கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 24, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

சிகரம் தொட்டவன்

 

 சுதன் தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்து அண்மையில் நடாத்தி முடித்த ஆய்வு ஒன்றின் அறிக்கையைத் தயாரிப்பதில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இந்த செயற்பாடு வழக்கமான ஒன்றுதான். அறிக்கையை சிறப்பாக செம்மைப்படுத்துவதற்கான புதிய யோசனைகளை உருவாக்கும் பொருட்டு மனதை ஒருநிலைப்படுத்துவதற்காக சில நிமிடங்கள் நடக்கும்பொருட்டு அவருடைய அலுவலக அறையிலிருந்து முன் வாசல் வழியாக வெளியே வந்தார். இரண்டு சுற்றுக்கள் அங்கும் இங்கும் நடந்தார். வெளியே யாரோ ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளில் வந்து நிற்கும் ஓசை கேட்டு திரும்பி வாசலை நோக்கி தன் பார்வையை


அபரஞ்சி!

 

 கீழ்வரும் சங்கப் பாடலிலிருந்து தற்போதய காலத்துக்கொப்ப பிறந்த சிறுகதை: தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என அறிந்த பரத்தை, அத் தலைவியின் தோழியர் கேட்கும்படி இதனைக் கூறியது. கழனி மாஅத்து விளைந்து உகு தீம்பழம் பழன வாளை கதூஉம் ஊரன், எம் இல் பெருமொழி கூறித், தம் இல் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல, மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே. – குறுந்தொகை 8, ஆலங்குடி வங்கனார் பொருள்: வயலில் உள்ள


ராதா கல்யாண வைபோகமே…

 

 “இந்தாங்கோ காப்பி. சீக்கிரம் குடிச்சுட்டு டம்பளரை குடுங்கோ .மளமளன்னு அலம்பி வெச்சுட்டு கிளம்பணும் .ஏற்கெனவே, சுமி ரெண்டு தடவை ஃபோன் பண்ணி ‘இன்னும் கிளம்பலையா’ன்னு கேட்டுட்டா..ஆமா” பரபரப்புடன் பேசிய பானுமதியை கிண்டலுடன் ஏறிட்டார் பரசுராமன். “சரிதான்.இதோ, இங்கே இருக்கற வேளச்சேரிக்கு போக இத்தனை ஆர்ப்பாட்டமா ?.நாம என்ன அமெரிக்காவுக்கா போறோம்?” “நமக்கு அமெரிக்காவும் ஒண்ணு தான்.வேளச்சேரியும் ஒண்ணு தான் .நீங்களே சொல்லுங்கோ .சுமி ஆத்துக்கு நாம இது வரைக்கும் எத்தனை தடவை போயிருக்கோம்?” அவளும் அந்த புது


புள்ளையாரே! உன்ன பாக்க வரமாட்டேன்

 

 மழையை முன்கூட்டியே அறிந்து, சாரை சாரையாய் அணிவகுத்தது எறும்புகள். கூட்டம் கூட்டமாக பறவைகள் தன் கூட்டை நோக்கி பறந்து சென்றன. வானம் கரு மேகத்துடன் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஒரு ஊசியை எடுத்து மேகத்தினை குத்தினால் மழை பீறிக் கொண்டு பெய்யும் என்பதுபோல தயார் நிலையில் இருந்தது. மழைத்துளி பூமியை நெருங்கும் நேரம் சில நொடிகளே இருந்தன. எப்போது நெருங்கும் என ஜன்னலின் வழியே ஆவலாக பார்த்துக்கொண்டிருந்தான் சுட்டிப்பையன் மணி. ஆனால் மேகம் கலைந்தது மழை ஏதும் வரவில்லை.


பட்டால் புரியும்

 

 வட இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இரெயில் அது. சாதாரண வகுப்பில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. தாள நயத்துடன் தடக்..தடக் என்ற சத்தம் கூட அந்த இரவில் படுத்து உறங்குபவர்களுக்கு தாலாட்டாக இருந்தது.. ஆயிற்று ஒன்றரை நாட்கள் ஆகி விட்டது. காலை பத்து மணிக்கெல்லாம் பம்பாயை அடைத்து விடலாம். அந்த தூக்க கலக்கத்திலும் விலுக்கென்று நிமிர்ந்து பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆளை பார்த்து நிம்மதியாகி மீண்டும் உறக்கத்திற்கு சென்றவன் அப்படியே அந்த ஆளின் மேலேயே சாய்ந்தும் கொண்டான்.


இரண்டாம் பதிப்பு…

 

  சாம்பு என்ற சாம்பசிவம் பூஜையறையில் தீக்குச்சியை எடுத்து விளக்கேற்றப் போகும்போதுதான் வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்டது… சாமி அறையென்றால் முருகன்.பிள்ளையார். வெங்கடாசலபதி. மீனாட்சி அம்மன்.போன்ற சாமிப்படங்களை மாட்டியிருப்பார் என்று எதிர்பார்த்தீர்கள் என்றால் ஏமாந்து போவீர்கள்.. ஒரு சிறிய பலகையில் ராமகிருஷ்ண பரமஹம்சர். பக்கத்தில் சாரதா தேவியார்.. ஒரு சின்ன அகல் விளக்கு.வேறு எதுவும் கிடையாது. முன்னால். தியானம் செய்ய ஒரு விரிப்பு. அங்கு நுழையும்போதே ஒரு பாஸிட்டிவ் வைப்ரேஷன்.. சாம்புவிடம் சில பிடிவாத குணங்கள்


குருதி களம்

 

 ரகு அசந்து துங்கி கொண்டிருக்கையில் அவனது மொபைல் சினுங்கியது. தூக்க கலக்கத்தில் போனை எடுத்து பார்த்தால் சையது. “ஹலோ” எதிர் முனையில் ஏதோ செய்தி கேட்டு. “எப்போ?எப்படியாச்சு?”என்ற கேள்விக்கு பதில் கிடைத்த உடனே, “இதோ உடனே இப்பவே கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டு பெட்ருமை விட்டு வெளியே வந்தான். ஹாலில் இருந்த ஸ்ரீநிவாசன் “ரகு என்னப்பா அதுக்குள்ள எந்திருச்சட்ட.. ராத்திரி லேட்டா தான வந்த.. அதுவும் பஸ் டிராவல் வேற டையர்ட இருக்கும்ல இன்னும் சித்த நாளி தூங்கலாமல்லபா?”


பாதிப்பு..!

 

 மனோன்மணிக்கு மனதில் சுமை. காரை விட்டு இறங்கி வலி தாங்க முடியாமல் துவண்டு வந்து சோபாவில் சரிந்தாள். பாதிப்பு…!! இருபது வயது ரமேஷ். இவள் சுமந்து பெற்றப் பிள்ளை. தாடியும், மீசையுமாய் ஒரு பிச்சைக்காரனை விடக் கேவலமாய், ஒரு மனநோயாளியைவிட மோசமானவனாய்… போதையில் தள்ளாடி சாலையோரம் நடந்து சென்றது இவள் மனதைப் பிசைந்தது. காரை நிறுத்தி….’ மகனே! ‘ என்று கதறி அள்ளிக்கொள்ள இவளுக்குள் இதயம் முழுக்கத் துடிப்பு. அரிப்பு. ஆனால் முடியாது.! ஏன்..?…. இவள் கைகள்


ஆயிரம் காலத்துப்பயிர்

 

 பரந்த அந்த கரிசல் வெளியில், துல்லியமாய் வித்தியாசம் காட்டிய நெடுங்கோடாய் நீண்ட அந்த செம்மண் கப்பி சாலையில், முகம் முழுக்க வேர்வை வடிந்து கொண்டிருக்க வெடு வெடு வென கோபாவேசமாய் நடந்து கொண்டிருந்தாள் செண்பகம். அவ்வப்போது தன்னை யாரும் பின் தொடர்ந்து வருகிறார்களா என்றும் திரும்பி பார்த்துக்கொண்டாள். நெருப்பை வானத்தில் இருந்து கொட்டிய சூரியன் சுட்டுக்கொண்டிருந்த அந்த பிற்பகல் வேளையில், ஒரு குஞ்சு குளுவானையும் காணோம். வேர்வை வடிந்ததில், செண்பகத்தின் சேலை முழுசுமாய் நனைந்து போயிருந்தது. ‘யாரும்


திருமண்

 

 ஹொய்சள தேசத்தில் திருமண் அணிபவர்கள் யாருமில்லை என்பதால், அப்போது ஸ்ரீராமானுஜருக்கு அது ஒரு பெரும் பிரச்னையாகிவிட்டது. தேசத்தில் இருப்பவர்கள் அத்தனை பேருக்கும் திருமண் வேண்டும், அதுவும் தினமும் வேண்டும். என்ன செய்யலாம்? ஸ்ரீராமானுஜர் உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்தார்… அன்றிரவு அவருக்கு ஓர் கனவு வந்தது. கனவில் சாட்ஷாத் பெருமாள் தோன்றினார். அந்தக் கனவில், “ராமானுஜரே, உடனே கிளம்பி யதுகிரிக்குச் செல்லுங்கள். அங்கே வேத புஷ்கரணி என்றொரு குளம் இருக்கிறது. அதன் வட மேற்கு மூலையில் நீங்கள்