கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 2, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

இருளைத் தேடி…

 

 பத்து வருடங்களுக்குப் பின், சிறிதும் எதிர்பாராத நிலையில், சற்று முன் பட்டணத்துச் சந்தடியில் சந்திக்க நேர்ந்துவிட்ட பட்டுவும் ருக்குவும் அந்த ஓட்டலின் தனியறையை நாடி வந்தனர்; காப்பி குடிக்கவும், கொஞ்சம் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசவும் அது வசதியான இடம். வாழ்க்கைச் சந்தியில் இருவர் சந்தித்து இணைய முடிவது எவ்வளவு சாதாரணமும் இயல்புமாகுமோ, அதே அளவு இயல்பானதுதான் இருவர் சந்தித்துப் பிரிந்து விலகிப் போய் விடுவதும்… இந்தப் பத்தாண்டுகளில் இருவருக்குமே எத்தனையோ தரப்பட்ட, வகைப்பட்ட சிநேகிதிகள் கிடைத்திருப்பர்.


சாமி கண்ண குத்திடுச்சு

 

 போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின் போது சலசலப்பு கூடியிருந்ததது. பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியைக் இந்தமுறை கரகப்பூசாரியாய் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார்.பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாக தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார்,கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக்கேப்பார்,” என்று மேலும் சொன்னார் தலைவர். “ வருஷா வருஷம் பாரிட் புந்தார்லேர்ந்து சாமிக்கண்ணு கரகப்பூசாரியத்தான கூப்பிடுவோம்.அவருக்கிட்ட என்னா


வழிபாடு

 

 உஞ்சவிருத்தி செய்து பிழைக்கும் ஓர் ஏழை அந்தணனுக்கு இவ்வளவு அதிர்ஷ்டமா என்று பொருமினான் வடுக நாய்க்கன். தனக்கு இத்தனை பெரிய வீடும், கட்டிக்காக்க ஆட்களும், செல்வமும் இருந்து என்ன பயன்? வரதையனுக்கு லட்சுமி கடாட்சம் இல்லாவிட்டாலும், அவன் மனைவி லட்சுமி இருக்கிறாள். லட்சுமி கடாட்சம் யாருக்கு வேண்டும், லட்சுமி போன்ற அழகான பெண் அருகிலிருந்தால்? அளவிறந்த செல்வத்தைப் பெற்ற வடுக நாய்க்கன் அதற்கு இணையான கற்பனையையும், அழகை உபாசிக்கும் ரசனையையும் பெற்றிருந்ததுதான் அவன் துர்ப்பாக்கியம். லட்சுமிக்கு திருமணம்


கடைசியில்

 

 “ஏன் விசாலம், இன்னிக்குமா சாம்பார் பண்ணலை?” “பண்ணலை …” “அதான் தெரியறதே, ஏன்னு கேட்டா?” “தொவரம்பருப்பு என்ன வெலை விக்கறது தெரியுமா? எட்டு ரூபா அறுபது பைசா! இந்த லட்சணத்துல தோட்டத்துல காய்ச்சுக் கொட்டற மாதிரி தெனமும் பருப்பு அள்ளிப் போட்டு சாம்பாரா வெக்கமுடியும்?” “தெனம் எங்கடீ வெக்கறே? கடைசியா வெள்ளிக்கிழமை அன்னிக்கு வெச்சுக் குத்தினே… நாலைஞ்சு நாளாச்சேனு கேட்டாக்க…” “நீங்க மாசம் இன்னும் ஆயிரம் ரூபா கூட சம்பாதிங்கோ, அப்பறம் தெனமும் ரெண்டு வேளையும் சாம்பாரா


நஞ்சு

 

 சுற்றிலும் இருந்த மையிருட்டில் தான் மூழ்கிப்போனது போல் இருந்தது அவளுக்கு. கொல்லை முழுவதும் கிளை பரப்பியிருந்த மாமரமும் பலாமரமும் இருளுக்குக் கருமை யூட்டின. இன்று நட்சத்திரம் கூட கண் சிமிட்டாமல் சோகம் காத்தது. ரங்கமணிக்கு லேசாகச் சிலிர்த்தது. தன்னுடைய உடலில் ஓடும் ரத்தத்துக்குப் பஞ்ச பூதத்துடன் நேரிடை பந்தம் இருப்பதுபோல் பட்டது. சொல்லி வைத்தாற்போல் வானம் இருண்டு காற்று ஓடுங்கி, நீர் வற்றிப் போவதான பிரமை ஏற்படுகிறது. ரங்கமணி, ரங்கமணி, அவள் அசையாமல் பாறையாய் இருளை வெறித்தபடி