Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2021

128 கதைகள் கிடைத்துள்ளன.

கணக்கர் கடவுள்!

 

 இந்தியா…..ஆண்டு 1978…… இலங்கையிலிருந்து விமானத்தில் பயணித்த போது, விமானத்தின் ஜன்னல் வழியே தெரிந்த நீலக் கடலின் அழகை ரசிக்கும் மன நிலையில் நான் இல்லை. இரண்டு வருடங்கள் கழித்து அப்பாவைப் பார்க்கப் போகிற சந்தோஷமும் இல்லை. மனம் நிறைய கவலையே நிறைந்து இருந்தது. அவசரப் பயணம் என்பதால் மதிப்புள்ள சாமான்கள் எதுவும் கொண்டு செல்ல வில்லை. கஸ்டம்சில் நேரம் எதுவும் வீணாகவில்லை. ஆனாலும் சென்னைக்கே உரித்தான ரௌடிகளின் மிரட்டல், விமான நிலையத்திலேயே ஆரம்பித்து விட்டது…. “அந்த ஆபிசர்


புத்தி பெற்றவர்கள்!

 

 வாசலில் உள்ள பெயர் பலகையை, ஒரு முறைக்கு இரு முறை நன்றாக உற்றுப் பார்த்து படித்து மனத்தைத் திடப்படுத்திக்கொண்டுதான் வசுமதி அந்த வீட்டு அழைப்பு மணியை அழுத்தினாள். ஐந்து நிமிடத்தில்….. நாற்பது வயது மதிக்கத்தக்க தணிகாசலம் கதவைத் திறந்து இவளைக் குழப்பமாகப் பார்த்தார். “நீ… நீங்கதானே நிர்மல் – விமல் கம்பெனி மேலாளர்..?” இவள் சற்றுத் தடுமாற்றத்துடனேயேக் கேட்டாள். “ஆமாம் !” – என்ற இவர் இன்னும் புரியாமல் அவளைப் பார்த்தார். “”உங்க கம்பெனியில் வேலை செய்யிற


தாயுமானவன்

 

 சிவனே என் சிவனே!!! அன்று காலை முதலே, பர்வதம் மிகவும் பரபரத்துக்கொண்டு, கோவிலுக்கு கொண்டு போக வேண்டிய சாமான்களெல்லாம் சரியா இருக்கா என்று பார்த்துப்பார்த்து எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள். சிவராமன், பர்வதம் சொன்னபடி எல்லா சாமானும் கடைக்குப் போய் தானே வாங்கி வந்தார். பர்வதம், குழந்தைகள் இருக்கும்போது, இதெல்லாம் சுலபமா நடந்த்துடீ. இப்போ நாம செய்ய வேண்டியிருக்கும்போது, இயலாமையா இருக்கு. நீ கொஞ்சம் குறைச்சுக்ககூடாதா? வயசானது அந்த சிவனுக்குத் தெரியாதாடீ? என்று தன் இயலாமையை இறக்கி வெச்சார். காலையிலேயே


சமையல் சோம்பேறிகள்

 

 ஞாயிறு விடிகாலை… ரெஸ்ட் ரூம் போவதற்காக எழுந்திருந்தவளை விஸ்வநாத ஐயர் “கல்யாணி, பெரியப்பாவுக்கு சூடா ஒரு காபி போட்டுக்கொண்டு வாயேன்…” என்றார். கல்யாணி பதில் பேசாமல் விறுவிறென கிச்சனுக்குள் நுழைந்து காபி மேக்கரில் காபி போட்டு, அவரின் மனைவிக்கும் சேர்த்து இரண்டு காபிகள் எடுத்து வந்தாள். கல்யாணி போட்டுக் கொடுத்த காபி சகிக்கவில்லை. விஸ்வநாத ஐயர் முகத்தைச் சுழித்துக் கொண்டார். எனினும், தம்பியின் மாட்டுப் பெண்ணாயிற்றே என்று வெறுப்புடன் குடித்து வைத்தார். இந்தக் காலத்துப் பெண்களுக்கு ஒரு


துணை

 

 கடபுடா சப்தத்துடன் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்தச் சப்தத்தையும் மீறி கம்பார்ட்மெண்டில் இருந்தவர் களின் பேச்சு ஒலித்தது. வண்டி கை காட்டியைத் தாண்டி இருக்காது. ‘நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ நட்டாற்றில் கை நழுவ விட்டேனோ ஆசை காட்டி மோசஞ் செய்தேனோ அன்புடையவர்க்குத் துன்பம் செய்தேனோ…….’ ராமலிங்க அடிகளாரின் இந்தப் பாடல் கணீரென அப் போது ஒலித்தது. எல்லோரையும் மெய் சிலிர்க்க வைத்தது. ஊர்வம்பு பேசி வந்தவரும், நகைச் சுவையென்று ‘ஹோஹோ’ என்று சிரித்துப் பேசி வந்தவரும்,


புதிர்

 

 படுக்கையில் புரண்டு படுத்த பட்டுவை அத்தையின் கீச்சுக் குரல் தட்டி யெழுப்பியது. கண்களைக் கசக்கி விட்டுக் கொண்ட குழந்தை ஒன்றும் விளங்காமல் நாற்புற மும் நோக்கி விழித்தாள். அத்தை பாகீரதிக்கு அவள் விழிப்பதைக்கண்டு சிரிப்பு வந்தது. ” என்னடி பட்டு? அப்படி விழிக்கிறாயே? இன்றைக் குச் சாவித்திரி அக்காவுக்குக் கல்யாணமல்லவா? எல்லா ரும் எழுந்து குளித்துத் தயாராகிவிட்டார்கள். நீ மாத்திரம் இன்னும் தூங்கிக்கொண்டே யிருக்கிறாயே. எழுந்திரடி சீக் கிரம்!” ஒரு வினாடி திகைப்புடன் மலர விழித்த குழந்தைக்குச்


அன்னை

 

 சுள்ளிக் கத்தையை ‘மளுக் மளுக்’ கென்று முறித்து வைத்து ஊதாங் குழலினால் ‘சுர் ‘ரென்று அடுப்பை ஊதி விட்டாள் செல்லி. அடுப்பின் மீது இருந்த சோற்றுப் பானையில் அரிசி ‘தள தள’வென்று கொதிக்க ஆரம்பித்தது. குடிசையின் மூலையில் முடங்கிக் கிடந்தான் துரை என்கிற அவள் மூத்த மகன். இளைய பையன் கதிர்வேலு மட்டும் மிகவும் விழிப்பாகத் தாயின் எதிரில் சோற்றுக் கிண்ணத் துடன் சாப்பாட்டுக்காகக் காத்திருந்தான். செல்லி சோற்றை வடித்து நிமிர்த்தியதும் பக்கத்தில் இருந்த அகலமான சட்டியில்


கவலை

 

 ஒவ்வொரு முதல் தேதியும் மாணிக்கம் கடன் வசூல் செய்ய சிவசங்குவின் ஆபீஸ் வாசலில் ஆஜராகி விடுவார். தம்புச் செட்டித் தெருவில் உள்ள அந்தக் கம்பெனியின் வாசலில் ரஸ்தாவில் நின்றுகொண்டு ஜன்னல் வழியே மாணிக்கம் உள்ளே எட்டிப் பார்ப்பதும், சிவசங்கு தலையை உள்ளே இழுத்துக் கொண்டு ‘பைல்’ கட்டுகளுக்கிடையே முகத்தைப் புதைத்துக் கொள்வதும், காரியாலய நண்பர்கள் கண்டும் காணாதது போலிருந்து ரசித்த ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு. பதினைந்து நிமிஷ விளையாட்டிற்குப் பிறகு சிவசங்கு – என்ன இருந்தாலும் கடன்


கௌரி

 

 நாங்கள் வீடு திரும்பியபோது இருள் அடர்ந்து விட்டது. தெருவின் நிசப்தமும் பெருகிய இடைவெளியில் அமைந்திருக்கும் விளக்கேற்றிய வீடுகளும் என்னை மயக் கின. ஆனால் அந்த அழகு மயக்கத்திலே லயித்திருக்க என் மனைவி விடவில்லை. ‘சீக்கிரமாக நடங்களேன். மாப்பிள்ளை வந்து காத்துக் கொண்டிருக்கப்போகிறார்’ என்று என்னைக் கடிந்து கொண்டாள். ஆனால் வீட்டுக் கதவை நாங்கள் தான் திறக்க வேண்டி யிருந்தது. மாப்பிள் ளையும் பெண்ணும் இன்னும் வரவில்லை. வீட்டினுள் நுழைந்ததும் பக்கத்து வீட்டு மராத்தியப் பெண் ஒரு கடிதத்


வேப்பம் பழம்

 

 கிழக்கு வானத்தில் பகல் பூத்துக் கொண்டிருந்த நேரம். மண்ணுலகத்து இன்பமெல்லாம் ஒன்று சேர்ந்து காற்றாய் வீசுவதுபோல் வேப்ப மரத்துக் காற்று வீசிக் கொண்டிருந் தது. காகம் கரையும் ஒலி, மேல வீட்டுப் பாகவதர் பூபாளம் பாடும் அழகு, பக்கத்து வீட்டு மாட்டுக் கொட் டத்தில் பால் கறக்கும் ஒலி, தெரு வாசலில் சாணம் தெளிக் கும் ஓசை, இடையிடையே வாசலில் கோலம் போடும் பெண் கரங்களின் வளைக்குலுங்கல், கோவில் விசுவரூப மணியோசை காற்றில் மிதந்து வரும் நாதம்….