கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 5, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 

 அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 புள்ளி சுப்புடு பரம திருப்தியோடு ஏப்பம் விட்டுச் கொண்டு வந்தார். 1 “அரண்மனை சாப்பாடு ரொம்ப பலம்போல இருக்கு!” என்றார் மனோரமா. “ஆமாம்; மனுஷனுக்குச் சாப்பாட்ல கிடைக்கிற திருப்தி வேற எதுலயும் கிடைக்காது. எடைக்கு எடை பொன்னை அள்ளிக்” கொடுங்க. போதும்னு சொல்லமாட்டான். மண்ணை அளந்து கொடுங்க–அதிலும் திருப்தி ஏற்படாது. சாப்பாடு ஒண்ணுலதான் திருப்தி ஏற்படும். ‘போதும் போதும். வயிறு நிரம்பிட்டுது. இனி வேண்டாம்’ என்பான். நம்பூதிரி கதை தெரியுமா உங்களுக்கு?” என்று


அந்த அரபிக் கடலோரம்…

 

 இந்துவை கொலை செய்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்து விட்டது.என்னைப் பலர் முன்னால் மூக்கை உடைத்தவளுக்கு சரியான பாடம் கற்பிக்க ஒரு அருமையான சந்தர்ப்பம். இதை நழுவ விட்டால் இனி ஒரு சந்தர்ப்பம் அமைவது கூட கஷ்டம். என்று மனதிற்குள் எண்ணிக்கொண்ட வினோத் சார் எனக்கு விசாகப்பட்டினம் கப்பலை பார்வையிட சர்வே பண்ண மிகுந்த சந்தோஷம் கூட. ஆனால் இதைப் பற்றி இந்துவிடம் ஒரு வார்த்தை பேசினால்… என்று தன் மேலதிகாரியிடம் வேண்டுமென்றே பற்ற வைத்தான். மிஸ்டர்


ஒரு ஜீவன்…துடித்தது!

 

 (கவனிக்க: காதல் தோல்வியா? மற்றும் வாழ்வில் பற்பல இன்னல்களா? – இக்கதையை படியுங்கள் புரியும்) தூறலாக ஆரம்பித்து. லேசான மழையாக மாறி, அது மண் வாசனையை கிளப்பியதும், இதமான குளிர்ந்த காற்றும் சேர்ந்து வீச. ஜன்னலை திறந்து வைத்து படுத்திருந்த ரவி மதிய தூக்கம் கலைந்து எழுந்து கொண்டான். சில நிமிடங்களில் மழை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க, ஒரு ரம்மியமான ஓசையில், சூழலில், ஆனந்தமாக கட்டிலிலிருந்து இறங்கி ஜன்னலை அடைந்து சிறு பிள்ளை போல் வேடிக்கை பார்த்தான்.


அப்பா, நான் உள்ளே வரலாமா…

 

 அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 ஒரு மாசம் ஆனதும் சிவபுரி ‘நர்சிங்க் ஹோமில்’ ராதாவுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. விஷயம் கேள்விப் பட்டு சாம்பசிவனும் காமாக்ஷியும் கடைக்குப் போய், பிறந்த ஆண் குழந்தை க்குப் போட நாலு குழந்தை ‘ஷர்ட்டு’களை வாங்கிக் கொண்டு வந்தார்கள். ராமசாமியும்,சாம்பசிவனும்,காமாக்ஷியும் சிவபுரிக்குப் போய், குழந்தைக்கு ‘தொட்டில் போடும் விழாவிலும்’,அடுத்த நாள் வாத்தியார் நடத்தின ‘நாமகரணம்’ விழாவிலும் கலந்துக் கொண்டு, அவர் கள் வாங்கி வந்த நாலு குழந்தை


நாய்

 

 தன்னுடைய கம்பெனிக்கு கிளம்புவதற்காக கிளம்பிக்கொண்டிருந்த ரஹீம் “அப்பா ராஜேஸ் வீட்டுல புதுசா ஒரு நாய்க்குட்டி வந்திருக்குப்பா” சூப்பரா இருக்கு பெண் பாத்திமா கண்களை விரித்து ரஹீமிடம் சொல்லவும், ரஹீமுக்கு மகள் அதை சொன்ன அழகு மனதை தொட்டாலும், நாய் வளர்க்கும் விஷயத்தில் அவனுக்கு என்றுமே ஒத்து வருவதில்லை. மகளின் தோளை மெல்ல தொட்டு நாய் குட்டி எல்லாம் நம்மால வளர்த்த முடியாதுடா செல்லம். மகளின் முகம் சற்று சுருங்கியது, போப்பா எப்பவுமே நீ இப்படித்தான் சொல்லறே, கண்களில்


ரெக்கார்ட் டான்ஸ்

 

 “யய்யா எப்பும் வந்த?ஒன் பொண்டாட்டிப்புள்ளய சொவமாயிருக்காவளா?” “எல்லாரும் நல்லாயிருக்கோம்.நீ எப்படியிருக்க பெரிம்ம…ஒன்பேர சொல்லி நல்லாயிருக்கேன்யா.” “யப்பா! ஒன்ன ஆச்சி சாப்பிடக்கூப்பிடுது.” “ஏலே! ஐய்யா…நீ எப்பும் வந்த?” என்று கேட்ட பெரிம்மயிடம் “இன்னைக்குதான் எட்டுமணி கேட்டிசி பஸுக்குக்கு”வந்தோமென்றான் மகன். “என்னய்யா?எல்லாருமா வந்துருக்கிய?” “இல்ல பெரிம்ம.அவ வரல நானும் புள்ளையிலும்தான் வந்திருக்கோம்,காலாண்டு பரிட்சை முடிஞ்சி, அதான்…லீவுக்கு இவங்கள உடவந்தேன்”. “சரிச்சரி…அப்பும் இந்த பத்து நாளும் தெருக்காட்ட புழுதிக்காடாக்கிரானுவ” என்றவள் மகனிடம் “ஒங்க ஆச்சி தோசகீச சுட்டுவச்சிருப்பா ஆறீரப்போவுது போங்க போய்


உளைச்சல்

 

 சந்தியா..ப்ளீஸ்..கொஞ்சம் யோசியுங்க.. இல்லைங்க சுபாஷ்…நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்தேன்.. தீர்மானமாக கூறினாள் சந்தியா. அடுத்த ஆறு மாசத்துல ப்ரோமோஷனும் சம்பள உயர்வும் இருக்கு, நான் ஏற்கனவே உங்க பேரை ரெகமெண்ட் பண்ணிட்டேன்..அதுவும் இல்லாம நீங்க, ரொம்ப வருஷமா இங்கேயே இருக்கீங்க. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி உங்க கணவர், அவரோட கம்பெனியில அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கி தந்தாரு, அப்பவும் நீங்க போகல..இப்போ திடீர்னு ரிசைன் பண்ணா என்னங்க அர்த்தம்.. சாரி சுபாஷ்..எனக்கு கொஞ்ச


யோக்கியன் – ஒரு பக்க கதை

 

 அதிகாலை நடைப்பயிற்சி. நடு சாலையில் கிடந்தது ஒரு இளநீர். தூரத்துப் பேருந்து நிலையத்தின் அருகில் தினம் ஒரு இளநீர் வண்டி உண்டு. அதில் வாங்கிச் சென்ற எவரோ ஒருவர்தான் வழியில் தவற விட்டிருக்கிறார்கள்! – தெளிவாகத் தெரிந்தது. இது போக்குவரத்திற்கு இடைஞ்சல். மேலும் சைக்கிளில் பள்ளிப் பிள்ளைகள் டியூசன் சென்று வருகிற வேளை. தடுக்கி விழா வாய்ப்பு உண்டு. எடுத்தேன். இரு நிமிட நடையில் அந்த இளநீர் வண்டியை அடைந்தேன். “என்ன சார்..?” வியாபாரி கேட்டான். “உன்கிட்ட


காதலுக்காக

 

 “கல்யாணம்” என்ற வார்த்தையை கேட்டவுடன் விசித்ராவுக்கு, தனது அக்கா காதலித்து ஓடி போக இருந்ததை கண்டறிந்து, வலுகட்டாயமாக அவளை தங்கள் தாய்மாமனுக்கு கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்து, மேலும் திருமணத்தன்று அவள் காதலுருடன் ஓடிப்போக மணமேடையில் தேவையில்லாமல் நிற்கதியாக நின்ற தன் தாய்மாமனின் குடும்பத்திற்கும் தன் குடும்பத்திற்கும் வந்த பிரச்சனையில் சொந்தமே பிளவு பட்டதுதான் ஞாபகம் வந்தது. விசித்ராவுக்கு கல்லூரி படிப்பு முடியபோகும்தருவாயில் அவளது குடும்பம் பொறுப்பாக கல்யாணத்திற்கு தயாராக வேலையில் இறங்கியது.குறிப்பாக அவள் தந்தை சம்பந்தமூர்த்தி


அதிதி

 

 (இதற்கு முந்தைய ‘மனு சாஸ்திரம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). ‘பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம்’ என்று வணிக குலப் பெண்ணான காரைக்கால் அம்மையார் பாடுவதால் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே ‘எண்ணும் எழுத்தும்’ பெண்கள் கற்ற பாடங்கள் என்பதும் தெரிகிறது. பெண்கள் கல்வி மற்றும் தொழில்கள் பற்றி இடம் பெறும் பல பாடல்கள நற்றிணை; இறையனார் சூத்திர உரை; பூ வியாபாரம்; குடும்ப விளக்கு; பஞ்சி நூற்பாள் பருத்திப் பெண்டு; மற்றும் நன்னூல் சூத்திரம்