கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 2, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

அவள் என் மனைவி

 

 திரைகட லோடி திரவியம் தேடிய தமிழர் பரம்பரையில் வந்தது முத்து ‘கிராண் டிரங்க்’ ஏறி தில்லியை வந்தடைந்தான். பல்கலைக் கழக பட்டமா பெற்றிருக்கிறான் அவன், வேலை கிடைக்காமல் போக? இரண்டு கைகள் இருந்தன; உறுதி இருந்தது மனதில். வந்ததும் வேலை கிடைத்து விட்டது. மத்திய சர்க்கார் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த ஐந்தாறு உத்தியோகஸ்தர்களுடைய வீட்டையும், பாத்திரங்களையும் ‘விளங்க’ வைப்பதுதான் அந்த வேலை… மாதம் நூற்றிருபது ரூபாய் வந்தது. சேலத்தில் இடைப்பாடியைச் சேர்ந்த அவனுக்கு ஊரில் பெரிய


ஸ்டெப்னி

 

 அனுராதா ஒவ்வொரு செடியிடமும் நின்று குனிந்து பார்த்தாள். ரோஜா பூச்சி விழுந்து காணப்பட்டது. மல்லிச் செடிகள் நுனி கருகி இருந்தன. புல் காய்ந்து போயிருந்தது. க்ரோடன்ஸும், அரளியும் தலை தொங்கி வாடியிருந்தன. அம்மா இருந்தால் தோட்டம் இப்படியா இருக்கும்? பணக்கார வீட்டுக் குழந்தைகள் மாதிரி ரோஜாவும், மல்லியும் தளதளவென்று மின்னும், புல் பச்சையாய் கண்ணைப் பறிக்கும், தூசி, தும்பு இல்லாமல் செடியும் கொடியும் என்னைப் பாரேன், பாரேன் என்று கவர்ச்சியாய் கூப்பிடும். மசமசத்த கண்களை இரண்டு தரம்


பேசா மடந்தை

 

 இடுப்பில் ஒரு வயதுக் குழந்தையுடன் பேசாமடந்தை நேற்று ஆற்று வெள்ளத்திலே இறங்கிவிட்டாள். அந்த ஜலப் பிரளயமாவது அவளுடைய மனக் கொதிப்பை ஆற்றியதா என்பது சர்வேஸ்வரனுக்குத்தான் வெளிச்சம்! சித்திரப்பாவை போன்ற பருவத்திற்குப் பேசும் சக்தியையும் அளித்திருக்கக் கூடாதா அந்தப் பொல்லாத பிரம்ம தேவன்! அதுதானில்லை; அவளுக்குப் பிறந்த பெண்ணும் பேசா மடந்தை யாகவேயா இருக்க வேணும்? வயிற்றில் சுமந்திருந்த பத்து மாதமும் தனக்குப் பிறக்க இருந்த குழந்தை பேசுமா, பேசாதா என்ற கவலையில் இரவு பகலாகத் தூக்கமின்றியே காலங்


பக்த கேடிகள்

 

 புலிபாய்ச்சல் என்பார்களே- அதை ஐயப்பனுக்கு உணர்த்த ஆசை பட்டதுபோல், அந்த தெய்வப்புலி, தனது ஐயனைச் சுமந்தபடி, சபரிமலையைத் தாண்டிக் குதித்து, காடுமலை தாண்டி, பள்ளத்தாக்குகளுக்கு மேலாப் பாய்ந்து, சமவெளிக்கு மேலாய் சஞ்சரித்து ஏவுகணை போல எகிறிக் கொண்டிருந்தது. இந்த ஐயப்பன், எந்தச் சமயத்தில் புறப்பட்டாரோ-அந்தச் சமயத்தில், வள்ளிமலையில் குளிர் காய்ந்த முருகன், ஆறுமுகங்களை ஒருமுகமாக்கி மலை உச்சிக்கு ஓடினான். அந்த ஒட்டத்தைப் புரிந்து கொண்ட மயில், இறக்கைகளை ஒய்யாரமாக விரித்து ஹெலிகாப்டர் மாதிரி பாறையில் இறங்கி, அவனை


இது வியாபாரம்!

 

 மணலூரில்‌ மாரிசாமி என்பவன்‌ மளிகைக்‌ கடை வைத்து வியாபாரம்‌ செய்து வந்தான்‌. அவன்‌ மிகவும்‌ நேர்மையானவன்‌. அதனால்‌ உள்ளதைச்‌ சொல்லி சாமான்களை விற்று வந்ததால்‌ அவனுக்கு நிறைய லாபம்‌ கிடைக்கவில்லை. கிடைக்‌கும்‌ லாபமோ குடும்பத்தை நடத்‌தக்‌ கூடப்போதுமானதாக இருக்கவில்லை. அவன்‌ தன்‌ கடையில்‌ வேலையாள்‌ யாரையும்‌ அமர்த்திக்‌ கொள்ள முடியாமல்‌ தன்‌ மகன்‌ தங்கப்பனையே உதவிக்கு வைத்துக்‌ கொண்டான்‌. தங்கப்பன்‌ தன்‌ தந்தையிடம்‌ “என்னப்பா இது! வியாபாரம்‌ சரியாக. நடப்பது இல்லையே. நம்‌ குடும்பச்‌ செலவுக்குக்‌ கூடப்‌