கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 28, 2021

8 கதைகள் கிடைத்துள்ளன.

அற்றது பற்றெனில்

 

 ரயில் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டு ‘ஸ்டேஷனு’க்குள் தயங்கித் தயங்கிச்சென்றது, தமது மனநிலையைச் சுட்டிக் காட்டுவது போல் தோன்றிற்று. சபேசனுக்கு. கும்பகோணம் வந்துவிட்டது. இன்னும் அரை மணி நேரத்தில் சாரங்கபாணி சன்னதித் தெருவுக்குச் சென்று…. மூன்று தலைமுறையாக அவருக்குச் சொந்தமாக இருக்கும் வீட்டை அடைந்து விடலாம். இந்தத் தலைமுறையில், அவருக்கு வீட்டின் மீது வாரிசு உரிமையிருந்ததே தவிர, அநுபவ உரிமை இல்லை. ஐம்பத்தெட்டு வயதில் மத்திய அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றதிலிருந்து சங்கரய்யரும் அவர் மனைவி நீலாம்பிகை


புலியும் பூனையும்..

 

 கணவனும் மனைவியுமாக, பனகல் பார்க்கிலிருந்த அந்தத் துணிக்கடையிலிருந்து வெளிவந்தபோது மாலை மணிநான்கு. மனிதர்களை பதட்டத்துடன், அலையவைத்துக்கொண்டிருக்கிற வெயில். ஆண் பெண்பேதமின்றி வியர்வையில் ஊறியிருந்தனர். பெண்களின் கை இடுக்குகளில் வெண் சாம்பல் பூத்திருந்தது. சிலரது கன்னக் கதுப்புகளில் இடம்பெயர்ந்து, கண்மை. பின்னல்களில் பழுத்துக்கிடந்த மல்லிகைச் சரம். ஒழுங்குபடுத்தப் படாத போக்குவரத்து, ஆதில் நீரில் விழுந்து கரையேற முயற்சிக்கிற நாய்களைப்போல வாகனங்கள். இஞ்சி, புதினா, பச்சைக்கற்பூரம், ஸ்டிக்கர்பொட்டு, வளையல், உள்பாடி, பனியன், ஜட்டி, சாமி சரணம், பணம் அள்ள பத்துவழிகள்,


குடிமகன்

 

 ராஜபாளையம் செல்லும் அந்த மையச்சாலையில் ஒரு கவட்டை போல இரண்டாக சாலை பிளந்து, அதில் இடது பக்கமாய், இரு தூண்களோடு அகன்று நின்ற உயரமான சிமெண்ட் வளைவு வழியே சென்று, சாலையின் இரண்டு புறமும் யார் வருகையையோ எதிர்பார்த்தபடி வேங்கை, கொன்றை, வேப்ப மரங்கள் குடை பிடித்து நின்ற மடவார்வளாகம் சாலையில் சென்று, இடது புறத்தில் பரந்து, விஸ்தாரமாய் இருந்த பல் டாக்டர் தக்ஷிணேஸ்வரனின் பங்களா முன்பு இருந்த வேப்ப மர நிழலில் ஒதுங்கி, தன்னுடைய மிதிவண்டியை


எங்கே யாருக்கு எதுவோ?!

 

 படுக்கையில் புரண்டு புரண்டு படுத்து, வலி எடுத்தது தான் மிச்சம்!… துாக்கம் விரைவில் வந்து கண்களைத் தழுவுவதாகத் தெரியவில்லை. ஒரு காலத்தில், காதலின் ஏக்கத்தால் தூக்கம் வரவில்லை…. இப்பொழுது முறிந்து போன பத்து வருட காதல் வாழ்க்கையை நினைத்து நினைத்து துக்கத்தால் தூக்கம் வரவில்லை! காதல்…. எவ்வளவு பொய்யான விஷயம்!.. ஜாதி, மதம் நிறம், மொழி வித்தியாசங்கள் பார்க்காமல் பத்து வருட காலமாகக் காதலிப்பதாகக் கூறிக் கொண்டு, கடைசியில் அப்பனின் சொத்து கை நழுவி விடுமோ என்ற


நிஷ் காம்ய கர்மா

 

 ஜனக ராஜா, சீதையின் தந்தை, ராமனின் மாமனார், மிதிலையின் அரசர், ஒரு சிறந்த கர்ம யோகி. ஜனக ராஜா , அஷ்டவக்கிரர் எனும் மகாமுனியின் சீடர். ஜனகரின் குணம் அறிந்து, ஜனக ராஜாவை தன்னுடன் என்றும் ஆசிரமத்திலேயே வைத்துக் கொள்ளாமல், நாட்டை ஆள திருப்பி அனுப்பி வைத்துவிட்டார் அஷ்டவக்கிரர். நாட்டை ஒரு சிறந்த கர்ம யோகி ஆண்டால் நாட்டுக்கு நல்லது தானே ? அடிக்கடி தன் குருவைக் காண, அவரோடு பேச, அவர் உரைகளை கேட்க ஜனக


அம்மா..!

 

 அம்பிகாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. நினைக்க நினைக்க ஆத்திரம் வந்தது. ‘ அம்மா…..ஆ…! ‘ வார்த்தையை வெளியில் விடாமல் பல்கலைக் கடித்துக் கொண்டு சுவரை வெறித்தாள். அம்மா இருந்தவரைக்கும் இவளுக்கு அல்லலில்லை, அக்குதொக்குகளில்லை. அவள் இறந்து எடுத்த பிறகுதான் பிரச்சனை படலம் ஆரம்பமாயிற்று. பதினாறு படத்திறப்பு முடிந்து பதினேழாம் நாளிலிருந்தே படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஏழெட்டுப் பேர்கள். ஒவ்வொருவர் கையிலும் ஒரு புரோ நோட்டு – கடன் பாத்திரம். ஐந்தாயிரம், பத்தாயிரம் என்று வாங்கி அம்மா கைப்பட எழுதி


மயில் பொம்மை

 

 நடையை எட்டிப் போட்டாள் தேவகி. இன்னும் ஐந்து நிமிடத்தில் போய்விடலாம். சூப்பர்வைசர் ஆறுமுகம் கண்ணில் படாமல் கம்பெனிக்குள் நுழைந்து விட்டால் போதும். ஏற்கனவே மூன்று நாட்கள் லேட். அதற்கு மேல் லேட் ஆனால் சம்பளத்தில் கை வைத்து விடுவார்கள். ‘போன மாசம் அப்படிதான் அஞ்சலையக்கா சம்பளத்த புடிச்சிட்டாங்க. எல்லாம் இந்த ஆறுமுகத்தால. போட்டுக் குடுத்துட்டான்’ என்று நினைத்தவாறு வேகமாக நடந்தாள் . நேற்று இரவு அவள் கணவன் குடித்து விட்டு வந்து ஒரே தகராறு. தூங்குவதற்கு வெகு


ஒளிவட்டம்

 

 ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் ஒரு ஒளிவட்டம் இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் AURA என்பார்கள். அனைத்து மத ஸ்தாபர்கர்கள்; மஹான்கள்; ஞானிகள், பெரியோர்கள் ஆகியோரின் தலையைச்சுற்றி ஒரு ஜோதி வட்டம் எல்லாப் படங்களிலும் போடப்பட்டிருப்பதே இதற்குச் சான்று. ஒளிவட்டத்தை மனித உடலிலிருந்து உடலைச் சுற்றிலும் நிரந்தரமாக வரும் ஒளிவீச்சு என்று விவரிக்கின்றனர். (permanent radiation). இந்த ஒளிவட்டங்கள் நான்கு விதமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவைகள் நிம்பஸ்; ஹாலோ; அரோலா; க்ளோரி என்பவைகள். நிம்பஸும் ஹாலோவும் தலையிலிருந்து வருபவை. அரோலா முழு