கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2021

127 கதைகள் கிடைத்துள்ளன.

முரட்டுக்காளை…

 

 “தாத்தா… தாத்தா… டோக்கன் வாங்கிட்டேன். நாளைக்கு பதினோரு மணிக்கு நாம அங்க இருக்கணும்.” என்று சந்தோஷமாக ஓடி வந்தான் கணேசன். “அப்படியா, சரிப்பா கணேசா, ஆனா காலைலயிருந்து மருது கத்திகிட்டே இருக்கான்.. என்னான்னே தெரியல.” “தண்ணி வச்சீங்களா, தீனி போட்டீங்களா..?” என்றான் கணேசன்.. “எல்லாம் வைச்சாச்சு, ஆனாலும் கத்துறான். கண்ணு பக்கத்துல ஏதோ அடி பட்டிருக்கு.. டாக்டர வர சொல்லிருக்கேன்..” என்று தாத்தா சொன்னவுடன் பதறி அடித்து மருதுவிடம் ஓடினான் கணேசன். பதினொன்றாம் வகுப்பு படிக்கும் கணேசனும்,


வேலை

 

 நிர்மலா அவசர அவசரமாக ஆபிஸ்க்கு கிளம்பினாள்,சரியான நேரத்திற்கு போகாவிட்டால் மெனேஜர் முறைப்புக்கு ஆளாகவேண்டிவரும் அது அவளுக்கு எப்போதும் பிடிக்காது,எப்படியும் சரியான நேரத்திற்கு போய்விடுவாள்.அதனால் தான் காலையில் இவ்வளவு பரபரப்பு,பதட்டம். ஐந்து மணிக்கு எழும்பும் அவள்,அவசரமாக பல் தேய்ச்சி காலை கடன்களை முடித்தப் பிறகு,சமைக்கத் தொடங்குவாள்.சாதம்,சாம்பார்,கூட்டு,பொறியல் செய்து, காலை டிபனையும் செய்து முடிப்பாள்,அருணுக்கு பெட் காப்பி கொடுத்து விட்டு, கவின், கவிதாவை எழுப்புவாள்.அவர்களைப் பல் தேய்க்கவைத்து குளிக்கவைத்து,பால் காய்ச்சி இருவருக்கும் குடிக்கவைப்பதுவே,பெரும்பாடாக இருக்கும் அவளுக்கு காலையில். கவிக்கு ஏழு


கார்பரேட் கம்பெனியில் பாட்டி வடை சுட்ட கதை

 

 கண்ணயர்ந்திருந்த ராமகோபாலன், வீட்டின் காலிங் பெல் சத்தம் தொடர்ந்து அடித்ததால் வெளியே போய் எட்டிப் பார்த்தார். ”அடே, அடே, வாப்பா இராஜேஷ்” என உள்ளே கூப்பிட்டு போனார். என்ன அங்கிள் வெளியே போகலையா? என்று கேட்டான் இராஜேஷ். அதற்கு ” வெயில் கொளுத்தறதால வீட்டை விட்டு எங்கும் போகவில்லை என்றார் ராமகோபாலன். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது…. “அங்கிள் சாக்லேட், அப்புறம் ஒரு கதை” வழக்கமாய் கேட்பது போலவே அன்றும் கேட்டான் ராமகோபாலனின் பேரன் சீனு. இராஜேஷ் தன்


மூளைக்கூலிகள்

 

 கே.எல்.ஐ.ஏ, எனும் கோலலம்பூர் அனைத்துலக விமான நிலைய காத்திருப்பு முகப்பு. அன்றுதான் சுப்பிரமணியமும் செல்லம்மாவும் முதன் முறையாக வந்திருந்தார்கள். விமான நிலையத்தின் பரபரப்பும் சுறுசுறுப்பும் அனைத்துகலப் பயணிகளின் சலசலப்பான உரையாடல்களும் எதை யோசிப்பது எதை விடுவது என்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றுகொண்டிருந்தார்கள். மகன் அரசனை யார் யாரோ வந்து வாழ்த்தினார்கள். அவன் அருகில் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்கள். ஒரு சிலர் வந்து இவர்களுக்குக் கை நீட்ட கை கொடுக்கும் கலையை அறியாதிருந்தும் முதன் முறையாக அன்று


பையன் வைத்த பரீட்சை…!

 

 அலுவலகத்தில் டாணென்று மணி நாலு அடிக்கிறதோ இல்லையோ எனக்குள் டீ குடித்து ஒரு தம்மடிக்க வேண்டும் என்கிற உணர்வு தானாக வந்துவிடும். பத்து வருட பழக்கத் தோசம்! படித்து முடித்து வேலைக் கிடைக்காமல் கஷ்டப்படும் காலத்தில்… ‘புண் பட்ட மனதை புகை விட்டு ஆற்று !’ என்று என் நண்பன் தொட்டு வைக்க….. தொடர்ந்த பழக்கம் இது. தாமதித்தால் தலைவலி வரத் தொடங்கும். மற்றவர்களை விழுந்து பிடுங்கத் தோன்றும். அனாவசியமாக அவர்கள் வலி படுவார்கள். எனக்கும் வலி.


கடவுள் மீண்டும் வருவாரா…?

 

 கடவுள் தனியாக இருக்கிறார். எங்கும் அமைதி, மயான அமைதி என்பார்களே. மனம் வெற்றிடமாய்க் கிடக்கிறது. செய்வதற்கு எதுவுமில்லை. வெறுத்துவிட்டது அவருக்கு. எம்மால் உருவாக்கப்பட்ட பூமிக்கு ஒருதடவை போய்ப் பார்க்கலாமே என்று அங்கு வருகிறார். அவர் சிந்தையில் ஏதோ தட்டுப்படுகிறது. எடுத்துப் பார்க்கிறார், ஒரு டைனோசரின் எலும்பு அது. அட, இந்த டைனோசரையாவது அழிக்காமல் விட்டிருக்கலாமே. இவையிருந்திருந்தால் இவற்றைப் பார்த்தாவது பொழுதைப் போக்கியிருக்கலாமே. அவர் மனம் இப்பொழுது ஏங்குகிறது. இதுவரை ஒர் அறிவு முதல் ஐந்தறிவு வரையுள்ள விலங்குகளை


சொர்க்க வாசல்

 

 இன்று வைகுண்ட ஏகாதசி. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் எப்போதும்போல பயங்கரக் கூட்டம். வருடா வருடம் நான் வைகுண்ட ஏகாதசி அன்று தவறாமல் அரங்கனைச் சேவித்து விடுவேன். இன்றும் வழக்கம்போல் அரங்கனைச் சேவித்து, பரமபத வாசலையும் கடந்து மணல் வெளியில் காற்றாட சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். திடீரென என் அருகில் ஒரு மெல்லிய குரல் கேட்டது. “அதான் சொர்க்க வாசலை இப்ப தாண்டியாச்சுல்ல… சரி இப்பவே என்னோட நீ வா போகலாம்…” குரல் வந்த திசையில் பார்த்தால், சாட்சாத்


அகதி

 

 அவசரமாக நிலக்கீழ் தொடரூந்திலிருந்து இறங்கி படைகளில் ஏறினேன். ‘பின்னேரம் வேலைக்கும் போகவேணும்’ ‘அதுக்குள்ள எத்தனை அலைபேசி வந்திருக்குமோ தெரியாது’. சனக்கூட்டம் அதிகமாக இருந்தது. எல்லோரின் முகத்திலும் அதே அவசரம்… சிலர் கைகளில் அன்றைய தினசரி…புத்தகம்,சிறிய அல்லது பெரிய கைப்பை..அதை விட அலைபேசியை நோண்டியபடி வருவதும் போவதுமாய் இருந்தனர். இரண்டு மூன்று எனப் படிகளில் காலை வைத்துவிட்டேன். கடகடவென்று மேலிருந்து வந்தவன் இடித்துவிட்டு ஏதும் நடவாதது போல கீழிறங்கினான். எதுவுமே அவனிடமிருந்து வரவில்லை…இடித்ததற்கான சமாதானம் அவனிடமிருந்து இல்லவே இல்லை.


அன்னப்பறவை வாகனம்

 

 ஆவடி நகராட்சி துவக்கப்பள்ளியில் நாலாம் வகுப்பில் படிக்கும் காத்தமுத்துக்கு பள்ளிக்கூடம் செல்ல விருப்பம் அதிகம். அதற்கு மூன்று முக்கியமான காரணங்கள். முதலாவது மணக்க மணக்கக் கிடைக்கும் மதிய உணவு. அடுத்தது வீட்டிலிருந்து பள்ளிக் கூடம் போகும் வழியில் சாலையோரம் நிறுத்தி வைத்திருக்கும் விதவிதமான அலங்காரங்களுடன் கூடிய வாகனங்கள். கடைசியாக பத்தாம் வகுப்பில் படிக்கும் ஸ்டீபன் அண்ணன். பள்ளிக் கூடத்தில் போன வருடம் மைதானத்தின் ஓரத்தில் இருந்த அந்த கழிப்பறையில் சிறுநீர் கழித்து விட்டு வகுப்புக்கு வரும் போது


இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்…எல்லாம் சௌக்யமே…!!!

 

 இந்த உலகத்திலேயே இலவசமாக கிடைக்கக் கூடிய விஷயம் என்னவென்றால் உபதேசம் மட்டுமே.அது கேட்காமலேயே தாராளமாகக் கிடைக்கும். “ஒரு வாரமாக பசியே எடுக்கல.” இப்படி சொல்லிப் பாருங்கள்.. “ஸார்.இது கண்டிப்பா கேஸ் டிரபிள் ‘ தான்.நீங்க என்ன பண்றீங்க… வெறும் வயத்தில ஒரு கிளாஸ் தண்ணில.. இரண்டு மூணு இஞ்சி துண்டு..கொஞ்சம். ..பட்டை..பொடிச்சு போட்டு…”என்று ஆரம்பித்து.. “ஸார்..இது வெறும் அஜீரணக் கோளாறுதான்… சாப்பிட்டதும் ஒரு வெத்தலைல ஒரு சின்ன பூண்டு பல்லை வச்சு … மென்னு முழுங்கி பாருங்க…மூணேநாள்தான்”