கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 18, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

வாழ்க்கை

 

 அம்பாசமுத்திரத்திற்கும் பாபநாசத்திற்கும் இடையிலுள்ள ரஸ்தா எப்பொழுதும் ஜனநடமாட்டத்திற்குப் பெயர் போனதல்ல. ஆனால், சொறி முத்தையன் கோவில் விழாவன்று வேண்டுமானால் வட்டியும் முதலுமாக ஜனங்கள் அந்த வழியில் நடந்து தீர்த்துவிடுவார்கள். சில சமயம் பாபநாசம் நெசவாலை மோட்டார் லாரி காதைப் பிய்க்கும்படியாகப் புழுதியை வாரி இறைத்துக் கொண்டு கோலாகலமான ஓட்டை இரும்புக் கோஷத்துடன் செல்லும். மலை விறகு வண்டிகள் லொடக்லொடக் என்று, அல்லது சக்கரத்தின் பக்கத்தில் வண்டி சரிவில் வேகமாக உருண்டுவிடாதபடி கட்டும் கட்டையை வண்டிக்காரன் அவிழ்க்க மறந்துவிட்டிருந்தால்,


நாயகன்

 

 பக்கத்திலிருந்த வங்கிக்குப் போகலாமென்று கிளம்பினார் ராமதுரை. ஒன்பது மணிக்கே நல்ல வெயில் வந்து விட்டது. குடை எடுத்துக் கொண்டு போவதென்பது அவர் வாழ்க்கையிலேயே செய்திராத ஒரு செயல். அவருக்கு மறதி அதிகம் என்பது இதற்கு ஒரு காரணம் என்றாலும், இதை விட முக்கியமான காரணம், குடையை அவர் நடுத்தர வகுப்பு பாதுகாப்பு உணர்வின் ஓர் அடையாளமாகப் பார்த்ததுதான். பார்வதி, இருந்தபோது, கோபத்துடன் சொல்வாள், ‘ஆமா… நடுத்தர வகுப்பு, ஃபிலிஸ்டின் அது இதுன்னு சொல்லிண்டு நாம என்ன பெரிசா


கடவுளின் உதவிகள்…

 

 ”குருவே எனக்கு நிறைய கஷ்டங்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “கஷ்டங்கள் தீர நீ என்ன செய்கிறாய்?” என்று கேட்டார் குரு. “என்ன செய்வது? கடவுளிடம்தான் வேண்டிக் கொண்டே இருக்கிறேன், ஆனால் அவர்தான் எந்த உதவியும் செய்யவில்லை” என்றான் வந்தவன். இதைக் கேட்டதும் குருவுக்கு அவனின் பிரச்சனை என்னவென்று புரிந்தது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார். ‘ஒரு ஊரில் ஒருவனுக்கு பக்தி அதிகம். எப்பவும் கடவுளை வேண்டிக் கொண்டே இருப்பான்.


தீராப்பகை

 

 அந்த ஆலமரம் கம்பீரமாக தன் பெரிய கிளைகளையும், விழுதுகளையும் பரப்பி, பெருநிழல் தந்து கொண்டிருந்தது.அதன் கீழே பெருங் கூட்டம். அதில் அனலும், புழுதியும் பறந்து கொண்டிருந்தது. கூடவே கூச்சலும், குழப்பமும். நடுநாயகமாக இருந்த தலைவர் யூதநாதருக்கு சம்பிரதாய வணக்கம் போட்டுவிட்டு, பெரியவர் நாக மதோற்கடர் எழுந்து நிற்க முயற்சித்தபோது தன் பெருத்த உடம்பு கோபத்திலும் வயதின் மூப்பிலும் ஆடுவதைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடினார். பல இக்கட்டான சமயங்களில் இவரது யோசனைகள் பலன் தந்திருக்கின்றன என்றாலும் இப்போது இவருக்கு


அம்மா

 

 இன்னும் இரண்டொரு சூரியன் இருந்தால்தான் கட்டுப்படியாகும் என்று பட்டது அவனுக்கு. எலும்பைக் குடையும் நுவரெலியா குளிருக்கு. இந்த ஒரு சூரியன் போதாதுதான். டார்வினின் நண்பரும் விஞ்ஞானியும் தத்துவஞானியுமான ஏர்னஸ்ட் ஹெகல் என்பார், உளசு;சோர்வோ உடற்சோர்வோ உள்ளவர்களுக்கு இது ஒரு மெக்கா என்று வர்ணித்த அதே நுவரெலியாதான். இவனுக்கு இரண்டு சோர்வுமே சேர்ந்தாற்போல் வந்திருக்கின்றன. நிற்க முடியவில்லை@ வெடவெடக்கிறது. நடக்க முடியவில்லை@ நடுங்குகிறது. உட்கார முடியவில்லை@ ஊசியாய் குத்துகிறது!…… இப்படியும் ஒரு குளிரா! இப்படியும் ஒரு ஊரா! காற்றின்


பழி கரப்பு அங்கதம்

 

 முல்லைப் புங்கனூர் சங்கரலிங்க அண்ணாவி இசைப் பரம்பரை யில் வந்தவர் வாகைக்குளம் முத்த நல்லாப்பிள்ளை எனும் மகா வித்வான். திருவிதாங்கூர் சித்திரைத் திருநாள் பாலராம வர்மா மகா ராஜா அரசவையில் பாடி பட்டு சால்வையும் நவரத்தின கண்டி ஆரமும் சன்மானம் பெற்றவர். பஞ்சலிங்கமங்கலம் பாவநாசம் அவரது மூத்த புதல்வர். பாலபாடம் தகப்பனாரிடம், பலமான அஸ்திவாரம். மீதி சிட்சை திருநாவாய் பரம்பரையில் வந்த சிம்மம் சிவாநந்தம் பிள்ளை யிடம். விசேடமான சில கீர்த்தனைகளை காளிகேச நல்லூர் கந்தையா பிள்ளை


எங்கள் நீதி

 

 துகளான வெள்ளி நச்சத்திரங்கள் தவறி விழுந்து பூமியெங்கும் மினுங்குகின்ற கடும் குளிர் காலம். வெப்பம் ஆவி போல வெளியேறும் துவாரங்களை மனிதனில் கண்டு பிடித்து வெப்பத்தை அட்டையாக உறிஞ்சும் குளிரின் கொடுமை, அட்டையான குளிரை எதிர்த்துப் பனியுலகில் மனித வாழ்வைக் காப்பாற்ற அவன் கட்டிய வீடுகள் அவனுக்காக விசுவாசமாகப் போராடும். நந்தினி தன்னை நன்கு அலங்கரித்தாள். நந்தினியின் அம்மாவும், அப்பாவும் நன்றாகத் தங்களை அலங்கரித்தார்கள். அவர்கள் மருமகனை முதன் முதலாகப் பார்க்கப் போகும் சந்தோசத்தில் இருப்புக் கொள்ளாது


வளையல் துண்டு

 

 தொட்டதெல்லாம் தங்கமாகும் என்கிறார்களே, அந்த ஜாதி பரமசிவம் பிள்ளை. வாழ்க்கையின் மேடு பள்ளங்கள் யாவும் அவருக்குப் பொன் விளையும் பூமி என்றால் பொய்யல்ல. அவர் மன்னிக்க முடியாத தவறுகள் செய்த இடங்களில் கூட அவருடைய குற்றம் பாவிக்கப்படாமல் அவர் தப்பித்துக்கொள்கிறார். நாங்களிருவரும் போன பத்து வருஷங்களாக நண்பர்கள். இருவர் குடும்பத்தினரும் ரொம்ப அன்னியோன்னியமாக அளவளாவிக் குலவுகிறோம். அதனால் எனக்கு அவருடைய வாழ்க்கையைப் பற்றி ரொம்ப அந்தரங்கமாக அறியச் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. முதல் முதலாக அவருடன் எனக்கு அறிமுகமேற்பட்டு


வெறும்முள்

 

 சமேரியாவில் கோடைகாலத்தில் மது அருந்தாதவர்களை சோம்பேறிகள் என்கிறார்கள். இந்த பித்துப்பிடிக்கவைக்கும் வெயிலையும் அலையலையாகக் கிளம்பும் தூசுப்படலத்தையும் எதிர்கொள்ள ஒரேவழி குளிர்ந்து புளித்து நுரைத்துக் குமட்டச்செய்யும் யாயினை மண்குவளை நிறைய வாங்கி குடலை நிறைத்துக்கொள்வதுதான். அந்த கடும்துவர்ப்பு நாக்கில் குழைகையில் அபிசீனியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட உலர்ந்த மிளகாயை நரநரவென்று கடித்துக்கொண்டு கண்ணீர் மல்கலாம். மெல்ல மெல்ல நம் உடல் குளிர ஆரம்பிக்கிறது. வெப்பத்தில் உலர்ந்து பறந்த எண்ணங்கள் ஈரமாகிப் படிய ஆரம்பிக்கின்றன. அதன்பின் நம்மால் வேலைசெய்ய முடியும். சிந்திக்க முடியும்.


சரோஜாவின் சவுரி

 

 கும்பகோணத்தில் நான் ரெயிலைப் பிடிக்கும் போது ரெயில் புறப்பட மூன்றே நிமிஷங்கள்தான் இருந்தன. அவசர அவசரமாக டிக்கட் வாங்கிக்கொண்டு இரண்டாம் வகுப்புப் பெட்டியைத் தேடி நடந்தேன். முதலில் கண்ணில் பட்ட இரண்டாம் வகுப்புப் பெட்டியில் இரண்டே இரண்டு பெண்கள் மட்டும் உட்கார்ந்திருந்தார்கள். அடுத்த பெட்டியில் பார்த்தேன். ஸீட்டுக்கு ஐந்து பேர் உட்கார்ந் திருந்தார்கள். வேறு துணையில்லாத பெண்களுடன் பிரயாணம் செய்ய என்னைப்போல் சங்கோஜப்பட்டவர்கள் தான் அன்று ரெயிலேறி இருந்தார்கள் போலும்! ரெயில்வே கார்டை, “இது பெண்கள் வண்டியில்லையே!”