கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 18, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

புலியால் புதுமணம்

 

 ரத்தினபுரியை ரத்தினசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு வேட்டையில் மிகுந்த விருப்பம் இருந்தது. அதனால் வாரத்திற்கு ஒருமுறையாவது காட்டில் போய் வேட்டையாடி விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒருமுறை தன் பரிவாரங்களோடு காட்டிற்கு வேட்டையாட அவன் சென்றான். அவன் சில மிருகங்களை வேட்டையாடி விட்டு ஒரு மரத் தடியே தங்கினான். ஓரிரு நிமிடங் களுக்குப் பின் அந்த மரத்திலிருந்து சற்று தூரத்தில் ஒரு புதரில் ஏதோ சந்தடி ஏற்பட்டது. அவன் என்ன வென்று திரும்பிப் பார்ப்பதற்குள்


நாய்ச்சோறு

 

 அந்த வீட்டில் வேலைக்குச் சேர்ந்ததற்காகத்தான் அவனை எல்லோரும் திட்டினார்கள். ‘ஆறுமாதத்திற்கு ஒரு வீடு’ என மாறி மாறி வேலை செய்துகொண்டே இருந்தால், தன்னுடைய வேலைத்திறமை, நடத்தை மீது மற்றவர்களுக்கு ஐயம் ஏற்படக் கூடும்’ என்று நினைத்துத்தான் அவன் ஒரே முடிவோடு அந்த வீட்டில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான். அவன் இதுவரை நான்கு வீடுகளில் பணியாற்றி இருக்கிறான். அந்த வீட்டுக்காரர்கள் யாரும் இவனை “வேலையைவிட்டுப் போ!” என்று கூறியதே இல்லை. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அவனாகத்தான் தன் விருப்பம் போலவே வெளியேறினான்.


காலம் மறந்த இடம்

 

 அத்தியாயம்:௧ வெற்றிடக் குடுவை அந்தச் சம்பவம் நடந்த போது மத்தியானம் மூன்று மணி இருக்கும். அது ஜூன் 3, 1916 ஆம் தேதி மத்தியானம். நான் கடந்து வந்த சம்பவங்கள், அந்தக் கொடூரமான அனுபவங்கள் எல்லாம் இந்த மூன்று சிறிய மாதங்களில் தான் நடந்தனவா என்று நினைத்துப் பார்க்கும் போது என்னாலேயே நம்ப முடியவில்லை. இந்தக் குறுகிய காலங்களில் என் கண்களால் நான் கண்ட மாற்றங்களும் பரிணாமங்களும் பல யுகங்களைப் பார்த்து வந்தது போல் தோன்றுகின்றன. வேறு


செம்பருத்தி

 

 அம்மா வந்து எங்கள் வீட்டு வாசல்கதவைத் தட்டியபோது காலை ஏழு மணியாகி வானம் சிலுசிலுவென வெளுத்துவிட்டது. வாசலில் மின்சாரமணி அடிக்கப் பொத்தான் இருந்தபோதிலும் அம்மா அதில் விரலை வைப்பதில்லை. வீட்டுக்காரரைக் கூப்பிடவேண்டுமென்றால் கதவைத் தட்டிக் கூப்பிடுவதுதான் முறையானது என்ற கோட்பாட்டில் அம்மா தீவிரமான நம்பிக்கை வைத்திருந்தார். அம்மா வந்த வேளை என்னவள் மஞ்சு கிணற்றடியில் குளித்துக்கொண்டிருந்தாள். எனவே இனியும் போர்வைக்குள் சுகம் காணமுடியாது என்று கண்டதும் எழும்பிப்போய்க் கதவைத் திறந்தேன். அம்மா வெளிக்கிட்டுக்கொண்டு வந்திருந்தார். முதல் நாள்


ஓசை

 

 டொக்…டொக்..டக்…டக்..தட்..தட்… இந்த சத்தம் பாரிஜாதம் திருமணமாகி முதன் முதல் தாம்பத்யம் நடத்த கணவன் அருகில் படுத்திருக்கும் போது கேட்டது. இது என்னங்க சத்தம் ? கணவன் முருகேசனிடம் கேட்டாள். பக்கத்துல மோல்டிங் வேலை நடக்குது. இராத்திரி பத்து மணிக்குமா? இராத்திரி பகல் அப்படீன்னு கிடையாது. காலையில இருந்து மறு நா விடியற வரைக்கும் கேட்டு கிட்டே இருக்கும். அதன் பின் அவர்கள் தூக்கத்திற்குள் போகும் வரைக்கும் கேட்டு கொண்டே இருந்தது.. பாரிஜாதம் பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்கு போக