கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 12, 2021

8 கதைகள் கிடைத்துள்ளன.

காலம் காத்திருக்குமா?

 

 “அண்ணா வந்து விட்டாரம்மா!” ஆனந்தன் வந்து விட்டான் என்பதைச் சொல்லும் போது அருணாவின் முகத்தில் தான் எவ்வளவு ஆனந்தம்! வீடு கூட்டிக் கொண்டிருந்தவள் தும்புக்கட்டையை விறாந்தையின் ஒரு மூலையில் வைத்துவிட்டு “வாங்கண்ணா” என்றாள். பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த ஆனந்தனின் தம்பியும் ஓடிவந்தான். தமையன் வந்துவிட்ட சந்தோசத்தில் “எட்டு மாதமாக வீட்டுக்கு வராத பிள்ளை வந்து விட்டானே” என்கிற மகிழ்ச்சி கட்டிலில் படுத்திருந்த வருந்தகாரத் தாயான கனகம்மாவையும் எழுப்பி உட்கார வைத்தது. ஆனந்தனின் கையிலிருந்த “சூட்கேஸ்” அருணாவின் கைக்கு


எனக்கொரு வேலை கிடைக்குமா?

 

  “திருமேனி” “ஓம் வாறன்” திருமேனி தெருப்படலையைச் சற்றுத் திறந்து கொண்டு படலையின் கீழ்வெளியில் கால வைத்து, கால் துடையில் முழங்கையை ஊன்றி கைவிரல் முஸ்டியில் நாடியைத் தாங்கியவாறு நின்றான். அவனுடைய அக்காள் கனகம் வீட்டு முற்றத்தைக் கூட்டிக்கொண்டு நின்றாள். திருமேனியின் முகம் யோசனையில் ஆழ்ந்திருந்தது. அவன் எஸ்.எஸ்.சி. சித்தியடைந்தபின் படித்துவிட்டு வீட்டிலிருக்கும் அந்த ஊர் வாலிபர்களுடன் சேர்ந்து, ஊர் தெருவெல்லாம் சுற்றிக் களைத்துவிட்டான். எவ்வளவு தான் நண்பர்களுடன் சிரித்துப் பேசினாலும் ஐந்து வருடங்களாய் வேலையின்றியிருந்து தமையனின்


புத்தக உலகம்

 

 மணிப்பர்ஸ் ஜாக்ரதை என்று கேள்விப்பட்டிருக்கிறோம். புத்தகம் ஜாக்ரதை என்று கேள்விப்பட்டதில்லை. இப்படிக் கேள்விப்படாதவ ரெல்லாம் திருமான் வேங்கடத்தைச் சந்தித்ததில்லை என்று சொல்லிவிடலாம். புத்தகங்களை ‘அசத்துவதில் அவர் சமர்த்தர்; மாநிபுணர். இந்த விஷயத்துக்கென்று ஒரு நோபல் பரிசு ஏற்பட்டிருந்தால் வருடா வருடம் அது வேங்கடத்துக்குத்தான். பரிசுக் கமிட்டியார் டாலராகக் கொடுப்பதைவிட அதே தொகைக்குப் புத்தகங்களாகவே கொடுப்ப தென்றால் ரெட்டிப்புச் சந்தோஷம். நாங்கள் அந்த மகானுபாவனை முதலில் சந்தித்தது ஒரு நூலக ஆண்டுவிழாவில், நூலகம் அந்த ஆண்டுவிழாவில், ஒரு பெரிய


நூஸ்

 

 நாணி ஆசாரிச்சியைத்தான் ஊரிலே ‘நூஸ்’ என்றழைப்பார்கள். அதிகாலையிலேயே எழுந்துவிடுவாள். எப்போதும் ஏதாவது சில்லறை வியாபாரம் கையிலிருக்கும். வீட்டைவிட்டுக் கிளம்பும்போது காலிக்கடவம்தான். போகும் இடங்களில் சக்கைக்குரு, முருங்கைக்காய் என கொள்முதல் செய்வாள். அவற்றை விற்கப்போகும் இடங்களில் கிடைக்கும் வாழைக்காய்,கோழிமுட்டை எதையும் வாங்குவாள். வியாபாரம் முடியும்போது சமயங்களில் கடவம் நிறைந்திருக்கும். நேராக அந்திச்சந்தைக்குப் போய் அவற்றை விற்று பணமாக்கி முந்தியில் முடிந்து கடவத்திலேயே மரச்சீனியும் மீனும் அரிசியும் வெஞ்சனமும் வாங்கிக் கொண்டு அப்படியே மண்ணாத்தி வீட்டுக்குப் பின்னால் ஒதுங்கி அரை


அரிசில்கிழார்

 

 ‘நல்லவர் என்பதில் தடை இல்லே. ஆனாலும்……’ அவன் மேலே சொல்லாமல் இழுத்தான். “ஆனாலும் என்ன?’ என்று புலவர் கேட்டார். அவர் யார்? விளக்கமாகச் சொல்’ என்ருர் அரிசில்கிழார். “பேகன், பெரிய வள்ளல் என்ற புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கிறது. புலவர்களிடத்தில் எவ்வளவோ பிரியமாக இருக்கிருர், குடிமக்களிடத்தில் அன்பு உடையவரே. ஆனால் இங்கே அவரைப் பிரிந்து, தனியே வாழுகிறாள் அவருடைய மனைவி கண்ணகி. அந்த அம்மாளுக்கு எத்தனை துயரம் இருக்கும்!” “ஏன் பிரிந்து வாழுகிறாள்?” “அந்த அம்மாள் பிரியவில்லை.


மதுரைக்கு டிக்கட் இல்லை!

 

 நாம் கலியாணமாம் கலியாணம்! இந்தக் கிழங்களுக்கு வேறு வேலை கிடையாது. காலை முதல் மாலை வரை, மாடு நான்! இந்த வாழ்வுக்கு ஒரு கூட்டு வேண்டுமாம் எனக்கு! அவள் வேறு, வீட் டிலே உட்கார்ந்து கொண்டு, அதுவேண்டும் இது வேண்டும், அன்னத்தின் சேலையைப் பார், அகிலாண்டத்தின் வளையலைப் பார், சொர்ணத்தின் சொகுசைப் பார், சொக்கம்மாவின் சிரிப்பைப் பார், என்று இரவிலே ஈட்டியால் குத்தவேண்டும்போல் இருக்க, இந்த வேதனையை நான் பட வேண்டுமாம், இதற்கு, வீட்டிலே உபதேசம் செய்கிறார்கள்.


விவேகமுள்ள மந்திரி

 

 முன்னொரு காலத்தில் சக்கரவர்த்தி ஒரு வர் நமது தேசத்தை ஆண்டுவந்தார். குதி ரைகள் என்றால் அவருக்கு மிகவும் பிரியம். ஒரு நாள் குதிரை வியாபாரி அங்கு வந்தான். அவன் கொண்டுவந்த ஒரேகுதிரையை சக்கர வர்த்தி பார்வையிட்டார். பரி பார்ப்பதற்கு மிகவும் அழகாய் இருந்தது. அரபிக் குதிரையாகையால் ஐந்நூறு பொன் கொடுத்து அதை வாங்கிக் கொண்டார். அதைப்போல் இன்னொரு குதிரை இருந்தால் நன்றாய் இருக்குமே என்று அவருக்குத் தோன்றிற்று. உடனே அவர் அந்த வியாபாரியைப் பார்த்து, “இதற்குச் சரி


காலத்துக்கு வணக்கம்

 

 அன்றைய காலைத் தபாலில் ஒரே ஒரு கடிதந்தான் வந்திருந்தது. பிரித்துப் பார்த்தேன். விக்கிரமசிங்க புரத்திலிருந்து வீரராகவன் எழுதியிருந்தான். வழக்கமான குசலப்பிரச்னத்துக்கு அப்புறம் கீழ்க்கண்ட விவரம் அதில் எழுதப்பட்டிருந்தது. “வருகிற ஆடி அமாவாசைக்குப் பாணதீர்த்தம் போகலாம் என்று தீர்மானித்திருக்கிறோம். நீங்களும் அம்மாவை அழைத்துக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் என் ஆசை. கட்டாயம் நாலு நாட்களுக்கு முன்பாகவே புறப்பட்டு வாருங்கள்” “இந்தா… உன்னைத்தானே?… தூக்கமா? உன் பிள்ளையாண்டான் விக்கிரமசிங்கபுரத்திலிருந்து கடுதாசி எழுதியிருக்கிறான்.” அடுக்களைக் காரியத்தை முடித்த அலுப்புடன் ரேழி