கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 21, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

முத்துமணிமாலை!!!

 

 இமய மலையில் இருந்து சாமியார் திரும்பி வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக ஒரு பெரிய கூட்டம் அங்கே காத்துக் கொண்டிருந்தது . ஒரு நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கொண்டிருந்தனர். அவள் அதை பார்த்து மலைத்துப் போனதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை! இன்னும் வரிசையில் யாரும் வரும் முன், போய் நின்று விட வேண்டும் என எண்ணி, வரிசையில், கடைசியில் போய் நின்றாள். அந்த வரிசையில் நின்ற எல்லோரும், கையில் பழங்களும், பரிசுப்பொருட்களும் வைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த தேவி, கொஞ்சம்


சிங்களத்து சின்னக்குயிலே!

 

 ஆண்தேனீ (ட்ரொன்) ஒன்று, சென்னையில் அந்த மிகப்பெரிய 50 மாடி கட்டிடத்தை ஒரு வட்டமிட்டு உயர உயரப் பறந்து….. பின் மொட்டைமாடியை அடைந்து….. அங்கிருந்த ஒரு என்ஜினீயர் அருகே தரையை தொட்டு நின்றது… ஆண்தேனீ யில் பதிவாகியிருந்த படத்தை பார்த்த பால்ராஜ் (ஒரு ஜப்பானிய பன்னாட்டு கம்பெனியில், இந்தியாவின் மூத்த பொறியாளர் & டைரக்டர்) கூடியிருந்த தன் சகாக்களை பார்த்து புன்னகையுடன், “வெல் டன், கீப் இட் அப்!!…இன்னும் ஆறு மாசத்தில ப்ராஜெக்ட் முடிஞ்சுரும்னு நினைக்கிறேன்” என்றவாறு


முடிவுகள் தவறானால்….

 

 நேரம் காலை பத்து மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. காலை வேலைகள் எல்லாம் ஒவ்வொன்றாக முடித்து தனது இரண்டாவது பணியாகிய மதிய உணவுக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தாள் சரசு. இன்றைக்கு மதியம் கத்தரிக்காய் பிரட்டலும் பருப்பும் அப்பளப் பொரியலும் செய்தால் போதும் என்று மனதில் ஒரு திட்டத்தைப் போட்டுக்கொண்டு பொதியில் இருந்த சிவப்பு புளுங்கல் அரிசியில் மூன்று சுண்டு அரிசியை அரிக்கன் சட்டியில் போட்டு நீர் விட்டு கல் அரித்து அப்படியே நன்றாக கழுவி முற்கூட்டியே கழுவி வைத்திருந்த பானையில்


ஈரம்!!

 

 மழைக்கான பருவ காலமே இல்லாத நேரத்தில் நேற்று இரவிலிருந்து பெய்த தொடர் மழையால் வீதிகள் நீரினால் நிரம்பி ஊரே வெள்ளத்தில் மிதக்க ஆரம்பித்திருந்தது. “தாத்தா.. தாத்தா.. வீட்டுக்குப் போலாம்..”, என மீண்டும் அனத்த ஆரம்பித்தான் கேசவ்.. இங்கு வந்ததிலிருந்து இதே பாட்டுத்தான் பாடுகிறான்.. “டே.. உனக்கென்ன மூளை கீள கொழம்பிப் போச்சா.. நீயும் பார்த்திட்டுத் தானே இருக்கற…! நாமலே உயிரக் கையில பிடிச்சிட்டு தப்பிச்சு வந்து இந்த பள்ளிக்கூடத்துல உட்கார்ந்திருக்கோம்.. இப்ப மறுபடியும் வீட்டுக்குப் போலாம்னு சொல்லிக்கிட்டே


வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 

 அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 ஒன்று, இரண்டு என்று தொடங்கி ஐந்து வரை விரல் விட்டு எண்ணினார் புள்ளி சுப்புடு. அப்படி எண்ணும்போது நம் ஊர் வழக்கப்படி இல்லாமல், கட்டை விரலில் தொடங்கி சண்டுவிரலில் முடித்தார். “இதென்னய்யா தலைகீழ்ப்பாடமா கட்டை விரல்லேருந்து எண்றீங்க! இது எந்த ஊர் வழக்கம்?” என்று கேட்டார் முத்து. “இது ஜப்பான் நாட்டு வழக்கம். நாமெல்லாம் சுண்டு விரல்லே ஆரம்பிச்சு கட்டை விரல்லே முடிப்போம். இங்கே கட்டைவிரல் தான் முதல் நம்பர்