கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 22, 2020

9 கதைகள் கிடைத்துள்ளன.

விக்ரம்…

 

 நிலா தன் கைபேசியை வெறித்துப் பார்த்தாள். அழுகை அழுகையாக வந்தது. மீண்டும் அதனை எடுத்தாள். கால் அழைப்புகளில் அவன் பெயரைப் பார்த்தாள். விக்ரம் என்கிற அவன் பெயருக்குப் பதிலாக பட்டுக் குட்டி என்று பதிவு செய்து இருந்தாள். காதலித்த காலத்தில் தொடங்கி மணவாழ்க்கை ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை அவனைச் செல்லமாகப் பட்டுக் குட்டி என்றுதான் அழைப்பாள். கால் அழைப்பில் பார்த்தாள். அவர்கள் பேசியது வெறும் 10 நொடிகள். அழைப்பை முடிக்க எவ்வளவு அவசரம் காட்டினான். ஏன்


தென்றல் வரும் நேரம்

 

 சிவானி, வாசலில் கோலம் போட்டு முடித்தபின் .கேட்டை மூடிவிட்டு வீட்டிற்குள் வந்தாள். பின்னாலேயே கேட் திறக்கும் சப்தம் கேட்டு நிலைவாசல்படியிலேயே நின்று திரும்பிப் பார்த்தாள். சூட்கேஸை இழுத்துக்கொண்டு ஒருவன் வந்துகொண்டிருந்தான். இவ்வளவு அதிகாலையில் யார் வருவது என சிவானி யோசித்தாள். அங்கேயே நின்றுகொண்டு “யார் நீங்கள்? யாரைப் பார்க்க வேண்டும்?” என வினவினாள். வந்தவன், “ம்ம் எல்லாம் என் நேரம். ஜெயம் அம்மாள் இருக்காங்களா? அவங்களுக்காவது என்னை அடையாளம் தெரிகிறதா பார்ப்போம்” என்றான். சப்தம் கேட்டு உள்ளிருந்து


சுந்தரம் தாத்தா

 

 சென்னையில் செயல்பட்டு வருகிற ஆண்கள் விடுதி அது, சுமார் 100 ஆண்கள் தங்கியுள்ளனர், இதில் பெரும்பாலும் வேலைக்கு செல்கிற 20-50 வயது வரை உள்ள பலதரப்பட்ட வயதினர் தங்கி இருந்தனர், இதன் காவலாளி சுந்தரம் தாத்தா, 67 வயதான சுந்தரம் திண்டிவனத்தை சேர்ந்தவர், அங்கிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்து தன் குடும்பத்தோடு அந்த விடுதியின் அருகில் வசிக்கிறார், அவரது மனைவி கற்பகமும் அதே விடுதியில் சுத்தம் செய்யும் பணி செய்கிறார், சுந்தரம் நல்ல வேலைக்காரர், மென்மையானவர், நன்கு பழகக்கூடியவர்


என்னோட சீட்

 

 சேலத்திலிருந்து கோயமுத்தூருக்கு பஸ் கிளம்ப போகிறது. அதற்குள் உட்கார்ந்திருந்த சாமியப்பனுக்கு ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி வந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டார். பஸ்ஸைவிட்டு இறங்க வேண்டும். எல்லா இருக்கைகளும் நிரம்பி வழிகின்றன. இவருக்கு என ஒரே ஒரு சீட் கிடைத்து அதில் உட்கார்ந்தும் விட்டார். திடீரென தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து இப்பொழுது தீவிரமாகி விட்டது. ஓட்டுநர் வேறு பஸ் பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறார். ஐந்து நிமிடத்தில் வண்டி ஏறிவிடுவார். சட்டென முடிவு


காதலன் ஒருவனைக் கைப்பிடித்தே!!!

 

 “இந்த ஃபேனக் கொஞ்சம் குறைச்சிடுங்க! குளிர் அடிக்கிற மாதிரி இருக்கு! “ “ஏன்! ஜென்னி! ஜுரம் இருக்கா! எதுக்கும் டெம்பரேச்சர் பாக்கட்டுமா ??” “அதெல்லாம் இல்லை ராஜ்! உடம்புக்கு ஒண்ணுமில்லை! ” ராஜன் கெட்டியான போர்வையை எடுத்து போர்த்தி விட்டார்! “சரி! ரொம்ப நேரம் முழிக்காம நேரத்தில தூங்குங்க! நீங்களும் நேத்தெல்லாம் இருமிட்டுதான் இருந்தீங்க! நேத்து ஏன் ஷீலா ஃபோன் பண்ணல! வர வர முன்ன மாதிரி கூப்பிட மாட்டேங்குது! அவள நெனச்சா கவலையா இருக்கு!!!” “ஜென்னி!

Sirukathaigal

FREE
VIEW