கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 9, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

புதிய நிர்மாணம்

 

 அன்பார்ந்த ராமு, என் கண்கள் தெளிவடையவில்லை – அறிவுக் கண்களைத்தான் குறிப்பிடுகிறேன். வாழ்க்கை , விடுவிக்க முடியாத சிக்கல்கள் நிறைந்த பெரும் புதிராகக் காண்கிறது. எனக்கு உங்களிடத்தில் ஏதோ ஒருவிதமான நம்பிக்கை. அது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. அது எவ்விதமானது என்பதை உணர்ந்து கொள்ளவும் என்னால் முடியவில்லை. எது எனக்குத் தெரிந்து, தெளிய முடியாததாயிருக்கிறதோ அதைத்தான் நான் புதிர் என்று குறிப்பிடுகிறேன். இப்படி நீங்களும் எனக்கு ஒரு புதிராக இருப்பதனால்தானோ என்னவோ, எனக்கு விளங்காத


பெற்ற தாயும் பிறந்த நாடும்

 

 ‘சீவன் போகமுன்னம் பிள்ளையள் வந்து தாயின்ர கண்ணில முழிக்குங்களெண்டு நான் நம்பேல’ – இவள் பாவி என்ன, எடுத்தாப்போல ‘சகுனி’ போலச் சொல்றாள் ‘அது பாவம் மனிசி, பெத்ததுகளைக் கடைசியாப் பாத்திட்டுக் கண்மூடவெண்டு கொட்டுக்க சீவனை வைச்சுக் கொண்டு படுற பாட்டைக் கண்குடுத்துப் பார்க்க கறுமமாக் கிடக்கு’ கள்ளி, மனிசியில் உருகுமாப் போல சும்மா சாட்டுக்கு மாய வித்தை காட்டுறாள். ‘அது சரி, தந்தி எப்ப குடுத்ததாக்கும்?’ ‘வேளையோட குடுத்திருப்பினம் தானே?’ ‘அக்காள்….. வாய் புளிக்குது. உந்த


கதவுகள் தாழிடப்பட்டிருக்கின்றன

 

 ராணியின் அப்பா லமர முனீஸ்வரர் லயத்துக்கு நேந்துவிட்ட கடா டு, முனியம்மா வீட்டுக்கு பின்புறம் மேய்ந்து கொண்டிருந்தது.போன டிஸம்பர் மாதம் எங்கோ மலாய் கம்பத்திலிருந்து, அதன் சொந்தக்காரன் சொன்ன கிரயத்துக்கே வாங்கிவந்து, இப்போது கொழு கொழுவென்று வளர்ந்து சாமிக்கு விட்டது என்ற பெருமையோடு, ‘சாமி குத்தமாகிவிடுமே’ என்று,யார் தொந்தரவுக்கும் ளாகாமல் சாவகாசமாய் சுற்றிக்கொண்டிருந்தது.ராணி றாம் ண்டு அரசாங்க சோதனையில் ஏழு ஏ பெற முனீஸ்வரரின் கிருபை கிட்ட, நெருங்கிய உற்றார் உறவினரை அழைத்து, நல்ல நேரம் பார்த்து,


கடி தடம்

 

 காந்திபுரத்தில், 95-ம் எண் பேருந்துக்கு காத்து நின்றுகொண்டிருந்தான் கஸ்தூரி. பசித்திருந்தான் எனினும், உப்பிலிப்பாளையம் போய்த்தான் சாப்பிட வேண்டும். மத்தியானம் இரண்டே கால் ஆகிவிட்டிருந்தது. சற்று முன் ஒரு தேநீர் பருகத் தோன்றியது. எட்டு ரூபாய் ஆக்கி விட்டார்கள். விலையில்லா அரிசி போல, அடுத்த தேர்தல் வாக்குறுதி யாக, விலையில்லா தேநீர் என்று அருளலாம், பாராளுவோர். ஓராண்டு முன்பு, காந்திபுரம் வந்து திரும்ப ஏழு ரூபாய் இருந்தால் போதும். இப்போது தாழ்தள சொகுசுப் பேருந்துக்கு 18 ரூபாய் வேண்டும்.


உணர்ச்சிகள்

 

 அவனருகிலிருந்த அவளை. அவன் வலு குறுகுறுப்பாகப் பார்த்தான். அவளின் அண்மை அவனை என்னவோ செய்தது. அவளிலிருந்து வீசிய ‘சென்றி’ன் நறுமணத்தை அவன் நுகர்ந்தான். அவளின் சேலைத் தலைப்பின் தழுவலில் அவன் சுகமனுபவித்தான். அவளை எங்கோ கண்டதுபோல அவனுக்கு ஞாப கம் வந்தது. அவளை உற்றுப் பார்த்துக்கொண்டே அவளை எங்கே கண்டிருப்பேனென யோசித்தான். அவளின் மெல்லிய நீலநிறச் சேலையை யும், கருநிறப் பாம்பாக நீண்ட ஒற்றைப் பின்னலையும், அதன் தொடக்கத்தில் சிரிக்கும் வெள்ளை முல்லை மலர்களையும், அவன் பார்த்தான்.