கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 18, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

ரசிகா!

 

 அவங்க வரதா சொல்லியிருக்காங்க. நீங்க இன்னும் ஒரு முடிவும் எடுக்காம இருக்கீங்க? வரும்போதே சொல்லிடலாமா? இல்ல இப்ப மறைச்சுட்டு, அப்புறம் சொல்றதா? எப்படியும் நிச்சயம் பண்ணுவாங்க. இந்த பார்க்க வரதெல்லாம் ஃபார்மாலிட்டின்னு தான் சம்பந்தம் சொன்னார். ஏன் ஜானகி கவலைப் படறே. இரு யோசிக்கிறேன். சாயங்காலம் தானே! பாத்துக்கலாம். அவ கிட்ட நான் இன்னும் பேசணும். அப்பா, இந்த சாரீ நல்லா இருக்குமா? அவங்க வரும்போது கட்ட? ம்ம் நல்லா இருக்கும்மா! உங்கிட்ட கொஞ்சம் பேசணுமே! சொல்லுங்கப்பா…


வருவாளா? அவள் வருவாளா?

 

 ஒருத்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டால் எவ்வளவு ஆனந்தமாக இருக்குமோ அவ்வளவு ஆனந்தம் கொண்டான் அவன் – சகல வசதிகளையும் ஒருங்கிணைக்கப்பெற்ற அந்த கைத்தொலைபேசியை அவனுக்கு வீட்டில் வாங்கித்தரப்பட்டதும்!. (அவளுக்கு மட்டும் என்னவாம்? ஒரு அதிர்ஷ்டப் போட்டியில் அவளுக்கும் அதே போன்ற ஒரு கைத்தொலைபேசி கிடைத்ததும் துள்ளினாள்!. யாருடனும் அவ்வளவாக பேசி பழகிராத அவளுக்கு இது பெரும் துணையாக இருந்தது. வீட்டு வேலைகள் செய்த பின் மீதி வேளையெல்லாம் இந்த கைத்தொலைபேசி தான் வாழ்க்கைத்துணை!!. காலநேரம் தெரியாமல்


ஃபில்டர்காபியும், பைந்தமிழ்தேனீயும்…!

 

 “என்னடா சொல்ற! நாக்கில் எப்படிடா தேனீ கடிக்கும்?” என்றேன். “நிஜமாத்தான் சொல்றியா?” எனக்கு நம்புவதற்கு கடினமாக இருந்தது. “இதை பாரு!” என்றான், நாக்கை வெளியே நீட்டி. நாக்கின் நுனியிலிருந்து சென்டிமீட்டர் தூரத்தில், உள்ளே வெண்மையான, பழுப்பு நிறத்தில் சீழ் பிடித்த கொப்புளம் பட்டாணி அளவில் இருந்தது. அதை சுற்றிலும் இளஞ்சிவப்பு நிறத்தில், வரைந்தது போல் எல்லையிட்டிருந்தது. “எல்லாம் ஃபில்டர் காபியினால் வந்த வினை!” என்றான். ‘பில்டர் காபிக்கும், தேனீக்கும் என்ன சம்பந்தமாயிருக்கும்?’ மேலே தொடர காத்திருந்தேன். “நான்


நட்பாசை

 

 “எனக்கு ஒரு ஆசடா ” –குமரன். “சொல்லுடா நெரவேத்திருவோம்”- தேவ். குமரன், “நான், ரெண்டு தடவ சாகனும் ”. வழக்கமான அதிர்ச்சியுடன் தேவ், “ஏன்டா நல்லாதானே பேசிகிட்டிருந்தோம் ஏன் தீடிர்னு இப்டி? சரி, ஓகே.. நீ ரைட்டர்-ங்கிறதால அப்டி கேட்டியா? இல்ல நான் டாக்டர்-ங்கிறதால கேட்டியா?” குமரன், “ரெண்டும் இல்ல, நாம ப்ரிண்ட்ஸ்-ங்கிறதால கேட்டேன்”. தேவ், “நீ நார்மலா இருக்கவே மாட்டியாடா?” குமரன், “எல்லாமே நார்மலா இருந்துட்டா உனக்கும் வேல இல்ல, எனக்கும் வேல இல்ல” சிறு


தற்பெருமையில் கணிப்பு

 

 என்னைப்போல் ஒரு ஜோசியக்காரன் இந்த உலகத்தில் இப்பொழுது இல்லை. எதிர்காலத்தில் பிறக்கலாமோ என்னமோ, எனக்கு தெரியாது. ஏன் அதையும் கணித்து சொல்லலாமே என்று கேட்கிறீகளா? சொல்லலாம், நானும் கணித்து பார்த்தேன் இப்போதைக்கு யாரும் இல்லை, எதிர் காலத்தில் உருவாகலாம் கோள்களின் கணக்கை வைத்து கணித்திருக்கிறேன். வெளி உலகிற்கு இதை பற்றி சொன்னால், என்னை கர்வம் பிடித்தவன் என்கிறார்கள், இல்லை என்றால் அகம்பாவம் பிடித்தவன் என்று சொல்கிறார்கள். யார் எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும், நான் கணித்து அதை தவறு


உன்னுள்ளே நான்!

 

 அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது. இரண்டு.. மூன்று.நான்கு. நிமிடங்கள்… நிற்காமல் கரவொலி அந்த சங்கீத அரங்கத்தில் கேட்டுக் கொண்டே இருந்தது. சிவப்புநிற வெல்வெட் திரை கீழே இறங்கி மீண்டும் மேலே ஏறியதும் மனு மேடை மீது தோன்றினான். மறுபடியும் அரங்கம் ஆரவாரத்துடன் அவனை எதிர்கொண்டது.. இதுபோன்ற ஒரு பியானோ இசையை வாழ்க்கையில் ஒருபோதும் கேட்டதேயில்லை என்பதற்கு அதுவே போதுமான சாட்சி. இன்னும் இரண்டு நிமிடங்கள் ஆசையுடன் அவன் முகத்தை பார்க்கமாட்டோமா என்பதற்குள் அவன் குனிந்து அனைவரையும் மூன்று


மன்மதனுக்கு அம்னீஷியா!

 

 மன்மதன் அவன் உடலைக் குத்தகைக்கு எடுத்திருந்தான். கல்யாணம் கட்டி ஆறேழு வருடங்கள் கழிந்து விட்ட இந்த வயதிலும் அவன் மட்டும் ஜெமினி கணேசனைப் போல [கமலைப்போல/சூர்யாவைப்போல என உங்கள் வயதுக் கேற்ப உவமையை மாற்றிக் கொள்ளுங்கள்] கன்னியரைக் கவர்ந்திழுக்கும் வசீகரத்துடன் இன்னும் இளமையாகவே இருக்கிறான். அவன் மனைவியோ காற்றடித்த பலூன் போல தொக்கையாக, கண்ணராவி யாக மாறிவிட்டாள். அவனுக்குச் சலிப்புத் தட்டிவிட்டது. திரும்பத் திரும்பப் பார்க்கிற ஒரே முகங்கள், தெருக்கள், மனைவி, பிள்ளைகள் . சுற்றிச் சுற்றி


சீர்வரிசை..!

 

 தன் நிலை, சொல்லையும் மீறி பிரம்மாண்டமான துணிக்கடையில் நுழைந்து விலை உயர்ந்தரக துணிகளைப் புரட்டிப் பார்க்கும் மனைவி மாலாவை நினைக்க வருத்தமாக வந்தது சந்திரகுமாருக்கு. இவ்வளவிற்கும் துணிகள் இவளுக்கில்லை. இவள் அண்ணன் மகள் சுருதிக்கு. ‘பெண் பூப்பெய்திவிட்டாள், இந்தத் தேதியில் சடங்கு!’ என்று சேதி வந்ததுமே ஆட ஆரம்பித்து விட்டாள். “என்னங்க…?” “என்ன…?” “இதோ பாருங்க. நம்ம கஷ்ட நஷ்டம் பார்க்கக் கூடாது. சுருதி அண்ணனுக்கு ஒரே பொண்ணு. செல்ல மகள். நான் அவளுக்கு ஒரே அத்தை.


பாதைகள் மாறினோம்

 

 வீட்டினுள்ளே இருக்கப் புழுங்கி அவிந்தது. கதி ரையை எடுத்து வெளியே முற்றத்திற் போட்டுவிட்டு அமர்ந்தேன். முற்றத்து வேப்பமரம் காற்றை அள்ளி வீசியது. அந்தச் சுகத்தில் அப்படியே நீட்டி நிமிர்ந்து கதிரையிற் சாய்ந்தேன். மூத்தமகன் ஓடிவந்தான். “என்ன ஜெயந்தன்?” “கோயிலுக்குக் கூட்டிக் கொண்டு போறனெண்டு சொன்னீங்களெல்லே?” ‘கொஞ்ச நேரம் நிம்மதியாய் இருக்க விடமாட்டுதுகள்’ என எரிச்சலேற்றட்டது. அவன் தலையையும் கண்களையும் திருப்பித் திருப்பி ஒவ்வொரு சொல்லாக உச்சரித்துச் சொன்னவிதம் அந்த எரிச்சலைப் பறக்கடித்தது. அவனை அப்படியே கட்டியணைத்தேன். இப்படித்தான்,


வேலை

 

 “என்னடா ராம்கி, இஞ்சினியரிங் படிச்சு கோல்ட் மெடல் வாங்கி நீ பாஸ் பண்ணியது ரொம்ப சந்தோஷம். ஆனா இப்படி வர்ற நல்ல நல்ல வேலைகளையெல்லாம் வேண்டாம்னு ஒதுக்கி வச்சா என்னடா அர்த்தம்?” “அப்பா ப்ளீஸ் நான் வேலை பார்க்கப் போவது வெறும் மாதச் சம்பளத்திற்காக மட்டும் அல்ல. அந்த வேலையில் இருந்துகொண்டு நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். வித்தியாசமா மாற்றி யோசித்து புதியவைகளைப் புகுத்த வேண்டும். எனக்கு முழு சுதந்திரம் வேண்டும்… அந்த மாதிரியான ஒரு சிறந்த நிர்வாகத்தைத்தான்