கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 22, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

“குக், கூ!” குயிலிக்காரி

 

 அவன் இயக்கத்தில் சேர்ந்த பிறகு பல்வேறு அனுபவங்களைப் பெறுவது ஆச்சரியமாக…. இருக்கிறது.‍ மாலை நேரம்.இருள் மெல்ல, மெல்ல மங்கலாகக் கவியத் தொடங்கி இருந்தது.வீதிப்புறத்தில் சிறிய தொலைவிலிருந்து ” குக் கூ ,குக் கூ ! ” குயில் கூவுற குரல் கேட்டது.குயில் கூவுறாக்கும் என சீலன் நினைத்துக் கொண்டான்.” என்ன ஒரு கூவல் ! ,இது , ஒரு சிறுமி ஒருத்தி குயிலைப் போலக் கூவுறாள்.நல்ல குரல் வளம்.இவளைக் கண்டுப் பிடித்து சினிமாப்பாடல்களை பாட பழக்கினால்.கலக்குவாள்”என்றார் அம்மா.அம்மா,அராலிப்


‘மோனலிசாப்’ புன்னகை

 

 ‘எங்கள் தகப்பனாருக்கு மிகவும் விருப்பமான ஐயனார் கோவிலுக்கு இன்று போகக் கிடைத்தது. இந்த ஐயனார் கோயிலைப் பற்றியும், அதன் பின் கோபுரத்தோடு வேர்விட்டு வளர்ந்து, பல விழுதுகளை ஊன்றி நிற்கும் பெரிய ஆலமரத்தைப் பற்றியும், அதனயலில் மாரிகாலத்தில் பொங்கித் ததும்பி எப்போதும் வற்றாத குளத்தைப் பற்றியும், கோவிலின் மிக மிக ஆழமான தீர்த்தக் கிணறு பற்றியும், நாங்கள் குழந்தைகளாக இருந்த காலத்தில் எங்கள் தந்தையார் கதைகதையாகச் சொல்வார்.’ ‘ஐயனார் கோவில் பிரதேசம் இராணுவத்தின் பிடியிலிருந்து விடுபட்டு விட்டதென்று


இனி மெல்லச் சாகும்…

 

 காலை பேருந்தின் நெரிசலில் சிக்கித் தவித்த கவிதா தனக்கான பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்தாள். இன்று எப்படியும் மேனேஜர் கிட்ட லீவு கேட்டே ஆகனும் நாளைக்கு சனிக்கிழமை சேர்ந்த மாதிரி இரண்டு நாட்கள் கிடைக்கும் இல்லை என்றால் அவ்வளவு தான். தன் மகளின் கோபத்தை நினைத்து பயந்தபடி தன் இருக்கையில் அமர்ந்தாள். காலை அலுவலகம் அதிகமான கூட்டமாக தோன்றியது. அதில் பெரும்பாலும் புதியவர்களாக தெரிந்தார்கள். கவிதாவின் அனுபவம் பேச்சில் தெரிந்தது. அது அவளின் பலம். அதனால் தான்


இருட்டும் வரை காத்திரு

 

 முன்கதை… அன்றைக்குப் பள்ளிக்கூடம் விடுமுறை நாள். பெட்டகத்தின் மேலுள்ள கடலைக் கடகங்கள், பெட்டிகள், காசுவைக் சம் அடுக்குப் பெட்டிகளை எடுத்துக் கழுவி வெய்யிலிலே காயப்போட்டுக் கொண்டிருக்கின்றாள் அன்னலெட்சுமி. மணி எட்டாகியும் இன்னமும் அவள் குளிக்கவில்லை. குறுக்குக்கட்டுடனேயே அலுவல்களில் சுழன்றுகொண்டிருக்கின்றாள். சின்னராசா, தாய்க்கு ஒத்தாசையாக, வான வெளியில் பறக்கும் பட்டத்தின் வாற்கயிறுபோல அவளைப் பின் தொடர்ந்து சென்று தொட்டாட்டு அலுவல்கள் செய்து கொண்டிருந்தான். பூவும் பிஞ்சுமாய் மூடியிருக்கும் வத்தகக் கொடிகளுக்குத் தண்ணீர் வார்த்துக்கொண்டிருக்கின்றான் மணி. அடிவளவு வேம்பின் கீழே,


ஒரு எழுத்தாளன் கல்லூரிக்கு போகிறான்

 

 தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க தனது எழுத்துக்களால் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் பல பல தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம் சத்தமில்லாமல் அமைதியாய் தங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்க நான் மட்டும் எனது ஊருக்குள் ஒரு எழுத்தாளனாய் பிரபலமாகியிருந்தேன். அதாவது என்னை நானே பிரபலப்படுத்தி கொண்டிருந்தேன். இதற்கு பெரிய சித்து வேலைகள் எல்லாம் தேவையில்லை. எங்கள் ஊரில் நடக்கும் திருவிழாக்கள், பண்டிகைகளில் நடக்கும் நாடகங்கள், நிகழ்ச்சிகள் போன்றவைகளுக்கு வசனம் எழுதுவது, ஜால வார்த்தைகளை கோர்த்து எதிரணிகளை கலங்கடிப்பது, கவிதை