கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 28, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

அமானுஷ்ய மாற்றம்

 

 சுகந்தியின் தங்கைக்கு திருமணம். ஒரு வாரத்திற்கு முன்பே வருமாறு அவள் அம்மா கூறிவிட்டாள். சுகந்தி தன் இரு பெண் குழந்தைகளையும் கிளப்பிக் கொண்டு ஊருக்கு தயாரானாள். தயாளன் தனது காரில் அவர்களை ஏற்றி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வழியனுப்பி வைத்தான். அவர்கள் ரயில் ஏறியதும் மிக பாசமாய் “மிஸ் யூ சுகந்தி” ஒரு வாரம் எப்படி இருக்க போறேனோ என்று செவலியர் சிவாஜி கணேசன் அளவிற்கு நடித்தான். ரயில் கிளம்பிய அடுத்த நொடி “ஹய்யா… என் பொண்டாட்டி


மனிதனைத் தேடி…

 

 மான்குட்டி போல் அவள் துள்ளித்துள்ளி ஓடி வந்து கொண்டி ருந்தாள். அவளுக்கு ஆகக் கூடினால் ஆறு வயதுதான் இருக்கும். அவள் பின்னால் அவளை எட்டிப் பிடிப்பது போல, ஆனால் அவளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாததால் சற்றுப் பின் தங்கியவனாக, அவளை விடஇரண்டு வயது சிறியவனாக அவளது தம்பி ஓடி வந்து கொண்டிருந்தான். அவள் வாய் ஏதோ ஒரு பாடலை மழலைக் குரலில் மெல்ல மிழற்றிக் கொண்டிருந்தது. அதற்கிசைவாக அவளது தம்பியும் ராகமிழுத்தபடி ஓடி வந்து கொண்டிருந்தான்.


தொண்டன்

 

 சார்… ஃபோன் வந்தது. அங்கேயிருந்து பெரியவரோட பிஏ பேசினாரு. பெரியவருக்கு காய்ச்சலாக இருக்கிறதாம். கொரோனார டெஸ்ட் எடுத்திருக்கிறார்களாம். ஒருவேளை ரிசல்ட் பாஸிட்டிவ் என்றால் இங்கே அட்மிஷன் போடணுமாம். ‘அன்பான’ வேண்டுகோளாம். உங்களுக்குத் தகவல் சொல்லச் சொன்னாங்க. சரிய்யா. கொடுத்துத் தொலைச்சிடலாம். அவங்களைப் பகைச்சிக்கிட்டு வேற என்ன நம்மால செய்ய முடியும்? ஆமா கட்சிக்கார விஐபி எத்தினி பேரு இப்ப நம்ம கிட்ட டிரீட்மெண்டில் இருக்காங்க? அதுவா சார், இருபது முப்பது பேரு இருப்பாங்க. அதில் ஒரு நாலைஞ்சு


சந்தேகம்

 

 அதிரா மேசை மீது கிடந்த புத்தகத்தை கையில் எடுத்தாள்,வாசிக்க மனம் வரவில்லை,மூடி வைத்துவிட்டுப் மணியைப் பார்த்தாள்,பத்து என்று காட்டியது,இன்னும் என்ன செய்கிறான் கௌசிக்,கம்பனி நடத்துவதும் போதும்,என்னைப் படுத்தும் பாடும் போதும்,போன் எடுத்தாலும் லைன் கிடைப்பது இல்லை,அப்படியே எடுத்தாலும் இம்போட்டன் மீட்டிங் ம்… சொல்லு எம்டி மாதிரியே பேசுவான், அதனால் அவள் போன் எடுப்பதுவும் குறைவு.கார் ஹோன் சத்தம் கேட்டது,கதவை திறந்தாள் அதிரா,கௌசிக் காரை நிறுத்திவிட்டு வந்தான்,முகத்தில் எந்த களைப்பும் இல்லை,அவனின் உடை, நடை பெரிய இடத்துப் பிள்ளை


பாத்திரம்

 

 கோபுரகோவில்மணி ஓசையில், கடவுளை வழிபாட்டுக்கு தயார் செய்துவிட்ட மனிதனின் கைஅசைவு அடிநாதமிட்டது. அந்த பணக்கார கடவுளின் பாதுகாப்பிற்கு, கோவிலை சுற்றிலும் அத்தனை காவலர்கள் பிச்சைகாரர்களாக. ஆனாலென்ன கோயில்வாசலிலே, பெரிய மனதுடன் அனைத்து திருடர்களிடமும் பாரபட்சம் பார்க்காமல் லஞ்சம் பெற்று அனைவரையும் உள்ளே அனுமதித்தனர் அந்த காவலர்கள். மூத்த பிச்சைகாரர் ஒருவர் தனது டிபன் பார்சலை நிதானமாக பிரிக்கிறார், அப்போது “அய்யா…!” என்ற குரலுடன், பச்சிலங்குழந்தையை மார்பில் சுமந்தபடி அரைகுறையாக ஒரு கை ஏந்தினாள், அந்த வாலிப பெண்


நானும் துரதிர்ஷ்டமும்

 

 பலருக்கு வாழ்வில் அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் மேல் ஒரு நம்பிக்கை இருப்பதில்லை. ஆனால் என்மேல் துரதிர்ஷ்டத்திற்கு உள்ள அலாதி பிரியம் குறித்தே இந்த உண்மை கதையை தொடர்கிறேன். எனக்கு ஏறக்குறைய ஒரு பத்து வயது இருக்கும்பொழுது ஒரு மாலைப்பொழுதில் என் வீட்டு வாசலில் தெரு மங்கையர் கூடி புறணி பேசுகின்ற நல்வேலையில் என் கவனம் கையில் இருந்த கவண்வில் மீதும் குறி எதிர்ப்புறம் இருந்த மண்ணெண்ணெய் கடையின் ட்யூப் லைட் மீதும் இருந்தது. என் நோக்கம் அதை உடைப்பது


ரெளத்திரம் பழகு!

 

 மருத்துவ மனையில் தேவி கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது. தூக்கமுமில்லாமல் விழிப்புமில்லாமல் ஒரு நிர்மலமான புன்னகையில் படுத்திருந்தாள். தீபக் மருத்துவ மனைக்குள் வந்த போது, “டாக்டர். உங்களைப்பார்க்க வேண்டுமெனக் கூப்பிடுகிறார்” என்றாள் வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த வெண்ணாடை பெண்மணி. “வாருங்கள் தீபக். எப்படியிருக்கிறீர்கள்” என்றார் டாக்டர் அறை உள்ளே நுழைந்த தீபக்கிடம். “காலை வணக்கம் டாக்டர். நலமாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” என்றான் “மகிழ்ச்சி. தேவி ஓரளவு தேறி வருகிறாள். அவளை நாம் ஐ.சி.யு -விலிருந்து சாதாரண


பாரதி வாடை..!

 

 காலையில் கண்களைத் துடைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய தண்டபாணி மதியம்…. முகம் சோர்ந்து, உடல் தளர்ந்து வந்து நாற்காலியில் தொய்வுடன் அமர்ந்து வியர்வையைத் துடைத்தார். கணவனின் வாட்ட முகத்தைப் பார்த்ததுமே பங்கஜத்திற்குத் திக்கென்றது. “என்னங்க ஆச்சு… .?” பயம், படபடப்பாய்க் கேட்டாள். நிமிர்ந்து பரிதாபமாக மனைவியைப் பார்த்தவர்… “அதிகம் எதிர்பார்க்கிறாங்கம்மா…” மெல்ல சொன்னார். “என்ன எதிர்பார்க்கிறாங்க…?” “நூறு பவுன், இருபத்து அஞ்சு லட்சத்துல ஒரு இன்னோவா கார். அப்புறம் சீர்வரிசை அது இதுன்னு படாடோபம்…”அதற்கு மேல்


பொழுதுபட்டால் கிட்டாது

 

 ஆலயமணி ஒலித்தது, சுவாமி வெளிக்கிட நேரமாகிவிட்டது. கமலம் தனது நடையை விரைவுபடுத்தினாள். நாலு வயது கூட நிரம்பாத மூத்த மகளைக் கையில் பிடித்துக் கொண்டு வந்தாள். இரண்டே வயது நிரம்பிய இளைய மகனைத் தூக்கிக் கொண்டு நடப்பது சற்றுச் சுமையாகத்தான் இருந்தது. “கெதியிலை நட தங்கச்சி… சாமி வெளிக்கிட நேரமாச்சுது… மணி கேக்குது.” என மகளையும் விரைவு படுத்தினாள். அம்மாவின் பேச்சு பிள்ளையின் காதில்விழவி ல்லை. பாதையோரங்களில் இருந்த விளையாட்டுச் சாமான் களையும், தின்பண்டங்களையும் விற்பனை செய்பவர்களை


கோபம்

 

 மஹாகவி பாரதியார் கூட ‘ரெளத்திரம் பழகு’ என்று சொன்னார். ஆனால் அவர் சொன்னது அமைதியான முறையிலான கோபத்தின் வெளிப்பாடு. கண்டிப்பாக சத்தம்போட்டு நம்மைக் கத்தச் சொல்லவில்லை. நாம் ஏன் கோபத்தில் சத்தம் போட்டுக் கத்தணும்? கோபம் வந்தா நாம் என்ன செய்வோம்? யார் மேல நமக்கு கோபமோ, அவங்ககிட்ட சத்தம்போட்டு சண்டை பிடிப்போம். இல்லையென்றால் சில சமயங்களில் பேசாம அப்படியே அமைதியாகி விடுவோம். ஆனா, எப்போதாவது சற்று யோசித்திருக்கோமா? யார் மேல நமக்கு கோபம் வந்தாலும், அவர்கள்