கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 26, 2021

8 கதைகள் கிடைத்துள்ளன.

சுழல் விளக்கு

 

 ராமநாதன் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். மனத்தில் நிம்மதியில்லாதிருக்கும் போது கயிறு அறுபட்ட மாடு போல் அது இஷ்டப்படி உலாவும் கடந்த கால நினைவுகளையும் எதிர்கால எண்ணங்களையும் வாரி போட்டுக் கொண்டு திண்டாடும். அந்த நிலையில் இடையிடையே இன்ப நினைவு வந்தாலும், கொந்தளிப்பு அதை அமுக்கிவிடும். வீட்டில் விளக்குக் கூட ஏற்றவில்லை. அவன் உட்கார்ந்திருந்த ஜன்னல் வழியே வெளியே பார்த்தால் தொலைவில் மங்கி மங்கி ஒளி பெற்றுச் சுழலும் உயர் நீதிமன்றத்து லைட் ஹவுஸ்’ தெரியும்.


என் இளமைக் காலம்

 

 சேரியில் கடைசி வீடு எங்களுடையதாகும். அதற்கும் கடைசியாய் எப்பொழுதாவது இன்னொரு வீடு இருந்திருக்குமோ என்னமோ! அதன் கூரையெல்லாம் சரிந்து விழுந்து கிடக்க, வெறும் மூன்று அல்லது நான்கு அடி உயரத்திற்கு மண்சுவர் மட்டும் எஞ்சி இருந்தது. நானும், மற்ற வீட்டுப் பிள்ளைகளும் சேர்ந்து, அந்தக் குட்டிச்சுவர் மேல் நின்று ரொம்ப தூரத்திற்குப் பார்வையை வீசி, வேலைக்குப் போய் இருந்த எங்கள் அம்மா அப்பாவைத் தேடுவோம். ‘சீக்கிரம் வீட்டுக்குத் திரும்புங்கள் என்று கூவி அவர்களுக்குச் செய்தி அனுப்புவோம். எங்கள்


மயான காண்டம்

 

 சந்தடிமிக்க சாலையிலிருந்து. அருணாசலத்தின் வீடிருந்த தெருவுக்கு வந்த உடனேயே தெருவின் மறுமுனைக்குத் தாவிய மாணிக் கத்தின் கண்கள்… வெறிச்சோடிப் போய்க்கிடந்தது. அப்படியென்றால், அதற்குள் எடுத்துச் சென்றுவிட்டார்களா? கைக்கடிகாரத்தைப் பார்த்த போது எண்கள் சரிவரத் தெரிய வில்லை. செய்தி அறிந்து வீட்டிலிருந்து இறங்கிய அவசரத்தில் கண்ணாடி எடுக்கவில்லை. கண்ணாடி இல்லாமல், இப்போதெல்லாம் ஒன்றுமே வாசிக்க முடிவதில்லையே… இருந்தும் இன்னும் மணி மூன்று கூட ஆகவில்லை என்பதை யூகிக்க முடிகிறது. ‘பையன் ரெண்டரை மணி ஃப்ளைட்டில் வருகிறான். எடுக்க எப்படியும்


சில்லறைக் கடன்

 

 கொஞ்ச நாளைக்கு முன், பெங்களூருக்குப் போகும் நண்பர் ஒருவரை வழியனுப்ப ஸ்டேஷனுக்குப் போயிருந் தேன். அப்போது என் நண்பருக்குத் தெரிந்த இன்னொருவரும் அங்கே வந்திருந்தார். அவரும் வழி யனுப்பத்தான் வந்தார் போலிருக்கிறது. வண்டி நகர்ந் தது. நான் அவசரமாக வீட்டுக்கு வந்துகொண்டிருந் தேன். அச்சமயம், அந்தப் புதிய மனிதர் என்னைப் பார்த்து, “சார், உங்கள் பெயர் …?” என்று இழுத்தார். பெயரைத் தெரிவித்தேன். “உத்தியோகம்…..?” என்றார். அதையும் சொன் னேன். பிறகு, அவர் விடைபெற்றுச் சென்றுவிட்டார். மறுநாள்,


ஒரு வழிப் பயணம்

 

 மத்தியானம் புறப்படும் வண்டியைப் பிடிக்கத் தங்கச்சி வீட்டி லிருந்து இறங்கும் போது மணி முள் ஒன்றை விலக்கி விட்டிருந்தது. வீடு நங்கநல்லூரின் உட்சுழிவுகள் ஒன்றினுள். எஸ்.பி.காலனி பஸ் ஸ்டாண்ட் வந்தால் ஆட்டோகிடைக்கும். அதற்கு ஐந்து நிமிடங்கள் நடை. ஆட்டோ கிடைத்தால் ஐந்து நிமிடங்களில் பழவந்தாங்கல். அல்லது 18சி கிடைத் தால் பத்து நிமிடங்கள். பத்து நிமிடங்கள் மின்சார வண்டிக்குக் காத்து நின்றாலும் பார்க் ஸ்டேஷனில் இறங்க ஒன்று ஐம்பத்தைந்து ஆகிவிடும். ஓட்டமும் நடையுமாகப் போனால் இரண்டு மணிக்கு


அவன் பெயர் நாகராஜன்

 

 அவன் தன் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தான். இனிமேல் அவன் மறுபடியும் உள்ளே நுழைய வேண்டிய அவசியமில்லை. ஒரு வாரத்துக்குரிய சம்பளத்தைக் கொடுத்து அனுப்பி விட்டார்கள். இது அவன் தில்லிக்கு வந்த இந்த மூன்று மாதங்களில் பதினைந்தாவது வேலை. இங்குதான் அவன் அதிக நாட்கள் வேலை செய்தான். இன்னொரு வேலையை தேடிச் சென்றானானால் அங்கு ‘இண்டர்வியூ’வில் கேட்பார்கள். “அநுபவம்?” “மூன்று மாதங்கள்.” “எங்கு வேலை செய்து கொண்டிருந்தாய்?” “கடைசியாக வீலர் அன்ட் பாட்லிபாய்.” “கடைசியாகவா?” அந்தக் குரலில் நிச்சயம்


சிலந்தி சிரித்தது

 

 கட்டுரை எழுதுவதற்காகக் கற்பனைப் பறவையின் இறக்கைகளை அவிழ்த்துப் பறக்கவிட்டவாறு உச்சிமோட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே சிதைந்த தன் வலையைச் சீர்ப்படுத்திக் கொண்டிருந்தது ஒரு சிலந்தி. அதன் செய்கை உலகம் ஒப்பும் ஒரு உண்மையை நினைவுறுத்தியது. அந்த உண்மை – “உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் வாழ விரும்புகிறது; எப்படியாவது எந்த வழியிலாவது தான் வாழ வேண்டும் என்று நினைக்கிறது”. இல்லாவிட்டால் இந்தச் சிலந்தி பட்டிழையைவிட மெல்லிய மின்னும் இழைகளைக் கொண்டு அழகாக மாயவலை பின்னி அதிலே பல


வள்ளி திருமணம்

 

 வள்ளியின் ‘ஆலோலம்’ அந்தக் காட்டுக்கே ஓர் கீதம்; பறவைகள் அதைக் கேட்டு இன்புறவே தினைப் புனம் வரும். கதிர்களைக் கொத்துவதுபோல் பாசாங்கு செய்யும். வள்ளி , கவணை வீசிச் சோ ! சோ! என்று பாட் டிசைத்ததும், பறவைகள் தம்மை மறந்து, மரக்கிளை களிலே அமர்ந்து இன்புறும். கீதம் நின்றால், ஒன்ஸ் மோர்’ கேட்பதுபோல், மீண்டும் தினையைத் தின்ன வரும்! மீண்டும் வள்ளியின் சங்கீத வாய்மொழி ஆரம்பமாகும். வேட்டையாடச் செல்லும் வீரர்கள் கொஞ்ச நேரம் வள்ளி –