கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 22, 2021

13 கதைகள் கிடைத்துள்ளன.

முதுகில் பாயாத அம்புகள்

 

 ராசகுமாரி, அந்தப் பெயருக்கு எதிர்ப்பதமாய் அல்லாடினாள். சண்டைக் கோழிகளான மாமியாருக்கும், அவள் எதிரிக்கும் இடையே உள்ள இடைவெளியில் நின்றபடி இரண்டு கைகளையும் விரித்துப் போட்டு, அவர்களின் மோவாய்களைத் தொட்டாள். பிறகு, தலைக்கு மேல் கரம் தூக்கி அதைக் கும்பிடாக வைத்துக் கொண்டு கரகம் ஆடுபவள்போல், அங்குமிங்குமாய் சுழன்றாள். ஆனால், அவள்களோ, இவளை ஒரு பக்கமாக ஒதுக்கிவிட்டு, முன்னாலும் பின்னாலுமாய் நகர்ந்தார்கள். இன்றைக்கு எப்படியும் தன்னுடைய சங்கதியும் வெளி வந்துவிடப் போகிறது என்று பயப்பட்டவள் போல், ராசகுமாரி இரண்டு


மாடசாமியின் ஊர்வலம்

 

 குதிரைப் பந்தயம் நடக்கலாம் என்று உயர்நீதி மன்றம் அளித்தத் திர்ப்பை, எல்லா பத்திரிகைகளும், இரண்டாவது மூன்றாவது பக்கங்களில், நிதானத்துடன் பிரசுரித்திருந்தன. ஆனால் மாடசாமியின் கண்ணில்பட்ட பத்திரிகை மக்கள் பத்திரிகை, ஆகையால் குதிரைப் பந்தயம் நடக்கும் என்று கொட்டை எழுத்தில் பிரசுரித்திருந்தது. மாடசாமி செய்த ஒரே பாவம் அந்தக் காலத்து திண்ணைப் பள்ளிக்கூடத்தில் எழுத்துக் கூட்டி’ வாசிக்குமளவுக்குப் படித்திருந்ததுதான். சாயாக் கடையில் தன்னிடம் ஒன்றுமில்லை என்று காட்டுவது போல், ரிக்ஷாக்காரர் இரண்டு கைகளையும் அகலமாக விரித்து வைத்துக் கொண்டு,


பெண் குடி

 

 ஆரல்வாய் மொழியின் சுற்றுப்புறச் சூழலும், அதன் மடியில் கிடந்த அரண்மனை மாதிரியான அந்த வீடும், பார்ப்பவர்களுக்கு பீதியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அப்போதைய நாஞ்சில் நாட்டின் வட எல்லையான இந்த ஊரை வளைத்துப் பிடித்திருப்பதுபோல், அதற்கு வடக்குப் பக்கமாய் திரும்பி நிற்பதால் வடக்கு மலை என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலை. ஊரையே வழிமறித்து நிற்கும் இந்த மலைக்கு எதிரே மல்லுக்கு நிற்பது போன்ற பெருங்குன்றான குருசடி மலை. இந்த இரண்டிற்கும் இடையே நூறடி இடைவெளி… கீழே அதல


கலவரப் போதை

 

 தமிழக அரசின் இ.ஆ.ப. அதிகாரி உக்கம்சிங், தாடி வைத்த சைக்காட்ரிஸ்ட் டாக்டர் ராம் விவேக், பாப் தலை கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் எஸ்தர், சமூக இயல் விஞ்ஞானி பாப்பம்மா, பென்சில் மீசை வைத்த “மனித உரிமை மகேந்திரன் ஆகியோரைக் கொண்ட அந்தக் குழுவை, லோக்கல் இன்ஸ்பெக்டர், தனத லத்திக் கம்பை வரவேற்பு வளையமாக தாழ்த்தி வைத்துக் கொண்டு, அந்த வீட்டுக்குள் வழிநடத்தினார். சின்னப் பூட்டு போடப்பட்ட அந்த ஒலை வீட்டின் கதவை, அவர் லத்திக் கம்பில் இரும்பு பூனால்,


கடைசியர்கள்

 

 முத்துக்குமார், தேனுக்குள் விழுந்து, இறக்கை நனைந்து தவிக்கும் வண்டு போலவே கிடந்தான். சுருட்டி வைக்கப்பட்ட போர்வைத் துணி போல், உடம்பு முழுவதையும் சுற்றிக்கொண்டு உருளை வடிவமாக கட்டிலில் கிடந்தான். இவ்வளவுக்கும் கொட்டும் பனிக்காலத்தில் கூட, மின் வி சிறியின் சுழற்சிக்கு கீழே, முடிச்சவிழ்ந்த லுங்கியோடு திறந்தவெளி மார்போடு, கைகால்களை விரித்துப் போட்டு மல்லாக்க கிடப்பவன். மின்காற்று வீச்சில், நாற்றங்கால் போன்ற தலைமுடிக் கற்றைகளும், மார்பில் பதியமான மென்முடிகளும் பனித்திவலைகளோடு அசைந்தாடுவதில் சுகம் காண்பவன். சொந்த அம்மாவை விட,