கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 1, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

வாராது வந்த மணி

 

 மணியைப் பார்த்தான். 5:30. உடனே கிளம்பினால் தேவலாம் என்று தோன்றியது. காலையிலிருந்து அடுத்தடுத்து விடாமல் தொடர் மீட்டிங்குகள். அவற்றில்தான் அன்றைய பொழுது முழுவதும் கரைந்ததே தவிர, முடிக்க வேண்டிய வேலைகள் அப்படியே இருந்தன. களைப்பாக இருந்தது. இன்னும் ஒரு மணி நேரம் தாமதிக்கலாமா இல்லை நாளை பார்த்துக்கொள்ளலாமா என்ற சிந்தனையில் இருந்தவனை செல்ஃபோன் வைப்ரேஷனில் அழைத்தது. தொடுதிரையில் ரெனே வெள்ளைப் பற்களுடன் சிரித்தாள். செவி உபகரணத்தைக் காதில் நுழைத்துக்கொண்டு, “ஹாய் டார்லிங்” என்றான். “இன்னும் கிளம்பலியா? இன்று


மீண்டு(ம்) வருவேன்…

 

 கீழ்த்தளத்தில் இரண்டு, முதல் தளத்தில் மூன்று படுக்கை அறைகள், இதுதவிர பல அறைகள் கொண்ட 7000 சதுர அடியில் விஸ்தாரமாக ராஜா அண்ணாமலைபுரத்தில் பங்களாவில் வாழ்ந்து வந்த எனக்கு 150 சதுர அடியிலிருந்த இந்த அறை தற்சமயம் மிகவும் பெரிதாக இருந்தது. நான் பிழைத்தெழுந்து மீண்டும் வாழப் போகிறேனா என்பதைத் தீர்மானிக்கப் போகின்ற இடம். இங்கு வந்து இன்றோடு நான்கு நாட்கள் ஆகிவிட்டது. வேளாவேளைக்கு சுடுசோறும் குடிப்பதற்குப் பழச்சாறுகளும் கிடைக்கின்றன. மனித முகங்களைத் தொடர்ந்து நான்கு நாட்கள்


துபாய்க்காரர்

 

 மிச்சமுள்ள ரெண்டு பிரட் பீஸ்ல ஜாமத்தடவி முழுங்கிட்டு ஏர்போர்ட்டுக்குக் கிளம்ப வேண்டியதுதான் பொறியாளர் சந்திரன் தீர்மானித்தார். அப்பாடா இந்த வந்தே பாரத் ப்ளைட் டிக்கெட் கெடைக்கறதுக்குள்ள நானும் என் நண்பனும் ஒருவழியாயிட்டோம். கொரோனாவால வேலையும் போச்சு. எப்படியோ ஊருக்குப் போய்ச் சேந்தாப் போதும். அப்பறம் திரும்ப வரதா வேணாமான்னு அங்கபோய் முடிவுபண்ணிக்கலாம். போன தடவை ஊருக்குப் போனபோது நடந்த நிகழ்வுகளை அசைபோட ஆரம்பிச்சேன். கையிலிருந்த காய்ந்த பிரட்டும் டீயும் தேனாய் இனித்தது.. ஊருன்னு நெனச்சவொடனயே புது உற்சாகம்


தொடாமல் நின்றவன்

 

 அன்று தோட்டத்தில் வருடாந்திர ஆலயத்திருவிழா. காலை பூசைக்குப் பிறகு தீமூட்டப்பட்ட காண்டாகட்டைகள் பதமாக வெந்து தீக்குழி கனகவென்ற தணலுடன் தயார் நிலையில் இருந்தது. அதில் மேலும் அனல் கனியத் தென்னை மட்டை கொண்டு கிளறி விடப்பட்டது. தீக்குழிக்கு எதிரே உள்ளூர், வெளியூர் பக்தர்களும் பார்வையாளர்களும் பக்திப் பரவசத்துடனும் வேடிக்கை பார்க்கவும் குழுமியிருந்தார்கள். நேர்த்திக்கடனைத் தீக்குழி இறங்கி நிறைவேற்ற ஆண்களும் தீக்குழி வலம் வர பெண்களும் காத்திருந்தனர். தீ இறங்குபவர்களுக்கும் தீக்குழி சுற்றி வருபவர்களுக்கும் மஞ்சள் நீரைத் தலை


முடிவை நோக்கி

 

 பஸ் சிரமப்பட்டு மேடேறிக் கொண்டிருந்தது. ஓட்டுநரின் பின்புற இருக்கையின் ஜன்னலோரம் உட்கார்ந்து இருந்த சண்முகவடிவுக்கு வண்டிக்கு எதிராக முகத்தில் விசிறிக் கொண்டிருந்த காற்றை முகத்தை சுருக்கி உள்வாங்கி இரசித்துக் கொண்டான். எத்தனை நாளாச்சு இந்த மாதிரி பஸ் ஏறிபோய் ! இப்ப என்னை எல்லாரும் எப்படி பார்ப்பாங்க? ஒரு விநாடி அவன் சிந்தனை ஊருக்குள் சென்றது. அம்மாவுக்கு என்மேல அப்ப இருந்த கோபம் இப்ப இருக்காது, என்னை பாத்தவுடனே சந்தோசப்படத்தான் போறாள். “பாரு” அதான் பாருகுட்டி இப்போகூட

Sirukathaigal

FREE
VIEW