கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 3, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

தாலி வரம்

 

 நீலவேணி, ஏ.இ.இ.,யின் அனுமதியுடன் ஒரு மணி நேரம் முன்னதாக வீட்டுக்கு கிளம்பினாள். அலுவலக உதவியாளர் கணேசனிடம் அண்ணா இந்த ஃபைலை கொண்டுப் போய் ஏ.இ.இ.,பில்டிங்க் செக்‌ஷன் டேபிள்ல வைச்சுடுங்க என்றாள். சரிங்க மேடம் என்று உத்திரவுக்கு பணிந்த கணேசன், என்ன மேடம் அவசரமா கிளம்புறதா தெரியுது, ஏதாவது நல்ல செய்திங்களா.,? என்று ஆர்வமாக கேட்டான். பெருசா ஒண்ணுமில்லை, வழக்கமா வீட்டிலே சாப்பிட்டு ஆபிசுக்கு வந்திட்டு போறமாதிரி இன்னிக்கு ஒரு மாப்பிள்ளைக்கு இந்த மூஞ்சியை காட்ட வேண்டியதிருக்கு, அதான்


உயரம் தாண்டுதல்

 

 சாரல் மெதுவாக பூமியை நனைக்க வேண்டுமா, வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருந்தது. சேகர் குடையை மடக்கி மகள் கையில் கொடுத்து விட்டு, பள்ளிக்குள் நுழைந்தார். “மித்ரா நனையாமல் ஒதுங்கி நில்லு.” என்று உள்ளிருந்து சொல்லிக் கொண்டு சைகை காட்டினார். காக்கிச் சீருடையாளன் “என்ன ஐயா? என்ன விசயம்?” எனக் கேட்டான். “பிரின்சிபலை பார்க்க வேண்டும். உடற் பயிற்சியாளர் வேலைக்கு வரச் சோல்லியிருந்தார்கள்.” என்றார் சேகர். “ஆச்சரியமாக இருக்கிறதே. நேற்று இரண்டு மூன்று பேர் வந்து போனதில் யாரையோ


உதிர்ந்த சருகுகள்

 

 வழக்கமாக வீட்டில் கேட்கும் டிவி அல்லது ரேடியோவின் ஒலி இன்று காலை இல்லை. அண்ணனும் அண்ணியும் ஊரிலிருந்து வருவதாக மகிமாவிடமிருந்து தகவல். அம்மாவிடம் சொன்னபோது பெரிதாக சட்டை செய்யவில்லை. ‘எவன் வந்தா உனக்கென்ன, நீ போயி உன் சோலியை பாரு’ என கூறிவிட்டு பாத்திரங்களை கொண்டு கழுவப்போய்விட்டாள். இது எதிர்பார்த்ததுதான் என்றாலும், இவ்வளவு சுலபமாக புறந்தள்ளிவிட்டு வழக்கம்போல தன் வேலையை பார்க்க சென்றுவிடுவாள் என நினைக்கவில்லை. மகிமா மட்டும், குளித்து முடித்து, கொஞ்சம் புது டீ-ஷர்ட்டும், ஜீன்ஸ்-உம்


ஆனந்தி இல்லாத வீடு

 

 “இப்ப ஆனந்திய வித்தே தான் ஆகணுமா….?” கலங்கிய குரலில்… ஒரே கேள்வியைத்தான் தான் வேறு வேறு வடிவத்தில் காலையிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். சித்தப்பா தனக்குள் என்னவோ முணங்கிக் கொண்டார். அதில் வேண்டும் வேண்டாம் இடையே நிற்கும் அவரே தேடும் இடைவெளி இருந்தது. ‘ஆனந்தீ………!’ என்று எங்கிருந்து கூப்பிட்டாலும்.. குதியாட்டம் போட்டுக் கொண்டு ஓடி வரும் ஆனந்தி நீங்கள் நினைப்பது போல நாய் இல்லை. நாய் தான் நன்றி உள்ளது என்று ஆனந்தியின் வருகைக்கு முன்புவரை நானும் நினைத்துக்


கொடுக்கப்பட்ட ஐந்து நிமிடங்கள்

 

 அந்த சிறைச்சாலை கொட்டடியில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளை பெயர் சொல்லி அழைத்தான் அந்த காவலன். அனைவரும் வரிசையாய் வந்து நின்றனர். ம்..நடங்கள், அவர்கள் கால்களில் கட்டியிருந்த சங்கிலிகளை அவிழ்த்தவன் விரட்டினான். இன்று மன்னரின் தாய் நினைவு நாளாயிறே ! அரசுக்கு எதிராக பேசியவர்களை சுட்டு கொல்ல நாளைக்குத்தான் நாள் குறித்திருந்தாரே, திடீரென்று இன்றே ஏன் இவர்களை கொண்டு வர சொல்கிறார், ஒரு காவலாளி மற்றொரு காவலாளியிடம் கேட்டான். காவலாளி சிரித்தான், மன்னரை பற்றி தெரியாதா? என்ன செய்வார், என்ன