கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 16, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

சித்திரத்தில் பெண்எழுதி

 

 (நான் மாணவியாக இருக்கும்போது -எழில் நந்தி- என்ற புனை பெயரில் ‘வசந்தம்’பத்திரிகைக்கு எழுதிய கதை) ஏழைப் பெண்களை எரித்தழிக்க வசதியான ஆண்கள் ஒருநாளும் தயங்குவதில்லை. உடம்பெல்லாம் தாங்கமுடியாமல் எரிகின்றது.அக்கினிக்குள் குளிப்பவள்போல அவள் துடிக்கின்றாள்.பொன்னுடல் என்று வர்ணிக்கத் தக்க அவள் உடல் எரிந்த கருகிய அடையாளத்தில் பார்ப்பதற்குக் பயங்கரமாகவிருக்கிறது. உடம்பின் கீழ்ப்பாகம் முழுதும் கருகிவிட்டது.மேற்பாகத்தில் பெரியதாக்கம் எதுவுமில்லை.அதுவும் அந்தக் குறுகுறுப்பான முகத்தில் எந்த வடுவும் இல்லை.கீழ்ப்பாக எரிவின் வேதனையால்,அவள் முகம் சுருங்குகின்றது.கீழுதட்டைப் பற்களால் கடித்துக்கொண்டு வேதனையை மனதினுள் அமுக்குகிறாள்.அவளுக்கு


அபர்ணா…

 

 அதிகாலை நான்கு மணி. அழைப்பு மணி அலறியது. இரவில் தூங்குவதற்கு எவ்வளவு போராட்டங்கள் இருந்தாலும் சற்று ஆழ்ந்து தூங்கும் நேரம் இது. எரிச்சல் வந்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும்? ஒருவேளை பிரமையாகக் கூட இருக்கலாம். தொடர்ந்து தூங்கி விடலாமா என யோசிக்கும் போது மீண்டும் மணி அடித்தது. இம்முறை தொடர்ந்து இரண்டு மூன்று முறை அடித்து. அவசரம் என்று சொல்லியது. படுக்கையறையிலிருந்து வெளியேறி தாழ்வாரத்தில் நடந்து வரவேற்பறையைக் கடந்து வாசல் கதவை நோக்கிச் சென்றேன். அதிகாலையில்


புயலுக்குப் பின்னே

 

 இதமான காற்று, கொஞ்சமாக குளிர். மயிலுக்குப்பிடித்த சீதோஷ்ணம். தோகை இருந்தால் விரித்தாடி மகிழிந்திருப்பாள் மஹா. கஜா நடைப்பயிற்சிக்கு வரமாட்டேன் என்று சொன்னதால் இத்தனை அழகையும் ரசிக்க கொடுத்து வைக்கவில்லை அவளுக்கு.பாவம். மஹாவின் எண்ண ஓட்டம் இவ்வாறு இருந்தது. அன்று பின்னிரவு மூன்று மணிக்குத்தான் கஜா வீட்டிற்கு வந்தாள். தானே கார் ஓட்டிக்கொண்டு வந்ததால் களைத்திருந்தாள். காலையில் நடை பயிற்சிக்கு வா என்றால் எப்படி வருவாள். மேலும் அவள் பெரியம்மாவான மஹாவின் அம்மாவிடமும் அப்பாவிடமும் ஏதோ ரகசியம் பேசவேண்டுமோ


வ‌ருவாரா மாட்டாரா?

 

 “கிருஸ்மஸ் கிருஸ்மஸ் வந்தாச்சு நியூடிரஸ் நியூடிரஸ் தச்சாச்சு பரிசுகள் கிடைக்கும் பட்சணம் கிடைக்கும் மனசுக்குள் சந்தோஷம் வந்தாச்சு நம்ம மனசுக்குள் சந்தோஷம் வந்தாச்சு ஹேப்பி ஹேப்பி கிருஸ்மஸ்! மேர்ரி மேர்ரி கிருஸ்மஸ்! ஹேப்பி ஹேப்பி கிருஸ்மஸ்! மேர்ரி மேர்ரி கிருஸ்மஸ்!” என்ற பாடல் சத்தமாக தனது மகிழ்ச்சியை பீட்டரின் வீட்டிற்குள் ஒலி பரப்பிப்கொண்டிருந்தது. கிருஸ்மஸ்ஸுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தது. பீட்டர் தேவையான புது துணிமணிகளை எல்லாம் வீட்டிலுள்ள அனைவருக்கும் வாங்கிவிட்டார். கிருஸ்மஸ் தினத்திற்காக அனைவரும் ஆவலுடன்


இலட்சியமும் யதார்த்தமும்

 

 ஏதோ ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அங்கு குழுமியிருந்த அனைவரிலும், கதாநாயகன், நாயகி இருவர் உட்பட அனைவரையும் விட அந்த லைட்பாய் கவனத்தை கவர்ந்தான். சில நேரங்களில் நாயகியின் பார்வை அந்த பையனை நோக்கி செல்வதை கதாநாயகனாக நடிப்பவர் பொறாமையாக பார்த்தார். டைரக்டரை கூப்பிட்டு ஏதோ சொன்னார் அவர் அந்த பையனை கூப்பிட்டு ஏதோ சொல்ல அவன் சரிங்கசார் என்று தலையாட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.கதாநாயகன் முகத்தில் இப்பொழுது பளிச்… ஒரு சில கதாநாயகர்கள்,


பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!!!

 

 “சௌந்தரம்! சீக்கிரமா ஒரு டம்ளர் தண்ணியோ , மோரோ கொண்டு வாம்மா!” “என்னாச்சு! ஏன் மூச்சு வாங்கறது?! பழனிக்கு பாத யாத்திரை போன மாதிரி மூஞ்சியெல்லாம் வேர்த்து கொட்டி ……” “பழனிக்கே போய்ட்டு வந்திருக்கலாம்!! புண்ணியமாவது மிஞ்சியிருக்கும்” நடராஜனுக்கு நிஜமாகவே மூச்சு வாங்கியது! போன வருஷம் தான் பைபாஸ் அறுவை சிகிச்சை பண்ணிக் கொண்டார்! “கார்ல போனா அரைமணிநேரம் , பஸ்ல முக்கா மணிதான்னு சொன்னானே புண்ணிய கோடி!!” “கூப்பிடு தூரம்! கூப்பிடு தூரம்னு சொல்லி சொல்லி


விலை மதிப்பு

 

 “பரமு உன் பொஞ்சாதி நிறை மாசமா இருக்கா, அதனால் எங்கேயும் போகாத, தங்கச்சி கூடவே இரு, இந்த நேரத்துல நீ பக்கத்திலதான் இருக்கனும்” “நான் எங்கேயும் போகமாட்டேன் தேவா, ஆனால் வேலை வந்துட்டா என்ன பண்ண” “ஆமா பரமு நீ கலெக்டர் உத்தியோகம் பார்க்க, உயிரை எடுக்கும் வேலைதானே, அதுக்கு ஏன்? இவ்வளவு கவலை உனக்கு” “செய்யும் தொழிலே தெய்வம் தேவா, எப்படி கவலைப்படமா இருக்க முடியும்” “வேணாம் பரமு நீ பண்ற வேலையை தெய்வத்துக்கு சமமா


எதிர் வீட்டு எதிரி

 

 சேகர், ஜானகி இடிந்து போனார்கள். அவன் ஆத்திரத்துடன் கூறியது இன்னும் அவர்கள் காதுகளில் ரீங்காரித்தது. ஒரு சில வினாடிகளுக்கு முன்தான்…பெண்ணின் அண்ணன் அரவிந்தன் வந்தான் . “வாங்க”ன்னு சொல்லி உபசரிப்பதற்கு முன்பே…. “உங்க தம்பி.. தங்கக் கம்பி. மனநிலை சரி இல்லாதவராமே ! போன வருசம் தஞ்சாவூர் மெடிக்கல்ல வைச்சு வைத்தியம் பார்த்தீங்களாம். இருபது பவுன் நகை போட்டு, அம்பதாயிரம் ரொக்கம் கொடுத்து, அம்பதாயிரத்துக்கு சீர்வரிசை செய்து தள்ளிவிட எங்க பொண்ணு ஒன்னும் நொண்டி முடமில்லே. இப்படி


ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

 

 அத்தியாயம்-1 பதினோறு மணி நேரம் கடலில் குளித்து விட்டு தன் சிவந்த மேனியை தண்ணீர் போக சிலிர் த்து விட்டு,மெல்ல தன் தலையை கடல் தண்ணீரில் இருந்து மேலே தூக்கி, வெளியே வந்தான் சூரியன். அவன் சிவந்த மேனியில் இருந்து வெளி வந்த கிரணங்களால் தன்னை சுற்றி இருந்த வானம், மேகம்,இவற்றை சிவப்பு மயமாக்கினான்.கடலோரம் இருந்த உயர்ந்த கட்டிடங்களின் கிழக்கு பக்க சுவர்கள் இளம் சிவப்பு நிற வண்ணம் பூசப் பட்டது போல் காணப்பட்டன.பூமியைக் கவ்விக் கொண்டு


காயத்ரி மந்திர மஹிமை

 

 (இதற்கு முந்தைய ‘காயத்ரி மந்திரம்’ கதையைப் படித்துவிட்டு, இதைப் படித்தால் புரிதல் எளிது) அந்தச் சாமியார் மேலும் தொடர்ந்தார்… “காயத்ரி மந்திரத்தை அனுதினமும் உச்சரிப்பதால் வலிமை; ஆற்றல்; கவர்ச்சி; திறமான யோசனை; இயக்கம்; பயபக்தி; நல்லது கெட்டதை அறியும் ஆற்றல்; செயலூக்கம்; தைரியம்; நினைவாற்றல்; உறுதி; அவா; அன்பு; தீயதில் வெறுப்பு; ஒற்றுமை; கெட்டதிலிருந்து விலகல்; பகுப்பாயும் திறன்; தொகுத்துணரும் திறன்; கேட்டல், தொடுதல், பார்த்தல், சுவை முகர்தல், நுண்ணறிவு ஆகிய இருபத்திநான்கு நற்பலன்கள் கிடைக்கும்.” “ராம