கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 25, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

பழி ஓரிடம்…

 

 அன்று மணி படுக்கையை விட்டு எழுந்த நேரம் சரியில்லை. முன்னாள் இரவு மனைவியுடன் தகராறு. அதனால் தூக்கம் கெட்டது. அதனால் எழுந்திருக்கும் நேரம் லேட். அவனது துணிகள் கசங்கி இருந்தது. கோபத்தினால், மனைவி மல்லிகா அவனது துணிகளை இஸ்திரிக்கு கொடுக்க வில்லை. ஒரு வழியாக அலுவலகத்திற்கு வேண்டிய துணிகளை தானே இஸ்திரி செய்து கொண்டான் மணி. மல்லிகா சமையல் செய்ய வில்லை. அலுவலகம் சென்று சாப்பிட்டு கொள்ளலாம் என்று ஆபீஸ் கிளம்பினான். அன்று பார்த்து மழை வேறு.


நிலமும் பொழுதும்

 

 “ஒரு குழி நிலம் ஐம்பத்துஏழாயிரம்ன,நம்ம மொத்த நிலம் ஐம்பது குழிகளும் எவ்வளவு வரும்?” என்று கேட்டார் தாத்தா திருநாவுக்கரசு, தனது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வையும், நீட் தேர்வையும் முடித்து தேர்வு முடிவுக்காக காத்திருந்த பேத்தி ஆண்டாளிடம் . “ஊர்ல யார் நிலத்தை வித்தாலும் விலைய விசாரிச்சுட்டு வந்து இந்தக் கணக்கு போடுறத ஒரு வேலைய வச்சுருக்காரு தாத்தா என்று சலித்துக் கொண்டாள் பேத்தி ஆண்டாள். இருந்தாலும், தனது மனக்கண்ணில் கணக்கை போட்டு ” இருபத்து எட்டு இலட்சத்து


உணர்வில்லாத இனமும் கெடும்

 

 ஓளிவேலன் ஊரில் பெரிய மனிதர், ஊர் மக்களிடம் நன்மதிப்பை பெற்றிருந்தவர், யார் உதவி என கேட்டு வந்தால் இல்லை என சொல்லமால், தன்னால் முடிந்த உதவியை உடனே செய்துக் கொடுப்பார், பல நல்ல குணங்கள் அவரிடம் இருந்தாலும், தன் சாதி என்பதை, எப்போது விட்டுக் கொடுக்க மாட்டார், சாதி என்பது அவருக்குள் ஆல மரமாக வேறுன்றி நிற்கிறது. “ஏய் பாண்டி உன்கிட்ட எத்தன தடவ சொல்றது, மண்டைல எதையும் ஏத்திக்காத” என்றார் ஒளிவேலன். “நான் என்னங்கய்யா செஞ்சேன்”


இருட்டும் வரை காத்திரு

 

 முன்கதை… அப்புவும் ஆச்சியும் அன்று மாலையே வீட்டிற்கு வந்து விட்டார்கள். வரும் போது அப்பு மாதுளங்கன்று ஒன்றையும் வெகுகவனமாக வாங்கக்கொண்டு வந்து, அன்னலெட்சுமியின் கையிலே மிகக்கனிவோடு கொடுத்தார். “நல்லசாதி மாதுளை. திணத்தடியில் வைச்சால் நல்லா வளரும் பத்திப் பக்கமாக இப்பகொண்டுபோய் வை. உன்ரை கையாலை வைச்சா நல்ல வளரும், முந்தியும் உன்ரை கையாலை வைச்ச மாதுளை நல்லாக் குலுங்கிக் காச்சுது”. அன்னலெட்சுமி மனதை அமுக்கும் இறந்த காலத்தின் நினைவுகளோடு அந்த மாதுளங்கன்றை அப்புவிடமிருந்து வாங்கிக் கொண்டு போய்


மயிலோவியம்

 

 ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பிற்குச் சேர்க்கைக்காக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்திருந்தார்கள் ரகுவும் அவனுடைய அப்பாவும். விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்திசெய்து கொண்டிருந்தார் அப்பா. ஆசிரியர்கள் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்தனர். அந்தப் பள்ளிக்கூடமே பியூன் ஆறுமுகம் இல்லையென்றால் நடக்காது என்பதுபோல் ரொம்பவும் பரப்பரப்பாகக் காணப்பட்டது. அவ்வவ்போது தலைமையாசிரியரின் அறைக்குள்ளே யார்யாரோ சென்று வந்து கொண்டிருந்தார்கள். ரகுவின் தலைக்கு மேலே காற்றாடி வேகமாய்ச் சுழன்று கொண்டிருந்தது. அப்படியிருந்தும் அவனுக்குக் கைக்கால்கள் வியர்த்துக் கொட்டின. உடம்பெல்லாம் சுடுகின்ற மாதிரி