கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2021

145 கதைகள் கிடைத்துள்ளன.

இழப்பு

 

 எத்தனை ஆண்டுகள் ஆனாலென்ன… அதற்கான சொந்தத்தை மனம் மறக்குமா என்ன…? அந்த மேளத்தை – தொல் தமிழர்களின் அந்த தோல் கருவியை, மிருதுவாயிருந்து இப்போது கொஞ்சமாக முரடேறிப்போயிருந்த அதன் மேற்பாகத்தைத் தடவிக் கொடுக்கும்போது பழைய ஞாபகங்கள் மனதுக்குள் ஓடி வந்து சம்மணம் இட்டுக் கொண்டன. ‘இவ்வளவு நாளா உபயோகிக்காம கெடந்தாலும் கொஞ்ச நாழி அனல்ல சூடு காட்டினா டண்டணக்கு…டண்டணக்குன்னு பக்கத்து தோட்டத்துக்கும் கேக்கற மாதிரி தயாராயிடுமில்ல..!’ அம்மாசி காலங்காலமாய்ப் பதித்துப் பதுகாத்து வைத்திருந்த இசை காதில் ஒலிக்க


சுத்தம்

 

 ரதி..என்று கதவை தட்டினான் ஆனந்தன்,வேகமாகப்போய் கதவை திறந்தாள் ரதி,உள்ளே நுழையும் போதே,அருணா வெட்டிப் போட்ட கலர் பேப்பர்கள் பரவலாக கிடப்பதை கவனித்த ஆனந்தன்,ஏன் வீடு இவ்வளவு குப்பையாக இருக்கிறது?காலையிலிருந்து என்ன செய்துக்கொண்டிருந்தாய்?என்ற கேள்வியுடன் உள்ளே நுழைந்தான் அவன்.மகள் அருணா,அப்பாவை கண்ட ஆனந்தத்தில் வேகமாக ஓடி வந்தாள்,அவளை தடுத்து நிறுத்தினான் ஆனந்தன்,உடையெல்லாம் ஒரே அழுக்காக இருக்கிறது,பிறகு வா,என்று அதட்டலாக கூறியதும்,வாடிய முகத்துடன் அருணா ஒதுங்கிக்கொண்டாள்.இது வழமையாக ஆனந்தன்,மகளிடம் கூறும் வார்த்தைகள் தான்,ரதிக்கு இது சுத்தமாக பிடிப்பது இல்லை,இப்படி சுத்தம்


கறுப்பு மையும், விராலு மீனும்

 

 புரண்டு புரண்டு படுத்தும் வெகுநேரமாக உறக்கம் வரவில்லை. பேனின் ரெகுலேட்டரை பார்த்தேன். ஐந்தில் தான் இருந்தது. அதற்கு மேலும் வேகத்தைக் கூட்ட அதில் வழியில்லை. மூச்சு திணறக் கூடிய அளவிற்கு வீட்டிற்குள் ஒரே புழுக்கம். அந்த வெப்பத்திலும், புழுக்கத்திலும் கூட என்னுடைய இரண்டு வாண்டுகளும் விழித்துக்கொண்டிருப்பதைப் போல, அரைக் கண்களைத் திறந்தவாறு, நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். காலையிலிருந்து விளையாடிய விளையாட்டு அப்படி. அதிலும் அந்த சின்ன வாண்டு ஒரு நிமிடம் கூட ஓரிடத்தில் உட்காராமல் வீட்டிற்குள்ளேயே


என் ஒன்றுவிட்ட அக்காள்

 

 பாகம் 1 என் பெரியப்பா பெண் விசாலி என் தந்தை சாயலாகவே இருந்ததைப்பற்றி நான் அதிகம் யோசித்ததில்லை – பாமா அதைக் கிளறியவரை. அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா ஆகியவர்களால்தான் ஒருவரின் முகச்சாடை வருகிறது என்று படித்திருக்கிறேன். சித்தப்பா? அமெரிக்காவில், ஒரு வெள்ளைக்காரத் தம்பதிகளுக்கு கறுப்பாக பெண்குழந்தை பிறந்ததாமே! ஆறு தலைமுறைகள் கழிந்த பின்னரும் அப்படி நடக்க வாய்ப்பிருக்குமாம். அதுமாதிரி இருக்கக்கூடாதா, என்ன! பாமாவும் என் பெரியம்மா பெண்தான். ஊர்வம்பு அவளுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. ஆனால், என்றாவது


அப்பாவின் வயல்

 

 அப்பா கொஞ்ச நாட்களாக சாப்பாடே சாப்பிடுவதில்லை, மனைவி ஆரம்பத்தில் சொல்லும்போது அசட்டையாக இருந்து விட்டேன். பின்னர் நானும் தொடர்ந்து கவனித்தேன். தொடர்ந்து ஒரு வாரமாக அரிசி சாப்பாட்டை அப்படியே ஒதுக்கி வைத்து விடுகிறார். ஏன் சாப்பிட மாட்டேனெங்கிறீர்கள் என்று கேட்டால் ப்ச்..ப்ச். என்று சூள் கொட்டுகிறார். இவருக்கு என் மேல் வருத்தம் இருக்கலாம், என்ன செய்வது? வயது எண்பதை தாண்டி தொன்னூறை எட்டி பார்க்க போகிறார். போன வருடம் வரை விவசாயம் பார்த்து கொண்டிருந்தவர்தான். பொள்ளாச்சிக்கு அருகில்


நெல்லுக்கு இறைத்த நீர்..!!!

 

 சேலம் பாரத ரத்னா MGR பஸ் நிலையத்தை அடையும் பஸ்கள் எல்லாமே மந்திரித்து விட்ட கோழி மாதிரி நேராக கற்பகம் மெஸ்ஸின் முன்னால் வந்து நின்றுவிடும். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு செல்லும் பெரும்பாலான பஸ்கள் சேலம் பஸ் நிறுத்ததைத் தாண்டி செல்லாமல் இருக்க முடியாது. காலைச் சிற்றுண்டியாகட்டும். பகல் உணவாகட்டும், இல்லை இரவு டிபனாகட்டும், கற்பகம் மெஸ்ஸில் தான் சாப்பிடுவது என்றே டிரைவர்கள் தீர்மானம் பண்ணி விடுவார்கள். முதலில் இறங்கத் தயங்கிய பயணிகள் கூட கற்பகம் மெஸ்ஸின்


உயில்

 

 “டாக்டர், எனக்கு மண்டையில் அடிக்கடி ஏதோ பிராண்டுகிறது போல இருக்கிறது. பெரிய டாக்டர்களை பார்த்து விட்டேன். என் மண்டையில் கட்டி இருக்கிறதாம். அறுவை சிகிச்சை செய்து தான் எடுக்க வேண்டுமாம்” நீல கண்டன் , தன் குடும்ப வைத்தியர் மேகநாதனிடம் வருத்தமாக சொன்னார். நீல கண்டன் பெரிய பணக்காரர். டாக்டர் மேகநாதன் சொன்னார் “ ஆமாம் . அது தவிர உங்களுக்கு ரத்த அழுத்த நோயும் இருக்கிறது. அதற்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் .அதையும் சீக்கிரமே


தண்டனை…!

 

 அழகாக வளைந்து நெளிந்து செல்லும் கொடைக்கானல் செல்லும் மலைகளின் சாலை. வழியில் காரை ஓரம் கட்டி நிறுத்தி இறங்கிய ரகுராமன் தன்னோடு வந்திருக்கும் மனைவி ராணியை ‘ வா ‘ வென்று அழைக்காமல் சாலையோர தடுப்புச் சுவரில் ஏறினான். எதிரே… பச்சைப் பசேல் காடு. குனிந்து பார்த்தால் மரம், செடி, கொடிகள், பாறைகள் அடங்கிய கிடுகிடு பள்ளம். இதமான குளிர் காற்று. எல்லாம் இயற்கையின் வரம்.! கைகள் கட்டி நின்றான். அவனைத் தொடர்ந்து…இவளும் இறங்கி அவன் அருகில்


திருப்பங்கள்

 

 வெளியே சைக்கிள் மணி ஒலித்தது. சற்றுநேரத் தில் வீட்டுக்காரி அவன் பெயருக்கு வந்திருந்த தந்தி யொன்றைக் கொண்டுவந்து நீட்டினாள். யாழ்ப்பாணத் தில் காலையில் அடித்த தந்தி இரவு நேரம் கடந்த பின்னர் தான் கிடைத்திருக்கிறது. படபடப்போடு பிரித்தான்; ‘Your father expired funeral tomorrow.’ — (உனது தகப்பனார் காலமாகிவிட்டார், ஈமைக்கிரியை கள் நாளையதினம்) சுவர்ப் பல்லியொன்று அடித்து வைத்துச் சொல்லியது. ரவீந்திரன் அதிர்ந்து போனான். ‘ஐயா’ என்று ஏக்கப் பெருமூச்சு வெளிப்பட்டது. கால்கள் நடுக்க மெடுத்தன.


காத்திருக்கும் தூக்குமேடை

 

 முட்டாள்தனமாக காதலித்து, அந்தக் காதலனுடன் சேர்ந்து தன் குடும்பத்தில் ஒரே இரவில் ஏழு கொலைகளைச் செய்துவிட்டு, தற்போது காதலனுடன் தூக்குக் கயிறுக்காக காத்திருக்கும் ஒரு பெண்ணின் உண்மைக் கதை இது… சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக தூக்கில் இடப்படப் போகும் பெண்மணி என்பதால் பரபரப்புடன் நாடே உற்று நோக்குகிறது. ஏற்கனவே இருந்த பெண்களுக்கான பிரத்தியேக தூக்குமேடை மதுரா நகரில் புதுப்பிக்கப்பட்டு விட்டது. தூக்கை நிறைவேற்றப் போகும் பவன் குமார் என்பவன் தற்போது அரசின் இறுதி உத்திரவிற்காகக் காத்திருக்கிறான்.