Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2021

128 கதைகள் கிடைத்துள்ளன.

சுவடு

 

 “அம்மா , தபால் ….!” தபாற்காரன் கையில் ஒரு கடிதத்தை வைத்துக் கொண்டு அழைத்தான். “அப்பா எழுதியிருப்பார்! இந்த விடுதலைக்கு இங்கேயே வந்துவிடு என்று!” கையிலிருந்த புத்தகத்தை அப்படியே மேசையிற் போட்டுவிட்டு, எழுந்து தெருக்கதவை நோக்கி ஒல்கி ஓசித்து, நடந்தாள் ராஜலட்சுமி. “சே! அப்பாவினுடைய கடிதம் நேற்றுத்தானே வந்தது. இன்றைக்கும் எதற்காக அவர் எழுதப்போகிறார்!” “ஒருவேளை யாராவது சினேகிதிகள் எங்கேயேனும் வரும்படி- வந்து சந்திக்கும் வண்ணம் – கேட்டு எழுதி யிருக்கலாம்” “அப்படியென்றாலும் எனக்கு யாரிருக்கிறார்கள்? —


இறைவன் எங்கே?

 

 “அம்மா !” “என்னடா வேணும்!” “அம்மா… வந்து…! கோயிலுக்குப் போகக் கண்ணன் கூப்பிட்டானம்மா! கோயிலுக்கு ஏனம்மா நாமெல்லாம் போறல்ல? அவங்க எல்லாம் ஒவ்வொரு வெள்ளியும் போ றாங்களே?” கேள்விக்குறியோடு தாயை நோக்கினான் முருகன். “நாமெல்லாம் அங்க போகக் கூடாதுடா, முருகா!” என்று கூறிவிட்டுக் கைவேலையிற் கவனஞ் செலுத்தினாள் முருகனின் தாய். “ஏம்மா! போகக்கூடாது?” தாயின் கவனத்தை மீண்டும் தன்பால் இழுக்க முயன்றான், முருகன். “நாம கூடாதவங்க. அதனால் தான் கோயிலுக்கு ளெல்லாம் போகக்கூடாது?” “மத்தவங்கெல்லாம் நல்லவங்களா? நான்


எட்டு மாதங்கள்

 

 சே! எவ்வளவு நேரமென்று இந்தப் பஸ்ஸிற்காகக் காத்துக்கொண்டிருப்பான் மனுஷன் …” ஒரு மணித்தியாலமாகப் பஸ்ஸிற்காகக் காத்துக் கொண்டிருந்த யாரோ ஒருவர் அலுத்துக்கொண்டார். அவர் அலுத்துக்கொண்டதையோ, பஸ் வந்து நின்றதை யோ கவனிக்காமல் தில்லைநாயகம் சிந்தனையில் மூழ்கி நின்றான் … கூட்டம் முண்டியடித்துக்கொண்டு – ஸ்ஸிற் குள் நுழைய முனைந்தது. “ஏய், இறங்கட்டுமே! என்னையா அவசரம் உயிர்போ றதுபோலே …!” கொண்டக்டர் அதட்டினார். கூட்டத்திற்கு இதற்கெல் லாம் மசிந்துபோக வேண்டும் என்ற நினைப்புத் தோன்ற வில்லை. ஆறுதலாக ஏறுவதிலும்


வாரிசு

 

 “ஐயா! புண்ணியமுண்டாகும்! ஏதும் தாங்க!” இது மாத்தறை நில்வளகங்கைப் பாலத்தைக் கடப்பவர்கள் கேட்கும் குரல். அது அவ்வழியாற் போவோர், வருவோர் அனைவருக்கும் பழக்கப்பட்ட சிராஜின் குரலல்லவா? ஆம்! அவன் பிச்சைக்காரன். ஆனால், கலைப்பித்துக் கொ ண்ட பிச்சைக்காரன். அவன் புல்லாங்குழலை இசைக்க ஆரம்பித்துவிட்டால், சனக்கூட்டத்தையே கட்டுப்படுத்த முடியாது. அவ்வழியாற் போவோர் வருவோர் அனைவரும் சிராஜின் புல்லாங்குழலிசையில் மெய்மறந்து ஒரு கணமே னும் தாமதித்தே செல்வர். அந்த அளவுக்கு அவனிடம் கலையின் கைவன்மையிருந்தது. அன்று வழமையான அந்தப் புல்லாங்குழலோசை


ஏமாற்றம்

 

 விடிந்தாற் புதுவருடப் பண்டிகை. இரவு பன்னி ரண்டு மணிக்கே ஊரெல்லாம் வெடிச் சத்தங்கள் கேட் கத் தொடங்கிவிட்டன. தாயினுடைய அரவணைப்பி லிருந்து நழுவிச் சற்று எட்டத் தூங்கிக்கொண்டிருந்தாள், வாசுகி. பக்கத்து வீட்டிற் ‘படீர்’ என்றொரு வெடி. சிறுமி கண்விழித்துக்கொண்டாள். ஊரெல்லாம் கேட்கும் வெடிச்சத்தங்கள் அவள் பிஞ்சு உள்ளத்தை வேதனைக் குள்ளாக்கின. படுக்கைக்குப் போகுமுன்பு நடந்த நிகழ்ச்சி அவள் மனதை விட்டு அகலவில்லை…… “அம்மா, மாமா பட்டாசு தந்தார். நாளைக்குச் சோக் காகச் சுடுவேன்!” “அந்தப்பட்டாசுக் கட்டை இங்கே


பாதி மலர்!

 

 சரசு யன்னலுக்கூடாக வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் உள்ளத்தைப் போலவே வெளியே வெறுமை முத்திரையிட்டிருந்தது….. வெளியே – சித்திரை மாதத்துக் கோடை வெயில் தகித்துக் கொண்டிருந்தது. அந்த வெயிலின் தகிப்பிலே ‘தார் றோட்’டெல்லாம், உருகி அவற்றின் மேற் கானல் நெளிந்தாடிக்கொண்டிருந்தது… அந்தத் தார் றோட்டில் அந்த உச்சிப் பொழுதில் ஒருகாக்கைக்குருவியைக் காண வேண்டுமே?… இடையிடையே அந்தப் பாதையிற் பயங்கரமாக ஓசையிட்டுக்கொண்டுவரும் லாரிகளையும், கடகடவெனத் தனது வருகையைப் பறைசாற்றி வரும் ‘இ.போ.ச.’ பஸ் வண்டிகளையும் தவிர எந்தவிதப் போக்கு


இறுதி மூச்சு

 

 வேலப்பன் கையிலிருந்த சில்லறையை எண்ணிப் பார்த்துக் கொண்டான். சரியாக ஒரு ரூபாய் நாற்பத் தைந்து சதம். முதுகு முறிய மூட்டைசுமந்து சம்பாதித்த பணம். பத்திரமாக வேட்டித்தலைப்பில் முடிந்து கொண்டான். வேலப்பனை எதிர்நோக்கிச் சேரியிற் கிடக்கும் ஆறு மனித உயிர்களுக்கு இந்த ஒரு ரூபா நாற்பத்தைந்து சதம் தான் ஒரு வேளைக் கஞ்சியாவது ஊற்றவேண்டும். அதாவது கிடைத்தால், அந்தச் சேரி உயிர்கள் அதிர்ஷ்ட சாலிகள். ஆனால், வழியில் அதை விழுங்கி விடு வதற்கென்றே கிடக்கிறது, ஒரு கள்ளுத் தவறணை.


வாழ்க்கைத் துணை

 

 திறந்திருந்த ஜன்னலின் வழியாகக் குளிர் காற்று வீசியது. அந்த அறைக்கு அது குளிர்ச்சியைக் கொடுத் தது. கட்டிலிலே படுத்திருந்தாள், உமா. அவளைத் தவிர அந்த அறையில் வேறு எவருமே இல்லை. கட்டிலிலே படுத்திருந்தாலும் அவள் நித்திரை கொள்ளவில்லை. அது ரித்திரை கொள்ளும் நேரமுமல்ல. அந்த அறையிலே இருந்த குளிர்ச்சியை அவளின் உள்ளத்திலே காண முடியவில்லை. அவளின் கண்கள் எதிரேயிருந்க மணிக்கூட்டையே பார்த்துக் கொண்டிருந்தன. என்றுமேயில்லாத வகையில் அவளின் பார்வையிலே ஒரு புதுமை. ‘டிங்…டாங்…’ மணிக்கூட்டிலிருந்து புறப்பட்டது ஒலி.