கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 6, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

அலென் ராமசாமி உட்காரும் நாற்காலி

 

 ‘உனக்கு பயமாயில்லையா? எத்தனை நாளைக்கு சுவர்களை பார்த்துக்கொண்டு?’ மேசையின் எதிர்முனையில் அமர்ந்திருந்த அவளிடமிருந்து பதிலில்லை, எழுந்துகொண்டாள். தட்டில் தோசை விள்ளல்களாக சிதைந்திருந்தன. இவர் என்ன சொன்னார் என்பதையாவது காதில் வாங்கியிருப்பாளா என்கிற சந்தேகம் எழுந்தது. தட்டினை அவள் கையில் எடுக்கவும், இவருக்கு வரவேண்டிய இறுமல் வந்தது. இவர் முன்னே கிடந்த தட்டை, சாப்பிட்டு முடித்தாரா? இல்லையா? என்றுகூட பார்க்காமல் கையிலெடுத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டாள். இனி கால்மணிநேரத்திற்குக் குறையாமல் தட்டிரண்டையும் கழுவிக்கொண்டிருப்பாள். அவள் போகட்டுமென்று


இரண்டு இட்லியும் ரத்னா கபேயும்

 

 எழிலகம் பஸ் நிறுத்தத்தில் இறங்கினான் சுந்தர். இந்த எழிலகக் கட்டடம் பின்புறமுள்ள பழங்கால அரசு கட்டடத்தில் தான் விஜி வேலை பார்க்கும் அலுவலகம் உள்ளது. விஜி தான் வரச் சொல்லியிருந்தாள் சுந்தரை. சுந்தரும் விஜியைப் பார்க்கும் ஆவலில் இருந்தான். அதற்காகவே முகநூலிலெல்லாம் அவள் பெயரைத் தேடி, ஒருவழியாக அவளது முகநூல் அடையாளம் கண்டறிந்து அவளது உட்பெட்டியில் செய்தி அனுப்பியிருந்தான். “சுந்தர்…..ஓ மை காட்…..எங்கேடாபோயிட்டே….. உன்னை எங்கெல்லாம் தேடி….அப்பா ஈஸ்வரா….நல்ல வேளை….நீயே தொடர்பில் வந்திட்டே……சரியா வெள்ளிக்கிழமை வந்திரு….நான் அதே


சுனை வற்றாது

 

 செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அவள் மனம் இனம் புரியாத பரபரப்பில் ஆழ்ந்து போனது. தொண்டைக் குழிக்குள் தமிழ் நாட்டு ‘கோலி சோடா’ போன்ற ஓர் உருண்டை உருளுவது போன்ற உணர்வு. போகலாமா… வேண்டாமா… அதற்கான பதிலை மனதின் ஆழத்தில் தேடித் தேடிப் பார்த்தாள். மாயமான் போல் வருவதும் மறைவதுமாக ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது. அந்த தோட்டத்தில் நடந்த சாவோ வாழ்வோ எதற்குமே போகாமல் ஏதாவதொரு காரணத்தைக் காட்டி மறுத்து விட்ட போது இந்த இறப்பிற்கு மட்டும் போகக் கேட்டால்


லஞ்சம்

 

 தொலைக்காட்சியில் செய்திகளை பார்த்துக்கொண்டிருந்த விக்னேஷ் அப்போது திரையில் ஓடிய பிளாஷ் நியூஸ் ஐ பார்த்து அதிர்ச்சியில் அம்மா,அம்மா என குரல்கொடுத்தான், அவசரமாக ஓடிவந்த அம்மா, என்னடா, என்ன ஆச்சு என கேட்டாள்? T. V. யை பாரும்மா என்றான் அழுகையுடன், அப்போது T.V. யில் “லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது ‘ 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி ராமலிங்கம் கையும், களவுமாக பிடிபட்டார் என scrolling ல் செய்தி ஓடியது. அதை பார்த்து


ஒரு கடன் மறுக்கப்படுகிறது

 

 அந்த ஏழை ஊரில் பணக்கார மிடுக்குடன் தெரிந்த ஒரே கட்டிடத்துக்குள் நுழையலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடன் டயர் செருப்பை வெளியே பத்திரமாக வைத்து விட்டுத் தலையை மட்டும் உள்ளே பயத்துடன் நீட்டினான் பன்னீர். “ஏய்யா! என்ன வேணும்?” – ‘போரப்போ!’ விளம்பரத்தில் காட்டப்படும் அழுக்குக் கும்பலாக நுழைந்த பன்னீருக்கும் தனக்கும் சற்றே சம்பந்தமில்லாத ‘சன் லைட்’ வெண்மையில் பளிச்சிட்ட வங்கி அலுவலர் கணபதி உரக்கக் கேட்டது அனைவர் காதுகளிலும் விழுந்தது. “ஒண்ணுமில்லீங்க!” என்ற பன்னீரின் பதிலுக்கு, “இம்புட்டு

Sirukathaigal

FREE
VIEW