கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 13, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

எதிர்வீட்டு ஜன்னல்

 

 ராகவ், ரமா தம்பதியர், அந்தஅடுக்கு மாடி குடியிருப்புக்கு குடிவந்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தது. ரமாவின் கணவர் ராகவ் தாம்பரம் மெப்சில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறான். ஒரே மகன் கணேஷ் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் நாலாம் வகுப்பு படிக்கிறான். தாம்பரம் கிழக்கில் அமைந்துள்ள “முல்லை ” அடுக்கு மாடி குடியிருப்பில் 16 வீடுகள் உள்ளது. இவர்களது வீடு முதல் தளத்தில் உள்ளது. மேலும் இரண்டு வீடுகள் இத் தளத்தில் அமைந்திருந்தது. இதேபோல எதிர்


ராஜயோக ஜாதகம்

 

 ஒரு மனிதனின் எண்ண ஓட்டங்கள் என்பது கற்பனைக்கும் எட்டாது வெகுதூரம் செல்லும் வலிமையைக் கொண்டது. கைக்குள் கட்டுக் கடங்காமல் காட்டு வெள்ளம் போல் பள்ளத்தை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கும். ஆசையின் காரணமாகவோ அல்லது நம்பிக்கையின் காரணமாகவோ இல்லை மடத்தனமான எண்ணங்களை இவ்வுலகில் பரவ விடவேண்டும் என்ற துடிப்பினாலோ எங்கோ ஒரு மூலையில் இன்னும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அன்று வடிவுக்குக் குழந்தை பிறந்திருந்தது. இரத்தினத்திற்குக் கைக்கால் ஓடவில்லை. வானத்தில் பறந்தான். வருவோர் போவோர்க்கெல்லாம் தனக்கு ஆண் குழந்தை பிறந்துவிட்டது


என் செல்லக்குட்டி கண்ணணுக்கு..!

 

 மகப்பேறு மருத்துவமனைப் படுக்கையில் அரைகுறை மயக்கத்தில் இருந்த நிருவிடம் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்து கொடுத்தாள் நர்ஸ். குழந்தையின் முகத்தை உற்றுப் பார்த்தவள், ‘செல்லக்குட்டி கண்ணா’ என்று குழந்தையின் கன்னத்தில் மெதுவாக முத்தம் ஒன்றைப் பதித்து விட்டுக் குழந்தையை அணைத்து முகம் புதைத்து விசும்பத் தொடங்கினாள். ‘அம்மா குழந்தையைக் கொடுங்க நான் வெச்சிருக்கிறேன்’ என்றாள் இக்கட்டான சூழ்நிலையைப் புரிந்து கொண்ட தாதி. ‘நோ.. நோ.. இவன் அவரோட செல்லக் கண்ணன், அவர் வரும்வரை நான்தான் கவனமாய் வெச்சிருப்பேன்’


புரியாத புதிர்!

 

 சுந்தரியின் சிறு வயதில், அவளது உள் வயிற்றுக்கு அருகில் , பெல்விக் எலும்புக்கு ஒட்டி, ஒரு கட்டி வந்தது,. அதை, அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தினார்கள். பின்னர் அவளுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. இப்போது சுந்தரிக்கு வயது , முப்பது தாண்டி விட்டது. படிப்பு கொஞ்சம் கம்மி. வேலை இல்லாமல் வீட்டோட இருப்பவள். அப்பாவின் சொத்து சுகம் , சுமார் தான் ! அதனால் , யாரும் பெண் கேட்டு வரவில்லை. அதனால், கல்யாணம் ஆகாமல், சுந்தரி


விடாத ஆசை

 

 இந்த உலகத்தின் கண் காணாத தேசம் ஒன்றின் அதிபராக இருக்கும் நான் அன்று இரவு தூக்கம் வராமல் எனது மாளிகையில் மல்லாந்து விட்டத்தை பார்த்தபடி படுத்து கிடக்கிறேன். திடீரென்று மேல் சுவரில் கரிய நிழல் ஒன்று படிந்தது.மனித உருவமும் இல்லாமல் விலங்கினதும் இல்லாமல் குழப்பமாக இருந்தது. யார் நீ ? இந்த கேள்வி என்னிடமிருந்து வெளீப்பட்டாலும், உதடுகள் அசைந்ததாக தெரியவில்லை. மனது இந்த கேள்வியை கேட்டிருக்குமோ? என்னை தெரியவில்லையா? இல்லை தெரியாதது போல் இந்த கேள்வியை கேட்கிறாயா?