கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 21, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

கொரானா நெகடிவ்

 

 எனக்கு ஒரு விசித்திர நோய் இருக்கு. அது என்னன்னா ரொம்ப பரிச்சயமற்ற ஆனால் எங்கோ பார்த்த நினைவு இருக்குற சில மனிதர்களை சந்திக்கும்போது அவர்கள் ஏற்கனவே இறந்தவர்களாக தோன்றுவது. அது ஏனோ சமீபத்தில் அந்த எண்ணம் அதிகமாகி கொண்டே போகிறது. இதை முதலில் வெளிப்படையாக அருகிருப்பரிடம் நேரடியாக கேட்டு தெரிந்துகொள்வேன். ஆனால் போக போக அது ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. அதனால் இப்போதெல்லாம் நான் கேட்பதில்லை. ஒரு வித சந்தேக உணர்வுடன்தான் பயணிக்கிறேன். இதற்கு முக்கிய காரணமாக


நேரம் இரவு ஒன்று முப்பத்தியாறு

 

 தாஹிர் பாய் என் குழந்தை பருவத்தில் எரிந்த ஒரு அக்காவின் ஆன்மா, அந்த தெருவையே பல வருடங்கள் ஆட்டிப் படைத்தது. ஹரே கிஷோர் பாய், கொஞ்சம் நேரத்தை பாருங்க மணி இரவு ஒன்று முப்பத்தாறு ஆகிறது. உங்களுக்கு ஒன்னு தெரியுமா? சொல்லுங்க தாஹிர் பாய். இப்போ நான் ரூம்ல இருக்கேன், நீங்க கம்பெனில இருக்கீங்க. உங்களை நான் எப்படி தொடர்பு கொள்ள முடியும்? மொபைலுக்கு அழைப்பீங்க தாஹிர் பாய். ஹான் சரியாக சொன்னீங்க கிஷோர் பாய். சரி


இது கடிதமல்ல…

 

 அன்புள்ள வசந்தனுக்கு, இருபது நாட்களாக யோசித்து இறுதியில் முடிவு செய்து இதை எழுதுகிறேன். மூன்று வாரங்களாக உன்னை சந்திப்பதைத் தவிர்த்து உன்னை இனியும் அலைய வைப்பது தகாது என்ற முடிவில்தான் இந்தக் கடிதத்தை… இல்லை.. பிரிவு மடலை உனக்கு எழுதுகிறேன். பிரிவு என்ற சொல்லை வாசிக்கும்போது உனக்குள் எவ்வளவு பெரிய எரிமலை வெடிக்கும் என்பது எனக்கு இப்போதே புரிகிறது. சில விஷயங்கள் கசப்பாக இருந்தாலும் மரிந்து குடிப்பதுபோல விழுங்கி விட வேண்டிய சூழ்நிலை வரும்போது மறுக்க முடியாமல்


அப்பா, நான் உள்ளே வரலாமா…

 

 அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 மஹா தேவ குருக்களும் மரகதமும் ‘பஸ் ஸ்டாண்டு’க்கு வந்து சிதம்பரம் போகும் ‘மினி பஸ்ஸூ’ காக’க் காத்துக் கொண்டு இருந்தார்கள்.”நான் அந்த மாமா கிட்டே‘இந்த சம்மந்தம் சுபமா முடியற வரைக்கும் நாங்க உங்க ஆத்லே கையே நனைக்க ஆசைப் படலே.எங்களே தப்பா எடுத்துக்காதீங்கோ’ ன்னு சொன்னேன்.அந்த மாமாவேப் பாத்தா ரொம்ப நல்லவரா இருந்தார்.எனக்கு எப்படியாவது இந்த சம்மந்தம் அமையணுமேன்னு நினைச்சுத் தான்,நம்ம பெரியவா எல்லாம் பண்ணீ வந்த பழக்க த்தே


யாரைத்தான் நம்புவதோ?

 

 இரண்டு நாட்களாய் ராம்குமாருக்கும் அவன் மனைவிக்கும் சண்டை. மனைவியின் தாய் மாமா இவளுக்கு வரவேண்டிய பங்காக இரண்டு லட்சம் ரூபாயை, கொடுத்திருந்தார். வங்கியில் போட்டிருந்த அந்த பணத்தை எடுத்தே ஆக வேண்டும் என்றும், அதில் அவளுக்கு நகை வாங்க சொல்லி வற்புறுத்தி கொண்டிருக்கிறாள். ராம்குமாருக்கோ வறுமை நிலையில் இருக்கும் தன் குடும்பத்தில் பிளஸ் டூ முடித்துவிட்டு இஞ்சீனியரிங்க் படிப்புக்கு அனுமதி கிடைத்தும் பணம் கட்ட வசதி இல்லாமல் இருப்பவனுக்கு கொடுக்கலாம் என்று கேட்டான். அவள் நினைத்தால் தாரளமாய்


முட்டையிலிருந்து கோழி

 

 வித்வான் சுவாமிநாதன் தன் பூஜையை‌ முடித்துக் கொண்டு பால்கனியில் அமர்ந்தார். கீழே‌ ஏதோ பாட்டுக் குரல் கேட்கவே தோட்டத்தை க் குனிந்து நோக்கினார். தோட்டக்காரன் மணியும் அவன் தங்கை கவிதாவும் ஏதோ பாடிக் கொண்டே புல் களைந்து கொண்டிருந்தனர். அவர்களை மேலே வரும்படி கூப்பிட்டார் சுவாமிநாதன். அவர்கள் இருவரும் உடனே மேலே ஓடி வந்தனர். *நீங்கள் இப்போது என்ன பாட்டு பாடிக் கொண்டிருந்தீர்கள்” என்று கேட்டார். அப்போது டிரைவர் மாணிக்கமும் கூடவே வந்தான். மாணிக்கம் சொன்னான். “இவங்க


தேவதைகளின் நல்கை

 

 அவள் குடித்திருக்கிறாள் என்பதை வண்டிக்குள் ஏறிக்கொண்ட கணத்திலேயே உணர்ந்துகொண்டேன். அவளிலிருந்து Baccardia + Caramel லின் கூட்டுக்கந்தம் விட்டுவிட்டுக் கமழ்ந்தது. குடிக்காதவர்களை மட்டுந்தான் ஏற்றிக்கொள்வது என்கிற கோட்பாட்டை டாக்ஸிக்காரர்கள் வைத்துக்கொண்டால் எம்தொழில்முறையில் அது வேலைக்காகாது. அதுவும் வாரவிடுமுறை/விடுமுறை தினங்களில் வரும் வாடிக்கையாளர்களில் செவ்விகிதத்தினர் குடித்துவிட்டே தம் பயணங்களைத் தொடர்வர். குடித்ததனாலேயே டாக்ஸியை நாடுபவர்களுமுண்டாம். சில உற்பாதங்களைச் சகித்தே தீரவேண்டும். அதொரு கோடைகாலம், அவளுக்கு முப்பது வயதிருக்கும், நல்ல மொழு மொழுவென்று தசைப்பிடிப்பான தேகம். அதை ஒப்புவிக்கும் கட்டையான


ரயில் நிலைய பெஞ்சு

 

 மிகவும் சுறுசுறுப்பாக அந்த ரயில் ஸ்டேஷனில் இரவு நெருங்கும் நேரத்து அந்த பெஞ்சில் அவளும் அவனும் உட்கார்ந்திருந்தார்கள். எதிரே நடமாடும் மக்களின் சுறுசுறுப்பு இவர்களிடம் இல்லை! எதோ ஒரு சலனம்! அவர்களின் இரண்டு “காரியான்கள்” கூட அவர்களின் கை இறுக்கத்தினால் தடுமாறிக் கொண்டிருந்தன ! சலனமும் படபடப்பும் அவனை விட அவளுக்கு நிறைய தெரிந்தது! அவள் செல்போனிலிருந்து “எனக்கு பயமா இருக்கு! மனசு சரியில்லை! தடுமாறுகிறது!” என்று அவனுக்கு அனுப்பினாள்! “பக்கத்தில் இருந்தே மெசேஜ் கொடுக்கிறாயே! என்ன


தம்பியின் திறமை

 

 அண்ணன் தம்பிகள் ஐந்து பேர் தங்கள் தாயோடு ஓர் ஊரிலே வசித்து வந்தார்கள். அவர்களுடைய தந்தை இறந்து போய்ப் பத்தாண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. தாய்தான் அவர்களைக் காப்பாற்றி வளர்த்து இளைஞர்களாகச் செய்தாள். அந்தத் தாய்க்கு எல்லாக் குழந்தைகளிடத்திலும் அன்பு தான். ஆனால் நல்லமுத்து என்னும் கடைசிப் பையனுக்கு அவள் அதிகமான உரிமை கொடுத்திருந்தாள். அவன் செல்லப்பிள்ளை. அதைக் கண்டு மற்ற நால்வருக்கும் அவனிடத்திலே பொறாமை. அவர்கள் எப்பொழுதும் நல்லமுத்துவைப் பழித்துப் பேசுவார்கள். “அம்மா, நீ நல்லமுத்துவைப் பற்றிப் பிரமாதமாக


சங்ககாலப் பெண் புலவர்கள்

 

 (இதற்கு முந்தைய ‘ஈடிணையற்ற பெண்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) சங்க காலத்தில் பல சிறந்த பெண் புலவர்கள் இருந்தனர். உதாரணமாக குறமகள் குறி எயினி; காமக்கணி பசலையார்; ஒவ்வையார்; நல்வெள்ளியார்; நக்கண்ணையார்; மதுரை ஓலைக் கடையத்தார்; நப்பசலையார்; வெள்ளி வீதியார்; வெறிபாடிய காமக்கண்ணியார்; நன்முல்லையார்; ஆதிமந்தியார்; ஊண்பித்தை; ஒக்கூர் மாசாத்தியார்; நன்னாகையார்; நச்செள்ளையார்; பூங்கண் உத்திரையார்; பூதப் பாண்டியன் தேவி; குறமகள் இளவெயினி; ஏணிச்சேரி முடமோசியார்; முடத்தாமக் கண்ணியார்; அங்கவை, சங்கவை (பாரி