கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 1, 2021

12 கதைகள் கிடைத்துள்ளன.

மலர்கள்

 

 “அவர் வாழ்வைத் தந்தார் அவரே வாழ்வை எடுத்தார்” பாதிரியாரின் குரல் அமைதியினூடே வலிமையுடன் ஒலிக்கின்றது. வாழ்வின் அந்தியக் கனவுகளின் பிடிகளிலிருந்து விடுபட்டு அமைதியுடன் மரண நித்திரையுள் ஆழ்ந்து கிடக்கிறாள், ரோஸலின். தன் தாயின் தலைமாட்டிலே சிலையாகிச் செயலற்றிருக் கிறான் அல்பிரட். கண்களிற் சுரக்கும் நீர் எவ்வித தடை யுமின்றிக் கன்னங்களில் வழிந்து முழங்காலில் தெறித்துச் சுடுகின்றது. ரோஸலினின் தலை மாட்டின் இரு புறங்களிலும் மெழுகுவர்த்தி எரிந்துகொண்டிருக்கின்றது. அந்த மெழுகு வர்த்திகளின் நடுவே ஒரு சிலுவை வைக்கப்பட்டிருக்கிறது. அல்பிரெட்


அவன் சமாதியில்

 

 “எழுத்தாளனுக்கு இரண்டாவது பிரம்மா என்று ஒரு பெயர்; உண்மைதான். முதற் பிரம்மா எழுத்தாள னைப் படைத்தான்; படைக்கப்பட்டவன் தனது ‘படைப் பு’களிற் பலரைச் சிருட்டித்தான். வாழத் துடிப்பவர்களை அநியாயமாகக் கொன்றும், சும்மா போகிறவனைக் காத லிக்கச் செய்து கலங்க வைத்தும், கிழவனைக் குமரனாக்கிக் குமரனைக் கிழவனாக்கி, நல்லவனைக் கெட்டவனாக்கிக் கெட்டவனை நல்லவனாக்கி……. இப்படியெல்லாம் செப் பிடு வித்தையை மனம்போனபடி செய்து, அதனாற் கிடைக்கும் அற்ப மனநிம்மதியில் திருப்தியடைந்து ……. அதெல்லாம் சரி, இவற்றையெல்லாம் நானிங்கு ஏன் எழுத


சமரசம்

 

 பொழுது இன்னும் நன்றாகப் புலரவில்லை. தை மாதத்துப் பனிப் படலத்தில் அத்தெருவே மிகவும் மங்க லாகக் காட்சியளித்தது. ‘தையும், மாசியும் வையகத்து உறங்கு’ என்று என்றோ ஒரு நாள் கூறிச் சென்றாள், ஔவைக்கிழவி. அதனை வேத வாக்காகக் கொண்ட திருநெல்வேலி வாசிகளில் ஒருவராவது நன்றாகவிடியுமுன், தெருவில் தலையைக் காட்ட எத்தனிக்கவில்லை. கிராமச் சங்கத்தாரின் புண்ணியத்தால் மங்கலாக மினுமினுத்துக் கொண்டிருந்தது, தெருவில் நாட்டப்பட்ட மின்சார விளக்கு. அதனடியிற் சிறகிழந்த ஈசல்கள் கூட்டங் கூட் டமாகக் கிடந்தன. அவற்றைச்சுற்றிக் காக்கைகள்


இடி விழ…

 

 ”ஐ… யோ … கடவுளே, உனக்குக் கண்ணில்லையா?” என்று மனத்தின் அடித்தளத்திலிருந்து விரக்தியினாற் கிளப்பப்பட்ட ஒரு குரல் காதிலே விழுந்து, கண்களைத் தான் வந்த வழியே அழைத்துச் சென்று, ஒரு சிறுகுடிசை யில் நிறுத்தியது. வெளியான ஓரிடத்தில் தனித்திருந்த தினாலும், தோற்றத்தினாலும், அதற்கும் மற்றைய வீடு களுக்கும் ஒரு வித பந்தமுமில்லையென் பதை அறிய முடிந் தது. உள்ளே – மரணத்தின் கடாட்சத்தைப் பெறும் பக்குவமடைந்த ஒரு வயோதிபன் கிடந்தான். அவனது சுருக்கு விழுந்த தேகமும், குழிவிழுந்த


சுவடு

 

 “அம்மா , தபால் ….!” தபாற்காரன் கையில் ஒரு கடிதத்தை வைத்துக் கொண்டு அழைத்தான். “அப்பா எழுதியிருப்பார்! இந்த விடுதலைக்கு இங்கேயே வந்துவிடு என்று!” கையிலிருந்த புத்தகத்தை அப்படியே மேசையிற் போட்டுவிட்டு, எழுந்து தெருக்கதவை நோக்கி ஒல்கி ஓசித்து, நடந்தாள் ராஜலட்சுமி. “சே! அப்பாவினுடைய கடிதம் நேற்றுத்தானே வந்தது. இன்றைக்கும் எதற்காக அவர் எழுதப்போகிறார்!” “ஒருவேளை யாராவது சினேகிதிகள் எங்கேயேனும் வரும்படி- வந்து சந்திக்கும் வண்ணம் – கேட்டு எழுதி யிருக்கலாம்” “அப்படியென்றாலும் எனக்கு யாரிருக்கிறார்கள்? —