ஜனக் கூட்டம் கணிசமாய்ப் புழங்கும் அந்த மெயின் ரோட்டின் வலைவில் பலகைகளால் தடுக்கப் பெற்ற, சுப்பையனின் டீக்கடையில் வியாபாரம் சுறுசுறுப்பாய் நடந்து கொண்டிருந்தது. பக்கத்துக் கிராமமான வடவள்ளியில் மாரியம்மன் திருவிழா கடந்த பத்து நாட்களாய் அமர்க்களமாய் நடந்து உச்சகட்டமான கடைசி நாள் அன்றைக்கு. பஸ்ஸ்டான்டுக்குப் போகும் கூட்டம் சுப்பையனின் டீக் கடையைத் தாண்டித்தான் போக வேண்டும். வியாபாரம் அவன்


பாபி

 

 எட்டு வயதில் நேபாளத்திலிருந்து இந்தியாவிற்கு கடத்திகொண்டு வரப்பட்ட சிறுமிதான் பாபி. “எனக்குத் தினமும் இரண்டு முறை சிவப்புநிற மருந்து கொடுப்பார்கள். அதைக் குடித்ததும் எனக்கு வாந்தி வரும். அந்த மருந்தைச் சாப்பிடவே பிடிக்காது. வேண்டாம் என்று மறுப்பேன், அழுவேன். ஆனால் என்னைக் கண்மூடித்தனமாக அடிப்பார்கள். கட்டாயப் படுத்துவார்கள்… “இந்த மருந்தை நீ சாப்பிட்டால் விரைவில் பெரிய பெண்ணாகிவிடுவாய்… அப்போதுதான் சீக்கிரமாக வீட்டுக்குத் திரும்பிப் போகலாம்…” என்று பசப்புவார்கள்…” நேபாளத்தின் வடக்குப் பகுதியில் வசித்த ஒரு குடும்பத்தின் எட்டு