கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 19, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

நிகந்தி

 

 காரணம் எல்லாம் தெரியவில்லை என்பதெல்லாம் தற்கொலைக்கான காரணத்தில் சேராது. நான் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து நிறைய இடங்களை யோசித்து இறுதியில்.. “குரங்கு அருவி”க்கு பின்னால் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும்…”குருவி அருவி”க்கு வந்திருக்கிறேன். காடும் பச்சையும்… சாக விடுமா எனத் தெரியவில்லை. ஆனாலும்.. சாவதில் ஒரு நீண்ட நெடிய சம்பவ அனுபத்தை அடைவதில்.. தீவிரம் இருந்தது எனக்குள். என்னைத்தாண்டி நடப்பது தான் பிரபஞ்சம். பிரபஞ்சம் தாண்ட நடப்பது தான் தான். சாவின் விழியில் காட்சிகள்


தழலினிலே…

 

 காலையிலிருந்தே களைக் கட்டியது மண்டபம். நழுவி விடுமோ என்ற அச்சத்தில் பட்டு வேட்டியை பிடித்து கொண்டு ஆண்களும், தழைய தழைய பதிய டிசைன் புடவைகளில் ஜோதிகாவாகவும் திரிட்ஷாவாக பெண்மணிகளும் பரபரப்புடன் இயங்கினர். இளம் பெண்கள் ஹன்சிகாவாகவும், சமந்தாவாகவும் வலம் வந்தனர். குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி திரிந்தன. கொஞ்சம் வயதானவர்கள் ஆயாசமாக அமர்ந்து பழைய கதைகளை கதைத்துக் கொண்டிருக்கின்றனர். இளசுகள் குனிந்த தலை நிமிராது போனில் மூழ்கி அவ்வப்போது தலை தூக்கி ஓரக்கண்ணால் அழகா ஸ்மார்ட் ஆக


ரிஷி மூலம்

 

 அவன் அந்த பார்க்கில் மரத்தடியில் அமர்ந்திருந்தான். காலையிலிருந்து, பார்க் பூட்டும் நேரமான இரவு வரை அப்படியே அதே நிலையில் அவனைப் பார்த்த வாச்மேன் அவ்விடம் விட்டு போகும்படி கூறவும் அவன் எழுந்துகொண்டான். அவன், கைசெயின்,கழுத்தில் செயின், வாச், எல்லாம் அணிந்திருந்தான். எங்கே போகப்போகிறாய் ? என்று வாச்மேன் முத்து கேட்க அவன் தெரியாது எனக்கூறவே, ஐயோ பாவம் என நினைத்த முத்து,தன் வீட்டிற்கு அழைத்துப்போனார். வீட்டில் முத்துவின் மனைவி இரக்கப்பட்டு சோறு போட்டாள். நன்றாக சாப்பிட்டான். எதைக்கேட்டாலும்


எங்கேயும் கேட்காத குரல்

 

 அவர்களுக்கு அது ஐந்தாவது விசிட்.. ஐந்து திக் ப்ரண்ட்ஸ்.. ஐடில ரொம்ப பிஸி லைப் வாழ்றவங்க… அப்பப்ப இந்த மர்ம மலைக்காட்டுக்கு ட்ரக்கிங் வருவாங்க.. விஜி, மிதுன், சோபன், ரித்தி அப்பறம் ரமேஷ்.. வேறு வேறு மாநில ஆளுங்கலா இருந்தாலும் எல்லோருடைய தாட்ஸ்ஸும் ஒரே நேர்க்கோட்டுல இருக்கறதால எப்பவுமே ஒரே ஜாலி, கும்மாளமாவே இருக்கும் இவங்க மீட்டீங்ஸ்..ட்ரக்கிங்ஸ்… இவங்க எல்லாத்துக்கும் ஒரே ஒரு விஷயம் ரொம்ப பிடிக்கும்.. அது மர்மம்.. எங்கேயாவது ஏதாவது பேய்வீடு இருக்கு.. ஆளுங்க


அம்மாவின் கணிப்பு

 

 ப்ளாஸ்பேக்-1 இப்படி “தத்தி” மாதிரி இருந்தா எதையும் கரெகடா செய்யவே மாட்டே அம்மா அரைக்கால் போட்டிருந்த என்னை வசவு பாடிக்கொண்டிருந்தாள் நீ இப்படி சொல்லி சொல்லியே அவன் கடைசியில் எந்த வேலையும் ஒழுங்கா செய்யாமயே போயிடுவான் அப்பா எனக்கு வக்காலத்து வாங்கி பேசினார் நிகழ்வு : அண்ணா என்ன பண்ணுவியோ ஏது பண்ணூவியோ எனக்கு தெரியாது, அந்த பொண்ணுக்கு சரியான தண்டனை கொடுக்கணும். அது சரி என்னைக்கு அந்த பொண்ணு இங்க வரப்போறான்னு சொன்னே? இன்னும் இரண்டு


எல்லாமே சங்கீதம் தான்!!!

 

 ”பாபு ! கார் கண்ணாடியை கொஞ்சம் இறக்குப்பா!” ”இதோ மேடம்…..!!!” ஆழ்வார் பேட்டை சிக்னலில் பைரவியின் ஹோண்டா நின்று கொண்டிருந்தது! ஒரு சின்னப் பெண் பரட்டைத் தலையுடன் , கையை நீட்டிக்கொண்டு வண்டுக்கண்களை உருட்டி ‘உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல ‘ என்று கானக்குயில் சுசிலாவை மிஞ்சும் குரலில் பாடிக் கொண்டே அருகில் வந்தாள் ! பைரவி பர்ஸில் இருந்து நூறு ரூபாய் நோட்டை எடுத்து அவள் கையில் வைத்து அவள் தலையைத் தொட்டு ஆசீர்வாதம் செய்தாள்


சினமிகுந்தால் அறம் கெடும்

 

 கடல் அலைகள் ஆர்ப்பரித்து ஓடி வந்து பரத் கால்களைத் தழுவிச் செல்ல அதை ரசிக்காமல் அவன் சிந்தனை வேறு எங்கோ சுழன்று கொண்டிருந்தது. கடற்கரையில் நடக்கும் எதுவும் அவன் காதுகளில் கேட்கவில்லை. அவன் நண்பன் அழைப்பது மட்டும் அவன் காதில் கேட்டுவிடுமா என்ன? ‘என் காதல்ல உண்மையில்லையா? நான் எங்கத் தப்புச் செஞ்சேன்? நான் எத்தனை தடவ யோசிச்சாலும் என்கிட்ட எந்தத் தப்பும் இல்லையே. ஏன் என்னை வேண்டாம்னு சொன்னா? நான் என்ன வேணும்கிற அளவு சாப்பிட்டுட்டு


மோதிரம்

 

 திருமணம் முடிந்த அடுத்த நாளே…. என் தம்பி தனஞ்செயன் புதுமாப்பிள்ளை ! மணமேடையில் விழுந்த மச்சான் மோதிரங்களையெல்லாம் கழற்றி என்னிடம் கொடுத்தான். வாங்கி எண்ணிய எனக்கு அதிர்ச்சி. ஒன்று குறைந்தது. சபையில் மோதிரம் போடும்போதே நான் கவனித்தேன். எனது நான்கு தங்கைகளின் கணவன்மார்களும் ஆளுக்கொரு மோதிரம் அணிவித்தார்கள். தற்போது புது மச்சான் – பெண்ணின் தம்பி ஒரு மோதிரம் போட்டான். ஆக ஐந்து . ஆனால் என் கையில் இருப்பதோ நான்கு.! ‘இன்னொன்று எங்கே..? ‘விரல்களை பார்த்தேன்.


ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

 

 அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 பிறகு தன்னை கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு “‘ஹெட் ஆபீஸி’ல் இருந்து விசாரண குழு விசாரித்து,அந்த குழு ‘ரிப்போர்ட்’ வந்த பிறகு தான்,எல்லாம் தெரியும்.அது வரைக்கும் நாங்க மூனு பேரும் ‘சஸ்பென்ஷனில்’ தான் இருந்து வரணும்.எங்களுக்கு அது வரைக்கும் அரை மாச சம்பளம் தான் மாசா மாசம் வரும்” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தாள். மங்களம் சொன்னததைக் கேட்டு விமலா மிகவும் வருத்தப் பட்டாள். “அடப் பாவமே,அப்படி


காயத்ரி அஷரங்கள்

 

 (இதற்கு முந்தைய ‘காயத்ரி மந்திர மஹிமை’ சிறுகதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) குடிலுக்கு வெளியே மழை முற்றிலுமாக நின்றிருந்தது. அந்த வயதான பெண்மணி தன் கைப்பையில் இருந்து தோசை போன்ற பெரிய மொபைலை எடுத்து குதிரை வண்டிக்காரனை வரச்சொல்லி போன் செய்தாள். “அவன் வர பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகும் சுவாமி… தாங்கள் தொடருங்கள்.” “காயத்ரி மந்திரம் தன்னைச் சரணடைந்து ஓதுபவர்களைக் காப்பாற்றும் என்பதை விளக்க மிகச் சமீபத்தில் குற்றாலத்தில் நடந்த ஒரு சம்பவம்