கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 6, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

அறியாமை என்னும் பொய்கை

 

 நாற்காலியின் ஒரு பக்கத்தில் கையை ஊன்றிக் கொண்டு கன்னத்தில் கை வைத்தவாறு உட்கார்ந்திருந்தார் சாம்பசிவன். பக்திக்கு மணமுண்டு என்று காட்டுவது போல் அவர் உடம்பில் பூசியிருந்த திருநீறு சுகந்தமான வாசனையை அறை முழுவதும் வாரியிறைத்தது. அவர் அணிந்திருந்த கதர்ப் பட்டாலாகிய மஞ்சள் சட்டையின் வண்ணத்துடன் இசைந்து பொலிந்த தங்கப் பித்தான்கள், அவ்வறையில் பாய்ந்த காலை வெயிலின் ஒளியில் மின்னின. அவர் கண்கள் லேசாக மூடியிருந்தன. அவரெதிரே அம்பி ‘படபடப்பாகப் பேசிக் கொண்டிருந்தான். கோபத்தில் அவன் குரல் கிறீச்சிட்டது.


உறுத்தல்

 

 நல்ல இருட்டு. காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் ரொம்ப தூரத்துக்கு நெடுஞ்சாலை தெரிந்தது. எதிரே அவ்வப்போது தொடர்ந்து வந்த லாரிகளின் எதிர் வெளிச்சத்தைக் கட்டுப்படுத்த வேண்டி, விளக்குகளை அணைத்து அணைத்து ஓட்டுவது குமரனுக்குப் பெரும் துன்பமாய் இருந்தது. சில லாரிக்காரர்கள் தங்கள் ஹெட்லைட்டுகளை அணைக்க மறுத்ததால், வேகத்தைக் குறைத்து, சாலை சரியாக இருக்கிறதா என்று கவனித்ததில் காரின் வேகத்தைச் சீராய் எண்பது கிலோ மீட்டரில் வைப்பது கஷ்டமாக இருந்தது. மணிக்கட்டைத் திருப்பிக் கைக்கடிகாரத்தைப் பார்த்தான் குமரன். பதினொன்று. எட்டு


மண்ணின் மைந்தர்கள்

 

 சுபத்ராவுக்கு எதை நினைத்தாலும் அலுப்பாக இருந்தது. இந்த வீட்டில் இருந்த எல்லா ஜீவராசிகள் மீதும் கொல்லையிலிருந்த பசு மாட்டிலிருந்து வாசலில் வெயிலில் காய்ந்தபடி சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் மாமனார் சங்கர்தாஸ்வரை – ஆத்திரம் வந்தது. அது சாதாரண ஆத்திரம் இல்லை – கத்தினோம் கொட்டினோம் வடிகாலில் கரைத்தோம் என்பதற்கு – இது ஒரு சொல்லத் தெரியாத ஊமை ஆத்திரம். வெடித்தால் அவளைப் பைத்தியக்காரி என்று பசுமாடுகூடச் சிரிக்கலாம். இந்த வீட்டிலே நடக்கிற எல்லா அசட்டுத் தனங்களுக்கும் அந்தக்


ஒரு சிறு இசை

 

 வந்த இடத்தில் எங்கள் வீட்டில் வைத்து மூக்கம்மா ஆச்சி இப்படிச் செத்துப் போய்விட்டாள் என்பதில் யாருக்கும் வருத்தம் இல்லை. வெளியே சொல்லிக்கொள்ளவில்லையே தவிர, ‘நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம் அதற்கு ‘என்றுதான் ஒருத்தர் பாக்கியில்லாமல் எல்லோருக்கும் மனதில் தோன்றியிருக்கும். என்னை மூக்கம்மாச்சிக்கு ரொம்பப் பிடிக்கும். ‘எங்க அத்தான் பேரு விட்ட ஆயான் அல்லவா’ என்று சொல்வாள். மூக்கம்மா ஆச்சியும் எங்கள் அம்மாவுடைய அம்மாவும் சகோதரிகள். கூடப் பிறந்தவர்கள் அல்ல. பெரியப்பா சித்தப்பா மக்கள். ஒன்றுவிட்ட அக்காவும் தங்கையும். மூக்கம்மா


இருப்பியல்

 

 பிதா சுதன் போட்டவாறு கோவிலுக்குள் நான் நுழைந்தபோது முன் வரிசை இருக்கையில் அங்கொருவர் இங்கொருவராகக் கொஞ்சம் பேர் ஜெபமாலையும் கையுமாகப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். சுற்றிலும் நிற்கின்ற சுரூபங்களின் காலடிகளில் கண்ணீரும் கம்பலையுமாகச் சிலர்! கட்டாகக் கொளுத்தப்பட்ட மெழுகுதிரிகளின் நெருப்பு வெளிச்சத்தில் கண் மூக்கு எரிய எரிய கன்னங்கள் மின்ன மின்ன, வழிந்தொழுகும் வியர்வையுடன் வழியுயர்த்திக் குத்திட்டு நிற்கும் சிலர்! சிலுவையில் அறையப்பட்டதுபோல் விரிந்த கைகளுடன் பீடத்தை நோக்கி முழங்கால்களால் நகர்ந்தபடி சிலர்! மாதாவின் காலடியில் ஒரு கொழுத்த