கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 15, 2021

14 கதைகள் கிடைத்துள்ளன.

பாக்கு மரம்

 

 “நீங்க சரியான பத்தாம்பசலி மேடம். இந்தக் கம்மலை கழற்றி எறிஞ்சிட்டுப் பேசாமல் ரிங் போடுங்க. பார்க்கிறதுக்கு அழகாய் இருப்பீங்க, அதாவது இப்போ இருக்கறதைவிட.” அவள் கோபப்பட்டவள் போல, கதவுமேல் போட்ட இடது கரத்தையும், தங்க வளையல் அலங்கரித்த வலது கரத்தையும், இடுப்பில் அம்புக்குறிபோல் வைத்தாள். பின்னர் வாசலுக்கு வெளியே நின்றவனின் முகத்தில் அடிக்காத குறையாகக் கதவை மூடுவதற்காக, தனது கரங்களை இடுப்பிலிருந்து விடுவித்தாள். அதற்குள் அவன் முந்திக் கொண்டான். “நானும் என் எலிஸ்டர்கிட்டேயும் இதுக்கு எதிர்ப்பதமாய்ச் சொல்லிச்


பாசக் கணக்கு

 

 ராமையா, தண்ணிர் புரையேற, “மூக்கும் முழியுமாக” திண்டாடினார். அதற்குக் காரணமான அவரது மனைவியோ, அவர் காதுகளில், நீர்த்துளிகள், அந்தக்காலத்து கடுக்கன்கள் மாதிரி மின்னுவதை ரசித்துப் பார்த்தபோது அவருக்கு கோபமும் புரையேறியது. ஆத்திரமாக ஏதோ பேசப்போனார். இதனால் அவர் வாய் குளமாகி, பற்கள் மதகுகளாகி, உதடுகள் நீர் கசியும் கால்வாயானதுதான் மிச்சம். அவர் தண்ணிர் குடிக்கும்போதோ இவள் வெற்றிலையை குதப்பும்போதோ எந்தப் பேச்சும் வைத்துக்கொண்டால், கணவர், பெர்ராச்சட்டம் மீறப்பட்டது போல் குதிப்பார் என்பது தெரிந்தும் அந்தம்மா அந்தச் செய்தியைச்


பிண மாலை

 

 ‘நான், அயோக்கியனாய் ஆகாமல் போனதற்காக வருத்தப்படும் யோக்கியனோ?’. இப்படி, தன்னைத்தானே கேட்டுக்கொண்டார் பழனிச்சாமி. அந்த கய விமர்சனத்தில், எதிரில் சின்னத்தனமான காட்சிகளை மாட்சிமைப் படுத்தும் சின்னத்திரையை பார்க்கவுமில்லை, கேட்கவுமில்லை. ஒலியும் ஒளியும் பார்த்துக் கொண்டிருந்த புனிதா, வீட்டின் காம்பவுண்டு கேட் போடுகிற ஒலியை வைத்தும், காலடிச் சத்தத்தை வைத்தும் அப்பா வருவதை அறிந்து கொண்டாள். அவசரத்தில், தொலைக்காட்சிப் பெட்டியை நீல நிறமாக்க மறந்துபோய், அதில் தோன்றிய நீலக் காட்சிகளை, அப்படியே தக்கவைத்துவிட்டு, அவசரத்தில் உள்ளே ஒடி விட்டாள்.


பூவம்மாவின் குழந்தை

 

 இறுகத் தார் பாய்ந்த வேட்டியில் மரத் துரள்களும் மண் தூள்களும் இரண்டறக் கலந்த செம்மண் கோலத்தில் குடிசைக்கு வந்த கன்னையா, கழுத்தில் தொங்கிய கோடரியைக் கீழே வைத்துவிட்டு, குடிசைக்கு முன்னால், வேலிகாத்தான் முட்செடிகள் மொய்த்த இடத்தருகே இருந்த மண் பானையில் இருந்த நீரை, கையாலேயே மொண்டு கால் கைகளைக் கழுவிக் கொண்டே, பாதி திறந்திருந்த குடிசைக்குள் நோட்டம் விட்டபடி, “டேய் ராமா. டேய் ராமா.” என்றான். ராமன் திருப்பிக் குரல் கொடுக்கவில்லை. வெய்யில் அடிக்கிற மாலைப் பொழுதில்,


மருமகள்

 

 கண் சிகிச்சை முகாமுக்கான ஜீப், கிழவர் – கிழவியர் சகிதம், பொன்னம்மா பாட்டியின் வீட்டு முன்னால் வந்து நின்றது. பாட்டியின் மகன் முனுசாமியிடம், கிராம சேவக்கும் சேவிகையும் விளக்கமாக எடுத்துரைத்து, பொன்னம்மாவை ஜீப்பில் ஏற்றினார்கள். மருமகள்காரி வாசல்வரை வந்தாள். மாமியாரை ஜீப்பில் பார்த்ததும், தனக்கும் வயதாகி, கண்ணும் கெட்டிருந்தால், இந்த ஜீப்பில் எறியிருக்கலாமே என்று ஏங்கியவள் மாதிரி, பெருமூச்சு விட்டாள். ஏதோ ஒரு வழியாக, கண் சிகிச்சை முகாம் துவங்கியது. அந்த டிவிஷனைச் சேர்ந்த ஆறு பஞ்சாயத்து


முகமறியா முகம்

 

 ஊரு ஒலகத்தில் காதலிப்பதுபோல், தானும் காதலிக்காமல் போனதுக்கு ராசகுமாரி, வட்டியும், முதலுமாய் வருத்தப்பட்டாள். அந்த அரங்கு வீட்டின் கடைசி அறைக்குள் வாசல்படியில் உட்கார்ந்து கொல்லைப்புறத்தைப் பார்த்தபடியே குழைந்தாள். இரண்டு சிட்டுக்குருவிகள், அவள் முன்னால் சல்லாபம் செய்து கொண்டிருந்தன. முன்பெல்லாம் அவற்றை ரசித்துப் பார்க்கும் அவள், இப்போது, கைகளை ஆட்டி அவற்றை கலைக்கப் போனாள். பிறகு அவையாவது நல்ல ஜோடியாகி இருக்கிறதே என்று நினைத்தவள் போல், கம்மாயிருந்தாள். அப்படியும் இருக்க முடியவில்லை. பிடரிமுடியை மேற்பக்கமும், முன்முடியை பின்பக்கமும் இழுத்து


ஈச்சம்பாய்

 

  காட்டிற்குக் காடாகவும், மலைக்கு மலையாகவும் தோன்றிய காட்டு மலை அல்லது மலைக்காடு. கர்நாடக மாநிலத்தில் மலெநாடு என்று அழைக்கப்படும் வளம் கொழிக்கும் தபோவனம் போன்ற நிசப்தப் பகுதி. நாட்டியப் பெண்கள்போல், பாக்கு மரங்களும், நட்டுவாங்கனார்போல் தென்னை மரங்களும் இடைவெளி கொடுக்காமல் இணைந்து நிற்க-முக்காடு போட்ட பெண்கள்போல், தென்னை ஒலைகளால் மூடப்பட்ட தென்னங்கன்றுகள், தாவர மான்போல் தாளலயத்தோடு நிற்க, இயற்கைச் சிற்பி, தன் மேலான படைப்பாற்றலில் பூரித்துப் போனது போன்ற விதவிதமான மரங்களாலும் செடிகளாலும் வியாபிக்கப்பட்ட ஊர்


உயிர் ஊஞ்சல்

 

 ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பாகும் பழமொழியை குதிரை தேய்ந்து கழுதையாகும் என்று புதுமொழியாய் சொல்லலாம்போல், கருப்புக் கண்ணாடிப் பாளமாய் ஒளிர்ந்த அந்த தேசிய நெடுஞ்சாலையில் குதிரைப் பாய்ச்சலாய் ஒடிவந்த அந்த வேன், அந்தச்சாலையில் கிளை பிரிந்த கப்பிச் சாலையில் நொண்டியடித்தது. உள்ளுக்குள் கமார் இருபது பேர் இருக்கலாம். அத்தனை பேர் கால்களிலும், கைகளிலும் உழைப்பின் முத்திரைகளான கன்னங்கரேல் காய்ப்புகள்; ஆனாலும் சிறிது வெள்ளையும், சொள்ளையுமாய்தான் காணப்பட்டார்கள். பாம்படம் போட்ட கிழவிகள் இரண்டு பேர். கம்மல் வைத்த நடுத்தரப் பெண்


காலுக்குச் செருப்பாய்…

 

 “ஒங்க காலுக்குச் செருப்பா கிடந்த என் பிள்ளாண்டான இப்படி வீசிட்டியேப்பா. நாய்க்கு எலும்புத் துண்ட வீசற மாதிரி நா பெத்த மவன போலிசில வீசிட்டியே. ஒன்ன விட்டா அவனுக்கு ஆருப்பா” மாருதியின் நவீன அவதாரமான அந்தக் காரை பளபளக்க வைத்துவிட்டு கீழே எறியப்பட்ட கந்தல் துணிபோல் கீழே கிடந்த பொன்னம்மா எழுந்தாள். சற்றே உடம்பை நகர்த்தியவள் சுந்தரத்தைப் பார்த்து விட்டாள். அந்த அழுக்குத்துணி காற்றால் தூக்கப்பட்டு ஒரு கம்பு முனையில் விழுந்தால் எப்படித் தோன்றுமோ அப்படிப்பட்ட தோற்றத்தோடு


கட்டக் கூடாத கடிகாரம்

 

 மீனாட்சி, வீட்டுக்கு வெளியே, காலிங் பெல்லை அழுத்தி அழுத்திப் பார்த்து அலுத்து, மின்சாரக் கோளாறாக இருக்கலாம் என்று நினைத்து, கதவைத் தாம் துரம் என்று தட்டினாள். அது வாசலுக்கு மூடியாகவே இருப்பதைப் பார்த்துவிட்டு, ஒருவேளை உள்ளே மனிதக் கோளாறோ என்று சந்தேகப்பட்டு, கதவில் பொருந்தியுள்ள லென்ஸ் மாதிரியான வட்டக் கண்ணாடி வழியாகப் பார்த்துவிட்டு, பின்னர் காலிங் பெல்லையும், கதவையும் அழுத்திப் பிடித்தும், அழுத்தமாய் அடித்தும் அல்லாடிக் கொண்டிருந்தபோது, லட்சுமி மாமி, சத்தம் சங்கமிக்காத குளியலறையில், கணவரின் ஆடைகளையும்