கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 4, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

கலையிரவு

 

 ஒவ்வொரு மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையும் இரவில் எங்கள் வீட்டிற்கு ஆட்கள் வருவது வழக்கமாகிவிட்டது. கடந்த மாதம் 16 பேர் வந்திருந்தனர். அவர்களுள் நால்வர் குழந்தைகள். ‘இந்த மாதம் இந்த எண்ணிக்கை இன்னும் கூடும்’ என்றுதான் நினைக்கிறேன். எங்கள் வீட்டில் மாதத்துக்கு ஒருநாளாவது இப்படி ஆட்கள் வருவதும் தங்குவதும் எங்களுக்குப் பிடித்திருக்கிறது. மற்ற நாட்கள் முழுவதும் நானும் என் அம்மாவும் மட்டும்தான் இருப்போம். நான் வேலைக்குச் செல்வதால் அம்மா பெரும்பாலும் தனிமையில்தான் இருப்பார். அவரின் நடமாட்டம் முற்றத்துக்கும் சமையற்கட்டுக்கும்


ஜூனியர் ஆர்டிஸ்ட்

 

 தானொரு சிறந்த நடிகராக வேண்டும் என்பதே சத்தியனின் லட்சியம். வெள்ளித்திரையில் தனது முகம் தெரிந்து விடாதா? என்று ஏங்கும் ஒரு சராசரி மனிதன் மட்டுமல்ல, அதற்கான உழைப்பையும் விடாமுயற்சியையும் தன்னகத்தே கொண்டவன். அவனுடைய முக்கிய மற்றும் முதலாவது வேலை, புதிய படங்களை தயாரிக்கும் அலுவலகம் திறந்த உடனே அதற்கான ஆடிஷனில் கலந்துகொள்வது தான். பல ஆடிஷன்கள் கலந்து கொண்டாலும் தன் திறமையை காட்டும் அளவிற்கு கதாபாத்திரம் கிடைக்காததால், சிறு மனக் குழப்பத்துடன் அவன் காணப்பட்டு வந்தான். அவனுக்கு


இதோ லட்சுமி…!

 

 “இங்க போட்டுக்கலாமா … இல்லன்னா இங்க போடலாமா ? அம்மா கேட்டுக்கொண்டே இருந்தாள் . காலையிலிருந்து அப்பா அம்மா , தங்கை தாரிணி , நான் என்று நான்கு பேருமாய் தோட்டத்தின் ஒவ்வொரு இடமாய் அங்குலம் அங்குலமாய் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தோம் , கூடவே மணி நாக்கை தொங்கபோட்டுக் கொண்டு வாலை ஆட்டிக்கொண்டு வந்தது . எந்த இடம் சரியாக இருக்கும் என்று ஒரு முடிவுக்கு வரமுடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தோம் . ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் பிடித்திருந்தது அதற்கு


ஒரு முடிவின் துவக்கம்

 

 “ஒரு ஆணிலியிடம் உதவி கோரி அரசப் பட்டத்திற்கு வருமளவிற்கு, அத்துணை தரம் தாழ்ந்து விட்டதா, பாண்டிய குலத்தின் வீரமும், மானமும்?” என்ற வீரபாண்டியன், மருத மரத்தின் பெரிய அடிமரத்தண்டில் சாய்ந்து அமர்ந்திருந்தான். அருகே ஆயிரத்தவர் படையின் தலைவன் கந்தசேனன் நின்று கொண்டிருந்தான். அவர்களுக்கெதிரே கொள்ளிடம் ஆற்றின் நீரோட்டம், மாலைக் கதிரொளியில் பொன்னிறத்தில் நெளிந்து ஓடிக் கொண்டிருந்தது. வீரபாண்டியன் அமர்ந்திருந்தது ஒரு தீவு. கொள்ளிடம் ஆறு கடலில் சேருவதற்கு முன், இரண்டாக பிரிந்து ஒரு மேட்டுப் பாங்கான நிலத்தை


மேன்மக்கள்!

 

 M D விஸிட் என்று அலுவலகமே திமிலோகப்பட்டுக்கொண்டிருந்த்து. இரண்டு காரணங்களால். ஒன்று அவர் எல்லோராலும் விரும்ப்ப்படும் அன்பும் அறிவும் ஒருங்கே சேர்ந்தவர். இன்னொன்று அவர் இந்த மாதம் பணி ஓய்வு பெறுகிறார். இப்போது பார்த்து பேசினால் தான் உண்டு. அப்புறம் சொந்த ஊர் போய் விடுவார். பணியில் இருக்கும் போதே அதிகம் ஆடம்பரம் பண்ண மாட்டார். அத்தனை பேரும் பரபரப்பாக தயார் செய்து கொண்டிருந்தார்கள் அவர் வருகைக்காக. ராமசாமிக்கு கையும் காலும் ஓடவில்லை. பழைய நண்பர் அவர்.