கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 2, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

கலியுகக் கர்ணன்

 

 தேவர்களும் அசுரர்களும், முனிவர்களும் பெண்ணா சைக்கு ஆளாகி யிருக்கும்போது, கேவலம் நமது பால கோபால் மட்டும் அந்த ஆசையிலிருந்து தப்ப முடியுமா? ஒரு நாள் அவர் வினிமாவுக்குப் போய் விட்டு வந்தார். படம் முடிந்து வெளியே வந்தபோது ஒரு பிச்சைக்காரன் அவரைப் பார்த்துக் கையை நீட்டினான். பாலகோபால் அவனை லட்சி யம் செய்ய வில்லை. வெகு அலட்சியமாகத் தன்னுடைய கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை நோக்கி நடந்தார். அதே சமயத்தில் பெண்கள் வகுப்பிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த சித்ரலேகை


தங்க வயல்

 

 விலை உயர்ந்த ஏர்கண்டிஷன் செய்த அந்தப் பால் வண்ணக்கார், மகன் பறக்கப் போகின்ற அன்று காலையில் வீட்டு முற்றத்தில் வந்து நின்றது. வெளிநாட்டிற்குச் செல்லும் மகனையும் அவன் மனைவியையும் இரண்டு பேரப்பிள்ளைகளையும் விமான நிலையத்தில் ஏற்றிச் செல்வதற்காக! கார்கள் வீட்டுப் படியை ஒட்டி வந்து நிற்கும்படி, வீடு கட்டும்போது அவர் தூர நோக்கோடு அகலமான வாசலும் போட்டு, முற்றத்தில் சிமெண்டுத் தரையும் போட்டிருந்தார். வெளிநாட்டிலிருந்து வரும் மகனுக்கு உறங்குவதற்கு, அவனுக்காகக் கட்டிய அறையைக் குளிர்ச்சி யூட்டி வைத்திருந்தார்.


வெட்கங்கெட்டவன்

 

 ரங்கம் நிம்மதியாய் அழுது கொண்டிருந்தாள். வாசல் கதவு சும்மா ஒருக்களித்திருந்தது. மதிய வேளையின் வெய்யில் மணி நாலு ஆகியும் ஜன்னல் வழியே உள்ளே பாட்டம் போட்டு வெளிச்சம் கண்னை கூசியது கோடை வெய்யில் ஆத்திரத்துடன் அழுது கொண்டிருந்தாள். ஒரு பழைய பாவடை அது முழுவதும் கண்ணீரால் நனைந்து சோர்ந்துவிட்டது. அழுவதற்காகத்தானே தஞ்சாவூருக்கு அம்மா வீட்டுக்கு வந்தாள்? இங்கும் வந்து விட்டான் பின்னாலே அப்போது ரங்கத்துக்கு பதிமூணு வயசு யார் கேட்டார்கள் கல்யாணம் வேணுமென்று அவசர அவாரமாய் கல்யாணம்


குட்டிம்மா

 

 ஆமித் – அன்று வழக்கம் போல் இஷாத் தொழுகை முடிந்ததும் மீண்டும் வந்து அன்றைய ஆங்கிலப் பத்திரிகையில் மூழ்கினார். அலுப்புத் தட்டியது. டீ.வி.யில் உலக சஞ்சாரம் செய்து கொண்டிருந்தார். இரவு பத்து முப்பது. குட்டிம்மா கிளாசில் பால் கொண்டு வந்து நீட்டினாள். பாலை அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்ல ஆயத்தமானார். வெளிவாசல் கேட்டில் சில் சில்லென்று தட்டும் ஓசை பயங்கரமாக இருந்தது. அந்தச் சத்தத்திலே ஒரு வித்தியாசமான முரட்டுத் தன்மையும் தெரிந்தது. இந்த அகால நேரத்தில் இது யார்?


மனதையே கழுவி

 

 சூரியன் சீறிச் சினந்தபடி சிவப்புப் பந்தென எழுந்துவிட்ட ஒரு காலைப் பொழுதில், நான் அந்தப் பிரபல கல்லுாரியின் அதிபர் அறையினுள் (குளிர்ந்த வாடைபோல் – மன்னிக்கவும் – தவறுதான்) நுழைந்தேன். எனக்கும் கொஞ்சம் மதிப்பு இருக்கத் தான் செய்தது. அதிபர் கதிரையைக் காட்டிச் சிரிக்க நானும் பெருமையுடன் அமர்ந்து கொண்டேன். “என்ன விஷயம்?” “இல்லை… ஒரு சின்ன விஷயந்தான் …. மாவிட்டபுரத்திலை இருந்து இடம் பெயர்ந்த ஒரு பிள்ளை ….. சரியான கஷ்டம். நான் ஒரு கவுன்சிலர்


சணப்பன் கோழி

 

 பரமேச்வரன் ஓர் இலட்சியப் பைத்தியம். கலாசாலையை விட்டு வெளியே வரும்பொழுது, தற்காலத்திய புதுமை இளைஞர்களின் வெறி இருந்ததில் ஆச்சரியம் இல்லை. முதல் முதலாகப் பட்டினி கிடந்தாலும் கவர்ன்மெண்டு வேலைக்குப் போகவே கூடாது என்ற சித்தாந்தம். அவன் நிலைமைக்கு வேலை கிடைப்பது ரொம்ப சுலபம். அப்பா பென்ஷன் உத்தியோகஸ்தர் இவன் சித்தாந்தத்தைக் கேட்டதும் இத்தனை நாள் போஷித்த அப்பாவுக்குப் பலத்த சந்தேகம் – பரமேச்வரனுக்கு மூளைக் கோளாறு ஏற்பட்டதோ என்று – உண்டாயிற்று. அதிலே தகப்பனாருக்குக் கொஞ்சம் ஏமாற்றம்.


சண்டைக் குமிழிகள்

 

 இன்னும் குட்டையாகவே இருக்கும் குட்டாம்பட்டியில், கூனிக்குறுகிய ‘வாழாத’ வடக்குத் தெருவில், தங்கம்மா – லிங்கம்மாவின் மகாயுத்தம், இதோ நடந்து கொண்டிருக்கிறது. மருந்துக்குக் கூட ஓடு போட்ட வீடோ அல்லது காரை’ வீடோ காணப்படாத இந்தத் தெருவில், உள்ள ஓலை வீடுகள் காற்றில் ஓலமிட்டு துடி துடித்தன. இந்தச் சந்துப் பகுதியில், இந்த மாதத்தில் தங்கம்மாவுக்கும் லி ங்கம்மாவுக்கும் இடையே நடைபெறும் மூன்றாவது மகாயுத்தமாகும் இது. ரிஷிமூலம், நதிமூலம் பார்க்கக்கூடாது என்ற பழமொழியை நம்புபவர்கள், இவர்களின் போர் முழக்கத்தைப்


வான் சிறப்பு

 

 திருக்குறள் கதைகள் மழையின் சிறப்பைக் கூறுதல் சோழநாட்டில் வாழ்ந்த சிலம்பி என்ற பெண், ”கம்பர் வாயால் புகழப்படவேண்டும்” என்று கம்ப ருக்கு 500 பொன் அளித்து, “தன்னை வாழ்த்தும் படியான ஓர் பாடல் பாடவேண்டும்” என்று கேட்டுக்கொண்டாள். பொன்னைப்பெற்ற கம்பர், “தண்ணீரும் காவிரியே, தார்வேந்தனும் சோழனே – மண்ணாவதும் சோழ மண்டலமே” என்று வாழ்த்தினார். இவ்வாழ்த்தைக் கேட்ட அவள், “என்னை வாழ்த்தும்படியாகத் தங்களை வேண்டிக்கொண்டதற்குத் தாங்கள் தண்ணீரை வாழ்த்துகிறீர்களே” என்றாள். அப்போது கம்பர், “தண்ணீரைமட்டும் வாழ்த்தவில்லை. தண்ணீரைத்


யாரிடம் சொல்வேன்…?

 

 எனக்கு வேடிக்கை பார்ப்பதென்றால் ரொம்ப பிடிக்கும். அதை தவிர வேறு எனக்கு வேலையுமில்லை.. அப்போதெல்லாம் பரபரப்பான காட்சிகள் எதுவும் எனக்கு கிடைக்காது.. மாட்டு வண்டிகள், சைக்கிள்களுக்கு இடையில் வரும் நான்கு மோட்டார் வாகனங்களை அதிசயமாய் பார்ப்பேன். அதை விட அதிசயமாய் தெரியும் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை வரும் டவுன் பஸ்ஸும் அதை பிடிக்க ஓடும் ஆட்களையும் .. இப்பொதெல்லாம் என் கண்களுக்கு ஓய்வே இல்லை இரவும் பகலும் இயங்கி கொண்டிருக்கும் உலகத்தை விட்டு தனியாய்


நீயே உன்னை எண்ணிப்பார்!

 

 மணிமங்கலம் என்னும் சிற்றூரில் மணி வண்ணன் எனும் பெயருடைய குடியானவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் உழைப்பைப் பெரிதென மதிப்பவன்; வீணிற் பொழுது போக்கு வதை விரும்பாதவன். அவனுக்கு மூன்று புதல்வர் இருந்தனர். மூத்த புதல்வனுக்கு மணமாகியிருந்தது. இரண்டாம் மகன் மணப்பருவத்தை அடைந்திருந் தான். மூன்றாம் மகன் படித்துக் கொண்டிருந்தான். மணிவண்ணன் வீட்டில், உழைக்காமல் உண் பவர் அவன் தந்தை ஒருவரே. அவருக்கு வயது எழுபதுக்கு மேலாகிவிட்டது. காசநோய் அவரைப் பீடித்திருந்தது. வேளாவேளைக்கு உண்பதும் உறங்குவதுமாக அவர்