கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 9, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

அதித்தி எங்கே?

 

 மாலை 4 மணி. எஸ். எஸ். டீ. எஸ்டேட். “அம்மா.. கொஞ்சம் நேரம் சைக்கிள் ஓட்டிட்டு வர்றேன் மா” என்றாள் அதித்தி. “சைக்கிள் வாங்கி இரண்டு நாள் தான் ஆகுது, ஒழுங்கா ஓட்டக்கூட தெரியாது, இப்ப வேண்டாம் அப்பா வந்ததும் போ” என்றாள் விஜி. “எல்லாரும் ஓட்டுறாங்கமா. பீளிஸ் மா.. பத்திரமா ஓட்டிட்டு வர்றேன் மா..” “நான் சொன்னா எங்க கேட்க போற. சரி இங்க பக்கத்துலயே ஓட்டு” என்று அம்மா சொல்லி முடிப்பதற்குள் சைக்கிளை எடுத்து


தேவதைகள் தூங்குவதில்லை….

 

 ”விடிந்தால் வயல் அறுவடைக்கு மெசினை இழுத்துக்கொண்டு செல்ல வேண்டும்” என்று தன் முன்னால் அடிபட்டு படுக்கையில் கிடந்த எழுத்தாளர் ’வசந்த நிலா’வின் ”எங்கே என் சுவாசங்கள்?” நாவலை தொடக்கத்தில் வாசித்துக் கொண்டிருக்கும் போது அவன் வலியின் முனகலில்,திரும்ப்பார்த்து புத்தகதை வைத்து விட்டு அவனுக்கு மருந்து கொடுக்க ஆரம்பித்தாள் நர்ஸ் அரசி. ’இவனை நான் எப்படி…. அப்படியே கழுத்தை நெரித்துக் கொன்று விடுவோமா?’ என்று கண்கள் சிவக்க கோபப்பட்டவள், ‘இவனோடு எப்படி நான்.. அதுவும் மூன்று ஆண்டுகள் வாழ்ந்தேன்.


சோறு முக்கியம் பாஸ்

 

 “அந்த வில்லேஜ்ஜுல எதுக்கு தினமும் இவ்வளவு இறப்பு நிகழுது?.. அவ்வளவு வீரியமா அங்க கொரோனா இருக்கு?” “தெரியல சார்.. நான் நம்ம டாக்டர் டீம அங்க அனுப்பி வைக்கறேன்… அது நம்ம மாவட்டத்து எல்லையில ரொம்ப தூரம் தள்ளி ஒதுக்குப்புறமா இருக்கற வில்லேஜ்கறதால, இதுவரைக்கும் யாரு கண்ணுலேயும் படமா இருந்துச்சு.. ஆனா… கடந்த அஞ்சு நாளா.. அஞ்சு, பத்து, இருபது, நாப்பது, அம்பதுனு இறந்தவங்க எண்ணிக்கை கூட கூட இப்ப கவர்ன்மென்ட் கவனத்துக்கு வந்திருச்சு… “ஓக்கே.. நீங்களும்


உயர்ந்த உள்ளம்!

 

 திருவல்லிக்கேணியில் உள்ள பிள்ளையார் கோவில் திருப்பத்தில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. அதில் நூற்றுக்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்தார்கள். அந்த நிறுவனம் காலை பத்து மணிக்கு இயங்கி மாலை ஆறு மணிக்கெல்லாம் முடிந்து விடும். அந்த நிறுவனத்தில் சரியான நேரத்தில் பணியாளர்கள் அனைவரும் இருக்கையில் அமர்ந்து பணியாற்றவேண்டும். அந்த நிறுவனத்திற்கு வேளச்சேரியில் இருந்து தினமும் சத்தியமூர்த்தி என்பவன் பணிக்கு வந்து செல்கிறான். அவன் பத்து மணிக்கு வந்து இருக்கையில் அமர்ந்து, தனக்குரிய பணியினை ஆரம்பித்து


தேர்தல்

 

 (இந்த கதை கரு என்னுடையது அல்ல, திரு மகரிஷி அவர்களின் 1972ல் எழுதிய “ஒலிபெருக்கிகள் ஓய்ந்து விட்டன” என்னும் சிறுகதையில் இருந்து எடுத்தது) இரவு ஒன்பது மணி ஆகியும் அந்த அலுவலகம் சுறு சுறுப்பாகத்தான் இருந்தது ராஜேஸ்வரி எக்ஸ்போர்ட் கம்பெனி முதலாளியும், மேனேஜிங்க டைரக்டருமான ராமபத்ரன் தனது கம்பெனியின் நிர்வாக தலைவரும் டைரகடருமான மிஸஸ் ரூபாவதியை அழைத்தார். எஸ் சார் உள்ளே நுழைந்த ரூபாவதியை கவனித்தார். வயது நாற்பதுக்கு மேல் இருக்கலாம், இன்னும் அழகு இருந்தது. பார்ப்பவர்களையும்,பேசுபவர்களையும்


குடை சொன்ன கதை!!!

 

 ஒரு குடைக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்கள் எதுவுமே மருதநாயகத்தின் கையில் இருக்கும் குடைக்கு கிடையாது. கருப்பாகஇருக்க வேண்டியது முக்கியமான முதல் தகுதி… ஆனால் இவரது குடை வெளுத்துப் போய் … ஒரு மாதிரி சாம்பல் பூத்த நிறத்தில் இருக்கும்…. இரண்டாவது … பூ மாதிரி நன்றாய் விரிந்து குடுக்க வேண்டும்.இதுவோ ஒரு பக்கம் கோணிக்கொண்டு காற்று இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கும்….!! இரண்டு கம்பிகள் ஒடிந்து போய்விட்டாலும் ஒரு மழைத்துளி உள்ளே விழாமல் இன்னும் இந்த இருபது


நல்ல தம்பிக்கு உதாரணம்

 

 ராமாயண கதை எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதை. அந்தக் காலத்தில் ராமாயண காவியத்தை தெரு கூத்தாகக் காட்டி பரப்பி வந்தார்கள். அப்புறம் ராமாயண கதையை நிறைய நாடகக் கலைஞர்கள் நாடகமாகப் போட்டு பரப்பி வந்தார்கள். கால§க்ஷப வித்வான்கள் ராமாயண கதையை,ஒரு வாரம்,பதினைத்து நாட்கள்,ஒரு மாசம், என்று தினமும் சாயங்காலத்தில் ‘கால §க்ஷபம்’ செய்து வந்து, மக்களுக்கு ராமாயண கதையின் சாராம்சத்தை பரப்பி வந்தார்கள். சினிமா படங்கள் வர ஆரம்பித்தவுடன் எல்லாம் மொழிகளிலும் ராமாயண கதை வர ஆரம்பித்தது.


தாலி ஒரு சுமை..!

 

 “அப்புறம் முடிவா என்ன சொல்றே செங்கமலம்..?” பஞ்சாயத்து தனசேகரன் அவளை பார்த்துக் கேட்டார். ஊர் கூடி இருந்தது. பஞ்சாயத்து மேடைக்கு அருகில்… வலப்புறம் அவள் கணவன் முருகையனும், இடது புறம் செங்கமலமும் எதிர் எதிரே நின்றார்கள். “ஐயா ! நான் படுற கஷ்டம் இந்த ஊருக்கேத் தெரியும். இந்த மனுசன் தன் வருமானத்தை மட்டும் குடிச்சி அழிச்சா பரவாயில்லே. நான், நாத்து நடவு, கொளுத்து வேலைன்னு போய் சம்பாதிச்சு புள்ளைக்குட்டிகளைக் காப்பாத்தற வருமானத்தையும் புடுங்கி குடிச்சி அழிக்கிறான்ய்யா.


தேவதை

 

 கிரிதரன் வேலை முடிந்து தன் பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி போய்கொண்டிருந்தான்,திடீரென்று மழை பைக்கை நிறுத்தி விட்டு அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் ஒதுங்கினான்.எப்போது மழை நிற்கும் என்று எரிச்சல் பட்டுக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான்,சிலர் மழைக்காக ஒதுங்கியிருந்தார்கள்,வேறு சிலர் பேருந்துக்காக நெரிசல் பட்டு காத்துக்கொண்டிருந்தார்கள்.தூரத்தில் ஒரு பெண் குடையுடன் வந்தாள்,நீண்ட கூந்தல்,வட்ட முகம் வர்ணிக்க வார்த்தைகளே இல்லாத அழகு.கிரிதரன் அவள் அழகில் மயங்கிப்போனான்,செதுக்கிய சிலை போலவே இருந்தாள்.அவள் வந்த வேகத்தில்,வந்து நின்ற பேருந்தில்


கடவுள்

 

 நம்மில் பலர் கடவுளை நம்புகிறோமோ இல்லையோ, ஆனால் அவரை நம்முடைய வசதிக்கு ஏற்ப உபயோகப்படுத்திக் கொள்கிறோம். பல சந்தர்ப்பங்களில் பொய்யாக கடவுள் மீது அதீத பக்தி காட்டி மற்றவர்களை நாம் நம்ப வைக்கிறோம். அதுவும் இந்தியா மாதிரி ஒரு பெரிய நாட்டில் பல கடவுள்கள், பல நம்பிக்கைகள். யூ எஸ் போக விஸா வேண்டுமா? அதற்கென்று ஒரு பெருமாள் ஹைதராபாத்தில் இருக்கிறார். அவரிடம் வேண்டிக் கொண்டால் விஸா கிடைத்துவிடும் என்று ஒரு நம்பிக்கை. ஸ்ரீரங்கம் தன்வந்திரியை வேண்டினால்