கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 15, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஆலய தரிசனம்

 

 அபிராமியம்மா மீளாத்துயிலில் ஆழ்ந்திருந்தா. வெள்ளை வெளேறென்ற அவவின் முகத்தில் ஒரு நாணயம் அளவு குங்குமப்பொட்டு மிளிர்ந்து கொண்டிருந்தது.நிரந்தரப் புன்னகையொன்று இதழ்கடையில் விரிந்து முகத்தை மேலும் பொலிவுபடுத்தியது. வாழ்வினை நிறைவாக அனுபவித்துப் பூர்த்தியாக்கிச் சுமங்கலியாகப் போகிறேன் என்ற நினைப்பு அவரது புன்னகைக்குக் காரணமாகலாம். இந்தக் காலத்தி பூட்டப்பிள்ளையைக் காணும் வரை வாழ்வது சாதாரண காரியமா? அதிக நோயாலும் அறுபது ஆண்டுகளாகத் தம் ஜீவனோடு கலந்து விட்டவளின் பிரிவைத் தாங்க முடியாமலும் உண்டான துயரங்களைத் தன்னுள் அடக்கி அந்த நினைவுச்


பவித்ராவும் நானும்

 

 3. குறுந்தொகை பாடல் – 28 (ஔவையார் – முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்? ஏண்டீ.. இப்டி இருக்கே …. என்னா ஆச்சி உனக்கு… பதில் வரவில்லை பவித்திராவிடம் இருந்து. வாயை திறந்தா என்ன முத்தா கொட்டிடும். கமலத்தை முறைத்து பார்த்தாள் பவித்ரா. எழுந்து செல்ல இருந்தவளை பிடித்து உட்கார வைத்தாள்… ஏன், ஒரு மாதிரியாக இருக்கே…… மனசு வலிக்குதுடீ ஏன், ஒன்னும் தெரியாது மாதிரி கேட்கிறியே… இதோ ரெண்டு மூனு மாசத்திலே வரேன்னு போனான், நாலு


இதையாவின் இதயத் துடிப்பு

 

 முகவுரை மனிதனின் இதயம் கணனியின் மையச் செயலாக்க அலகாக செயல் படுகிறது. இதயத்தின் செயல் உடலின் பல பாகங்களில் செயல்களைப் புரியும் பகுதிகளோடு சேர்ந்து இயங்குகிறது. படக் படக் என்று அடிக்கும் இதய துடிப்பு நிமிடதுக்கு சராசரி 72 ஆகும். இது மனிதனின் செயல் பாட்டினால் குறைந்தால் என்ன வாகும் என்பதே இந்த அறிவியல் காதல் கதை *** இதையா ஈழத்தில் உள்ள கிளிநோச்சியில் ஒரு விவசாயி மாணிக்கத்தின் அன்பு மகள். படிப்பில் கெட்டிக்ககாரி தன் மகள்


வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 

 அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 “பாரிஸ் ஜஃபல் டவரைவிட இது உயரமா?”-முத்து கேட்டார். “ஆமாம். ஆனா, அது வெய்ட் அதிகம். 7000 டன் கனம். இது 4000 டன்தான்”- புள்ளி சொன்னர்ர். “அதாவது-இது கனம், அது மகாகனம்” என்றார் முத்து. “ஜப்பான்ல அடிக்கடி புயலும் பூகம்பமும் வருமே அதுக்கெல்லாம் தாக்குபிடிச்சு நிக்குதர இது?”-கணபதி ஸ்தபதி கேட்டார். “அந்த விஷயத்துல நம்ம கலைஞர் மாதிரிதான் இந்த ட வரும். எந்தப் புயலுக்கும் பூகம்பத்துக்கும் அசைஞ்சு கொடுத்து ஸ்டெடியா


அவன் அப்படித்தான்…

 

 அது ஒரு காலைப்பொழுது ! பெயர் தெரியாத பறவைகள் எல்லாம் பெயர் வைக்கப்படாத ராகங்களை பாடி மகிழ்ந்து திரிந்தன. இரண்டு புறமும் பச்சைப்பசேல் நிலங்களாய் கடந்ததைப் பார்த்தபோது அந்த கிராமத்தில் இன்னமும் நீர் மிச்சமிருப்பதையும் நீர் திருடும் கம்பெனிகளின் கழுகு கண்களில் அந்த கிராமம் இன்னமும் படவில்லை என்பதும் புரிந்தது. குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும், சில கான்க்ரீட் மாடிவீடுகளுமாக மிஞ்சிப்போனால் இருநூறு அல்லது முன்னூறு வீடுகள் அந்த கிராமத்தில் இருக்கலாம். தூரத்தில் ஒரு சர்ச், சர்ச்லிருந்து