Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2021

145 கதைகள் கிடைத்துள்ளன.

மருமகள்

 

 கண் சிகிச்சை முகாமுக்கான ஜீப், கிழவர் – கிழவியர் சகிதம், பொன்னம்மா பாட்டியின் வீட்டு முன்னால் வந்து நின்றது. பாட்டியின் மகன் முனுசாமியிடம், கிராம சேவக்கும் சேவிகையும் விளக்கமாக எடுத்துரைத்து, பொன்னம்மாவை ஜீப்பில் ஏற்றினார்கள். மருமகள்காரி வாசல்வரை வந்தாள். மாமியாரை ஜீப்பில் பார்த்ததும், தனக்கும் வயதாகி, கண்ணும் கெட்டிருந்தால், இந்த ஜீப்பில் எறியிருக்கலாமே என்று ஏங்கியவள் மாதிரி, பெருமூச்சு விட்டாள். ஏதோ ஒரு வழியாக, கண் சிகிச்சை முகாம் துவங்கியது. அந்த டிவிஷனைச் சேர்ந்த ஆறு பஞ்சாயத்து


முகமறியா முகம்

 

 ஊரு ஒலகத்தில் காதலிப்பதுபோல், தானும் காதலிக்காமல் போனதுக்கு ராசகுமாரி, வட்டியும், முதலுமாய் வருத்தப்பட்டாள். அந்த அரங்கு வீட்டின் கடைசி அறைக்குள் வாசல்படியில் உட்கார்ந்து கொல்லைப்புறத்தைப் பார்த்தபடியே குழைந்தாள். இரண்டு சிட்டுக்குருவிகள், அவள் முன்னால் சல்லாபம் செய்து கொண்டிருந்தன. முன்பெல்லாம் அவற்றை ரசித்துப் பார்க்கும் அவள், இப்போது, கைகளை ஆட்டி அவற்றை கலைக்கப் போனாள். பிறகு அவையாவது நல்ல ஜோடியாகி இருக்கிறதே என்று நினைத்தவள் போல், கம்மாயிருந்தாள். அப்படியும் இருக்க முடியவில்லை. பிடரிமுடியை மேற்பக்கமும், முன்முடியை பின்பக்கமும் இழுத்து


ஈச்சம்பாய்

 

 கதை கேட்க: https://www.youtube.com/watch?v=ShgMKF3lOic காட்டிற்குக் காடாகவும், மலைக்கு மலையாகவும் தோன்றிய காட்டு மலை அல்லது மலைக்காடு. கர்நாடக மாநிலத்தில் மலெநாடு என்று அழைக்கப்படும் வளம் கொழிக்கும் தபோவனம் போன்ற நிசப்தப் பகுதி. நாட்டியப் பெண்கள்போல், பாக்கு மரங்களும், நட்டுவாங்கனார்போல் தென்னை மரங்களும் இடைவெளி கொடுக்காமல் இணைந்து நிற்க-முக்காடு போட்ட பெண்கள்போல், தென்னை ஒலைகளால் மூடப்பட்ட தென்னங்கன்றுகள், தாவர மான்போல் தாளலயத்தோடு நிற்க, இயற்கைச் சிற்பி, தன் மேலான படைப்பாற்றலில் பூரித்துப் போனது போன்ற விதவிதமான மரங்களாலும் செடிகளாலும்


உயிர் ஊஞ்சல்

 

 ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பாகும் பழமொழியை குதிரை தேய்ந்து கழுதையாகும் என்று புதுமொழியாய் சொல்லலாம்போல், கருப்புக் கண்ணாடிப் பாளமாய் ஒளிர்ந்த அந்த தேசிய நெடுஞ்சாலையில் குதிரைப் பாய்ச்சலாய் ஒடிவந்த அந்த வேன், அந்தச்சாலையில் கிளை பிரிந்த கப்பிச் சாலையில் நொண்டியடித்தது. உள்ளுக்குள் கமார் இருபது பேர் இருக்கலாம். அத்தனை பேர் கால்களிலும், கைகளிலும் உழைப்பின் முத்திரைகளான கன்னங்கரேல் காய்ப்புகள்; ஆனாலும் சிறிது வெள்ளையும், சொள்ளையுமாய்தான் காணப்பட்டார்கள். பாம்படம் போட்ட கிழவிகள் இரண்டு பேர். கம்மல் வைத்த நடுத்தரப் பெண்


காலுக்குச் செருப்பாய்…

 

 “ஒங்க காலுக்குச் செருப்பா கிடந்த என் பிள்ளாண்டான இப்படி வீசிட்டியேப்பா. நாய்க்கு எலும்புத் துண்ட வீசற மாதிரி நா பெத்த மவன போலிசில வீசிட்டியே. ஒன்ன விட்டா அவனுக்கு ஆருப்பா” மாருதியின் நவீன அவதாரமான அந்தக் காரை பளபளக்க வைத்துவிட்டு கீழே எறியப்பட்ட கந்தல் துணிபோல் கீழே கிடந்த பொன்னம்மா எழுந்தாள். சற்றே உடம்பை நகர்த்தியவள் சுந்தரத்தைப் பார்த்து விட்டாள். அந்த அழுக்குத்துணி காற்றால் தூக்கப்பட்டு ஒரு கம்பு முனையில் விழுந்தால் எப்படித் தோன்றுமோ அப்படிப்பட்ட தோற்றத்தோடு


கட்டக் கூடாத கடிகாரம்

 

 மீனாட்சி, வீட்டுக்கு வெளியே, காலிங் பெல்லை அழுத்தி அழுத்திப் பார்த்து அலுத்து, மின்சாரக் கோளாறாக இருக்கலாம் என்று நினைத்து, கதவைத் தாம் துரம் என்று தட்டினாள். அது வாசலுக்கு மூடியாகவே இருப்பதைப் பார்த்துவிட்டு, ஒருவேளை உள்ளே மனிதக் கோளாறோ என்று சந்தேகப்பட்டு, கதவில் பொருந்தியுள்ள லென்ஸ் மாதிரியான வட்டக் கண்ணாடி வழியாகப் பார்த்துவிட்டு, பின்னர் காலிங் பெல்லையும், கதவையும் அழுத்திப் பிடித்தும், அழுத்தமாய் அடித்தும் அல்லாடிக் கொண்டிருந்தபோது, லட்சுமி மாமி, சத்தம் சங்கமிக்காத குளியலறையில், கணவரின் ஆடைகளையும்


ஈரத்துணி

 

 அன்று அலுவலகப் பவுர்ணமி நாள். ஆனாலும் – பட்டப் பகலிலேயே உதித்த இந்தப் பவுர்ணமி, அந்த அலுவலகவாசிகளில் சிலருக்கு, வளர்பிறைகளின் பரிபூரணம். பலருக்கோ தேய்பிறைகளின் துவக்கம். சுருக்கமாகச் சொல்லப்போனால், சம்பள நாள். துக்கமாய், துக்கிரியாய், விடை தெரியாப் புதிராய், விரக்தியாய், பற்றற்ற யோகியாய், மீனா போன்ற ஒரு சிலருக்கு மகிழ்ச்சியாய், பல்வேறு மனோ வடிவங்களைக் காட்டும் மாதக் கடைசி உழைப்பு நாள். அலுவலகப் பொருளாளன் – அதாவது கேஷியர் எனப்படும் காசாளர், தேசிய வங்கியில் இருந்து, கொண்டு


ஒரு சபதத்தின் மறுபக்கம்

 

 அந்த மூன்று கட்டு, பழம்பெரும் வீட்டில் நவீனமான மேக்கப் போடப்பட்ட முதற்கட்டின் தெருப்படிகளில் கால் மிதிக்க, தயங்கி நின்றான் மாரிமுத்து. அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்தான். அவன் பின்னால் வந்த சொந்த நாய் கூட அவனை ஒரு மாதிரி பார்ப்பதுபோல் இருந்தது. உடனே அவன் கீழே குனிந்து கல்லை எடுப்ப்துபோல் பாசாங்கு செய்தபோது, அவன்மீது நம்பிக்க்ை வைத்ததுபோல், அது வாலாட்டி நின்றது. உடனே இவன் கல்லுக்குப் பதிலாக ஒரு மண்கட்டியைத் தூக்கி எறிந்தபோது அது செல்லக் கோபத்தோடு பின்வாங்கியது.


பெரியம்மா மகன்

 

 அந்தப் பூங்காவில், ஆணும் பெண்ணுமாய் கலந்து நின்ற இளைஞர் கூட்டத்தை ‘ஜிப்சி சிம்பா, கலப்படமாக்க ஆயத்தமானபோது – குமுதாவும் இளங்கோவும் இணை சேர்ந்து அந்தக் கூட்டத்தை நோக்கி நடந்தார்கள். உள்ளடக்கம் எப்படியோ அவர்களின் உருவப் பொருத்தம் பிரமாதம். அவனும் இவளும் ஒரே நிறம், சிவப்புக்கும் கறுப்புக்கும் இடைப்பட்ட மாநிறம். அவனது உருண்டு திரண்ட தேக்குமர உடம்பை உரசியபடியே அவளின் நளினப்பட்ட மேனி வெற்றிலைக் கொடியாய் நெளிந்தது. அந்தக் கூட்டத்தை நோக்கி நடந்தபடியே, குமுதா இளங்கோவின் கையைப் பிடித்துக்


காதல் குருவிகளின் பார்வையிலே…

 

 கோடைக் காலம் கொடுத்துவிட்டுப் போன கொடைக் காலமான வசந்த காலம். சென்ற கோடையின் கதகதப்பையும், வரப் போகிற குளிர் காலத்தின் குளிர்மையையும் உள்ளடக்கிய பருவ காலம், நிலத்திற்கு நரைமுடியாய்ப் பட்டுக்கிடந்த புற்கள், பகமை தட்டித் தழைத்த நேரம். இலையுதிர்ந்த மரங்களில் இலை தழைகள் துளிர் விட்ட சமயம். கிளைகளே கரங்களாய், முட்களே நகங்களாய்க் கொண்ட இடைமேட்டின் உடைமரங்களில் உட்கார்ந்திருந்த துரக்கணாங் குருவிகள் ஆணும் பெண்ணுமாய் அமர்ந்திருந்தன. தொலைவில் உள்ள காடுகளில் கோடைக்குப் பதுங்கிவிட்டு நேற்றுதான் அவை வந்திருக்க