கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 4, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

தீபிகா

 

 தீபிகாவின் மொபைல் ஒலித்தது, தூங்கிக்கொண்டிருந்த தீபிகா மொபைல் ஐ on செய்து பார்த்த போது, சென்னையிலிருந்து அம்மா கால் செய்வது தெரிந்தது. என்னம்மா, காலையிலேயே போன் பண்ற? என கேட்டாள்? இன்னமும் நீ எழுந்துக்கலயா? மணி 7.30 ஆயிடுச்சு? இல்லம்மா, ராத்திரி வரும்போதே ரொம்ப லேட்டாயிடிச்சி., அப்புறம் சாப்பிட்டுவிட்டு தூங்க 1. 00 மணி ஆயிடுச்சு, சரி எதுக்கு போன் பண்ணினேன்னு சொல்லும்மா? என கேட்டாள் தீபிகா, நம்ம தரகர் மாமா ராமசாமி மூலமா உனக்கு ஒரு


குருத்து வாசனை

 

 ஒரு கணம் அவள் கூறின வார்த்தைகளின் அர்த்தம் புரியாது திகைத்த நான் அதன் பொருள் விளங்கியதும் திக்கென்ற மனதுடன் பாரமாய் ஏதோ நெஞ்சக்குழியில் இறங்க நாற்காலியில் அமர்ந்து கொண்டேன்.அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தேன். எனக்கான உறவில் அவளும் எத்தனை ஆழமாய் ஆழ்ந்திருந்தால் அதை எதற்காகவோ துறந்துவிட அனுமதியாது தீர்மானமாய் தீர்க்கமான முடிவெடுத்திருப்பாள் ஆச்சரியம் ஆச்சரியமாய் பிரவாகமெடுத்தது. சுரீரென்று முள் தைத்த வலியாய் உள்ளம் கிடந்து தவித்தது. ஆச்சரியம் ஆதங்கமாக மாறியது. அவள் மீது கனிவான எனது பார்வையை படரவிட்டேன்.


இதுதான் பாசம் என்பதா…?

 

 அவள் அவசரமாக ஓடி வந்து உள்ளே ஏறியபோது, ரயில் மெல்ல நகரத் தொடங்கியிருந்தது. கையில் கொண்டு வந்த சூட்கேஸை மேலே தூக்கி வைக்க முடியாமல் அவளுக்கு மூச்சு வாங்கியது. பத்திரிகை படித்துக் கொண்டிருந்த அவனிடம் ‘எக்ஸ்க்யூஸ் மீ… இதைக் கொஞ்சம் மேலே வைத்து விடுகிறீர்களா?’ என்றாள். அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவள் ஒரு கணம் அதிர்ந்து போனாள். அவனை நேருக்கு நேர் சந்திப்போம் என்று அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. கண்களில் சட்டென ஈரம் படர்ந்தது. தலை


நானும் இந்த அறையும்

 

 மாலைநேரம். சூரியன் மேற்கில் தெரியவில்லை. ஆனாலும் இன்னும் இருட்டு ஆகாமல் வெளிச்சம் இருந்து கொண்டுதான் இருந்தது. திருவேங்கடம் நடையைக் கொஞ்சம் வேகமாக்கிக் கொண்டார். எப்படியாவது இருட்டுருதுக்கு முன்னாடி வீட்டுக்குப் போயிடனும். மாசம் ஒருத்தன்கிட்ட சோறு. இன்னிக்கு மத்தியானத்தோட பெரியவன் வீட்டுமுறை முடிஞ்சிடுச்சி. இரவு சாப்பாட்டுக்குச் சின்னவன் வீட்டுக்குப் போயிடனும். மனசில எண்ண ஓட்டங்கள் ஆயிர ஆயிராமாய் ஓடிக்கொண்டிருந்தன. “என் பொண்டாட்டி இருந்தான்னா.. ஞா இந்த பொழப்பு பொழைக்க வேண்டியதில்லை. யாருகிட்டையும் கைக்கட்டி வாய்ப்பொத்தி நிற்க வேண்டியதில்லை. மூணு


புதுவீடு

 

 வீடு எப்படியிருக்கு பத்மா? தன் மனைவியை பார்த்து கேட்டான் குமார். சூப்பரா இருக்குங்க, எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு, சொன்னவளிடம் இந்தா வீட்டுசாவி என்று கையில் கொடுத்தான். என்னங்க இது நிசமா? கண்கள் விரிய கேட்டவளை மெல்ல தொட்டு, முதல்ல வீட்டை திறந்து பாரு, நீ ஓ.கே சொல்லியிட்டியின்னா பேசி முடிச்சிடலாம். காண்ட்ராகடரிடம் என்மனைவி ஓ.கே சொன்னா முடிவை சொல்றேன்னு சொல்லியிருக்கேன். வீடு பிடித்து அக்ரிமெண்ட் எல்லாம் போட்டு ஒரு வழியாக பணத்தை செட்டில்மெண்ட் செய்து விட்டு தன்

Sirukathaigal

FREE
VIEW