கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 6, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

குறையொன்றுமில்லை

 

 “ஐயா.குழந்தை பசியால அழுவுதுய்யா..கையிலே துட்டு இல்லே.கொஞ்சம் பாலு ஊத்தினீங்கன்னா..உங்களுக்குப் புண்ணியமாப் போகும்” ராமராஜ் ஏற இறங்க அந்தப் பெண்ணைப் பார்த்தார். இடுப்பில் பெண்குழந்தை.இரண்டு வயதிற்குள் இருக்குமா..மூக்கொழுக அழுது கொண்டு இருந்தது. தாயின் முகத்தைப் பார்த்தபடி. “டே சம்முவம்.அந்தம்மாவுக்கு ஒரு கிளாஸிலே பாலக் கொடு..நல்லா ஆத்திக் குடு..குழந்த குடிக்கற பதத்துக்கு. அப்படியே அந்தம்மாவுக்கு ஒரு டீ குடு.வேற எதுனாத் துன்றியாம்மா.” அந்தப் பெண் அவசர அவசரமாகத் தலையாட்டி மறுத்தாள். “அண்ணே..இன்னும் போணியாகலேண்ணே.” “ஏன்..இது போணியில்லியா..அடச் சும்மாக் குடுடா..” குழந்தை


வித்தைக்காரணல்ல!

 

 நான் என் பாட்டிற்கு ரோட்டோரமாக எனது கணத்த பையை சுமந்தவாறு நடந்து கொண்டிருந்தேன். இன்றுதான் முதல் வகுப்பு சேர்ந்தேன், அங்கு செல்லும்போதே வீதிக் குழப்பமாக கிடந்தது, இப்போது வீடு திரும்புகிறேன் ஆனால் இப்போதும் ஒரே குழப்பம். அது ஓர் ‘Y’ வடிவ சந்து நான் நிற்பது அதன் காலில், இடப்புறமா? வலப்புறமா? ஆட்டோக் காரர் எவரையும் காணவில்லை, ஆனால் விசித்திரமாக இடது புறம் வெறுமையாக கிடந்தது; கடதாசி குப்பைகள் உருளுது – காற்றின் அலாவல் கேட்குது. வலதுபுறமோ


கருதி நின் சேவடி…

 

 “மனிதர் பாதமென்பது கலைநயமும் தொழில் நுணுக்கமும் கொண்ட ஓர் உன்னத படைப்பு” – லியோனார்டோ டாவின்சி என் பின்னால் சளக் சளக்கென்று யாரோ தண்ணீரில் நடப்பதுபோல சத்தம். திரும்பிப் பார்க்க தைரியமில்லை. கல்லாய் சமைந்துவிடுவேன் என்கிற பயம். சூரியன் மண்ணுருகக் காய்ந்துகொண்டிருந்தான். நான் அணிந்திருந்த ஆடைகள் வியர்வையில் நனைந்திருந்தன. வெகுதூரம் நடந்து வந்திருந்த களைப்பில் சோர்ந்திருந்தபோதிலும், நான் தேடிவந்த அரண்மணையை கடைசியாய் பார்க்கையில் சந்தோஷமாயிருக்கிறது. நிமிர்ந்து பார்க்க பின் கழுத்து வலிக்கிறது. மாளிகையின் பிரமாண்டம் என்னை வியப்பிலாழ்த்துகிறது.


மனசு நெறஞ்ச மாப்புள்ள…

 

 அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை, மாலை நேரம் சுமார் ஒரு நான்கு மணி இருக்கும், தனது மகள் லாவண்யாவை அழைத்தாள் லட்சுமி. “கண்ணு, அம்மா கொஞ்சம் சுமதியக்கா வீட்டு வரைக்கும் போய் வாரேன், நீங்க கதவ சாத்திட்டு பத்திரமா இருக்கீங்களா?.” “சரிங்கம்மா, ஏம்மா இந்த நேரத்துல அங்க போறீங்க? என ஒப்புக்கு வினவினாள் மகள் லாவண்யா. “அந்த அக்கா கொஞ்சம் முன்னாடி ஆள் அனுப்பி இருக்காகம்மா, அவ்க பொண்ணுக்கு கல்யாணமாம், நாளக்கி பொண்ணு பாக்க வர்றாங்களாம்.” “அதான்


விளையும் பயிர்

 

 சுமார் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய குடியாத்தம். நடுப்பேட்டையில் அஞ்சுமான் தெருவும், கோபாலபுரம் மஜீத் தெருவும் இணையும் இடத்திலிருந்து தொடங்கும் வயற்காடு பச்சைப் பசேல் என்றிருக்கும். சுற்றிலும் கம்பி வேலி போடப் பட்டிருக்கும். முகப்பில் ஆளுயர கல் தூண்கள் நான்கைந்து நட்டு வைத்திருப்பார்கள். ஒரு நபர் மட்டும் நுழையக்கூடிய விதத்தில் அவை அமைந்திருக்கும். ஆடு, மாடு போன்ற பிராணிகள் வயற்காட்டில் நுழையாமல் இருக்கத்தான் அந்த ஏற்பாடு. வயற்காட்டுக்குப் போகும் வழியில் இடது பக்கம் வஹாப் பாயோட மரக் கடையும்,