கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2021

158 கதைகள் கிடைத்துள்ளன.

நீரு பூத்த நெருப்பு

 

 ராமநாதன் சாஸ்திரிக்காக, பால்கனியிலும் படியோரத்திலும், மொட்டை மாடியிலும் ஒவ்வொருவராகவும், இருவருமாகவும் காத்துக் காத்து கண்கள் பூத்ததுபோல், ஆண்டவனும், அகிலாவும் சலிப்போடு வீட்டிற்குள் வந்து, கதவைச் சாத்தினார்கள். கால்மணி நேரத்தில் காலிங் பெல்லிற்குப் பதிலாக கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால், ராமநாத சாஸ்திரியே… நடன நிகழ்ச்சிக்குத் தயாரானவர்போல், பின்புறம் வேட்டியைத் தார்பாய்த்து, முன்புறம் விசிறிபோல் சுங்கு விட்டு – அதாவது மடிப்பிட்டு, பூணுாலைப் பாதி மறைத்து, மீதியைக் காட்டும் துண்டும், முன்வழுக்கையும், பின்குடுமியுமாய் காட்சியளித்தார். அவரைப் பார்த்ததும், தம்பதியர்


பொருள் மிக்க பூஜ்யம்

 

 அந்த கன்றுக்குட்டி, புலிப்பாய்ச்சலில் காட்டைக் கிழித்தும், காற்றைப் பிடித்தும், பறப்பதுபோல் பாய்ந்து கொண்டிருந்தது. ஒரே மலையை, இரு மலையாய்க் காட்டும் மடிப்பு வெளி: மரித்ததுபோல் இறங்குமுகமும், மறுபிறவி எடுத்ததுபோல் ஏறுமுகமும் கொண்ட மலைப்பூமி, இந்த இரு முகங்களுக்கு இடையேயான மலைத்தொட்டில். பூமிப்பெண்ணின் மார்பகமாய் விம்மிப்புடைத்த அந்த மலைப்பகுதியின் ரூபத்தையும், அதற்குத் தாவணி போட்டது போன்ற மேகத்தையும், முக்காடான ஆகாய அரூபத்தையும், எவரும் தத்தம் கற்பனைக்கேற்ப வேறு வேறு வடிவங்களாகவும் உருவகப்படுத்திக் கொள்ளலாம். அப்படிக் கற்பித்துக் கொண்டால், மலைகளே


முகம் தெரியா மனுசி

 

 தண்டோராக்காரன், தான் செல்வதற்கு, அந்த குக்கிராம குடிசை மண்டிக்கு தகுதியில்லை என்று கருதியதுபோல், ஊருக்கு புறம்பாக உள்ள மயானத்தில் நின்று நெளித்தபடி, டும் டும் ஒலிகளோடு, திருவாங்கூர் சமஸ்தான அரச அறிவிப்பை வெளியிட்டான். “ஸ்ரீ உத்திரம் திருநாள் மகாராஜா திருமனஸ் அவர்கள், ஸ்ரீ பத்மநாபதாச வஞ்சிபால மார்த்தாண்ட வர்மா குலசேகர கிரீடபதி, மன்னை சுல்தான் மகாராஜா, ராஜ்ய பாக்கியோதைய ராமராஜா பகதூர்ஷம் ஷெர்ஜங் மகராஜா, சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத் தேர்விழாவை தரிசிக்க நாளை மறுநாள் வந்து, ரெண்டு


முத்துமணிமாலை!!!

 

 இமய மலையில் இருந்து சாமியார் திரும்பி வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக ஒரு பெரிய கூட்டம் அங்கே காத்துக் கொண்டிருந்தது . ஒரு நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கொண்டிருந்தனர். அவள் அதை பார்த்து மலைத்துப் போனதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை! இன்னும் வரிசையில் யாரும் வரும் முன், போய் நின்று விட வேண்டும் என எண்ணி, வரிசையில், கடைசியில் போய் நின்றாள். அந்த வரிசையில் நின்ற எல்லோரும், கையில் பழங்களும், பரிசுப்பொருட்களும் வைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த தேவி, கொஞ்சம்


சிங்களத்து சின்னக்குயிலே!

 

 ஆண்தேனீ (ட்ரொன்) ஒன்று, சென்னையில் அந்த மிகப்பெரிய 50 மாடி கட்டிடத்தை ஒரு வட்டமிட்டு உயர உயரப் பறந்து….. பின் மொட்டைமாடியை அடைந்து….. அங்கிருந்த ஒரு என்ஜினீயர் அருகே தரையை தொட்டு நின்றது… ஆண்தேனீ யில் பதிவாகியிருந்த படத்தை பார்த்த பால்ராஜ் (ஒரு ஜப்பானிய பன்னாட்டு கம்பெனியில், இந்தியாவின் மூத்த பொறியாளர் & டைரக்டர்) கூடியிருந்த தன் சகாக்களை பார்த்து புன்னகையுடன், “வெல் டன், கீப் இட் அப்!!…இன்னும் ஆறு மாசத்தில ப்ராஜெக்ட் முடிஞ்சுரும்னு நினைக்கிறேன்” என்றவாறு


முடிவுகள் தவறானால்….

 

 நேரம் காலை பத்து மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. காலை வேலைகள் எல்லாம் ஒவ்வொன்றாக முடித்து தனது இரண்டாவது பணியாகிய மதிய உணவுக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தாள் சரசு. இன்றைக்கு மதியம் கத்தரிக்காய் பிரட்டலும் பருப்பும் அப்பளப் பொரியலும் செய்தால் போதும் என்று மனதில் ஒரு திட்டத்தைப் போட்டுக்கொண்டு பொதியில் இருந்த சிவப்பு புளுங்கல் அரிசியில் மூன்று சுண்டு அரிசியை அரிக்கன் சட்டியில் போட்டு நீர் விட்டு கல் அரித்து அப்படியே நன்றாக கழுவி முற்கூட்டியே கழுவி வைத்திருந்த பானையில்


ஈரம்!!

 

 மழைக்கான பருவ காலமே இல்லாத நேரத்தில் நேற்று இரவிலிருந்து பெய்த தொடர் மழையால் வீதிகள் நீரினால் நிரம்பி ஊரே வெள்ளத்தில் மிதக்க ஆரம்பித்திருந்தது. “தாத்தா.. தாத்தா.. வீட்டுக்குப் போலாம்..”, என மீண்டும் அனத்த ஆரம்பித்தான் கேசவ்.. இங்கு வந்ததிலிருந்து இதே பாட்டுத்தான் பாடுகிறான்.. “டே.. உனக்கென்ன மூளை கீள கொழம்பிப் போச்சா.. நீயும் பார்த்திட்டுத் தானே இருக்கற…! நாமலே உயிரக் கையில பிடிச்சிட்டு தப்பிச்சு வந்து இந்த பள்ளிக்கூடத்துல உட்கார்ந்திருக்கோம்.. இப்ப மறுபடியும் வீட்டுக்குப் போலாம்னு சொல்லிக்கிட்டே


வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 

 அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 ஒன்று, இரண்டு என்று தொடங்கி ஐந்து வரை விரல் விட்டு எண்ணினார் புள்ளி சுப்புடு. அப்படி எண்ணும்போது நம் ஊர் வழக்கப்படி இல்லாமல், கட்டை விரலில் தொடங்கி சண்டுவிரலில் முடித்தார். “இதென்னய்யா தலைகீழ்ப்பாடமா கட்டை விரல்லேருந்து எண்றீங்க! இது எந்த ஊர் வழக்கம்?” என்று கேட்டார் முத்து. “இது ஜப்பான் நாட்டு வழக்கம். நாமெல்லாம் சுண்டு விரல்லே ஆரம்பிச்சு கட்டை விரல்லே முடிப்போம். இங்கே கட்டைவிரல் தான் முதல் நம்பர்


கோரமுகிக்கு மோட்சம்!

 

 தன் முயற்சியில் சற்றும் மனம் தள ராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அவன் அதைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து “மன்னனே! இந்த பயங்கர நடுநிசியில் நீ ஏன் இப்படி சிரமப்படுகிறாய்? உன்னையாராவது ஒரு மந்திரவாதியோ அல்லது முனி வரோதான் இவ்வாறு செய்யத்தூண்டி இருக்க வேண்டும். ஏனெனில் அவர் கள் நேரடியாகத்தம் சக்தியை உபயோ கிக்காமல் உன்னைக்


நாய்க்கு மணி கட்டனும்…!

 

 ஊருக்கு ஒதுக்குப் புறமாய் உள்ள ஆலமரத்திடலுக்கு தன் நண்பர்கள் பட்டாளத்தை அழைத்துச் சென்றான் நட்டு என்கிற நட்ராஜ் ! அந்த ஆலமரத்தடியில் அமர்ந்தான். எதிரில் நண்பர்கள்… சேகர், சிவா, கணேஷ், வெங்கு என்கிற வெங்கடேஷ் அமர்ந்தார்கள். அழைத்து வந்தவன் முகத்தை ஆவலாய்ப் பார்த்தார்கள். “இப்போ நம்ம ஊர்ல ஒரு முக்கியமான பிரச்சனை ஒன்னு இருக்கு…”சொல்லி நிறுத்தினான். ‘ நாம கூட்டம் போட்டு பேசும் அளவுக்கு அப்படி என்ன பிரச்சனை..? ‘ நண்பர்கள் மனங்களில் முகங்களில் கேள்வி குறிகள்.