கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 13, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

இளமைக் காலம்

 

 அராலி, இயற்கை வளம் கொழிக்கும் கிராமம் ! கடலும் கரையும் சேர்ந்த நெய்தல் நிலப்பகுதியோடு இருக்கிறது.ஓங்கி உயர்ந்த பனை மரங்களால் சோலைத் தன்மைக் கொன்டது.குடியிருப்புகள் நெருக்கமான இடங்களில்,வளவுகளும் சுருங்கியதில் பனை மரங்களைக் குறைத்து அழகையும் குறைத்து விட்டுருக்கிறார்கள்.வெட்டி துலா, வீட்டு கூரைகளிற்கு பயன்படுத்தி, பதிலுக்கு தென்னை நடப்பட்டிருக்கின்றன.தென்னை வழவழப்பான யாருமே ஏறக்கூடியது.பனை சொர சொரப்பென ….நெஞ்சுக்கும் மட்டை வைத்தே கயிறுப் போட்டு வலு அவதானமாக ஏற வேண்டியவை.தோலை எல்லாம் சீராய்த்து கிழித்து விடும் பயங்கரமிருந்ததால், ஓலை விழுகிற


தொடர்பு எல்லைக்கு அப்பால்…

 

 அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்ததிலிருந்து தாரிணிக்கு இருப்புக் கொள்ளவில்லை. நேற்று மாலை ஆறரை மணி வாக்கில் அம்மாவிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது. “அப்பா என்னமோ பண்ணுதுன்னு சொல்றாருமா. டாக்டர் விக்டர பாக்க போறோம்” ‘அய்யோ. என்னாச்சு?’ ‘ஒன்னுமில்லமா‌ மத்தியானத்திலிருந்து கை வலிக்குதுன்னாரு’. ‘அப்பவே போக வேண்டியது தானே டாக்டர் கிட்ட’. “அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு ஒன்னும் வலி இல்லைன்னாரு. அப்புறம் நல்லா தூங்கிட்டாரு. எழுந்த உடனே ஒரு மாதிரியா இருக்குன்னாரு. அதான் டாக்டர் கிட்ட கிளம்பி


பாப்பாவுக்கு ஒரு பாட்டு

 

 போன வருடம், இதே தீபாவளி விடுமுறைக்கு வந்த அண்ணன்; அவனுடைய நண்பனையும் அழைத்து வந்திருந்தான். முதலில் அவர்களுடன் உற்சாகமாக பேசிக்கொண்டிருந்த அம்மா; அவன் யார் என்பது தெரிந்தவுடன் கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டது எனக்குப் பிடிக்கவில்லைதான். ஆனால் எங்கள் ஊர் அப்படிப்பட்டது. அவன் எங்கள் அத்தையின் ஊரான அத்தியூரைச் சேர்ந்தவன். அவனுடைய அப்பா சிவசாமி, நன்றாக ஜாதகம் பார்ப்பார் மூலிகை மருத்துவமும் தெரியும். அவர் கையால் விபூதி மந்திரித்துப் பூசிக்கொண்டால்,நோய்கள் சரியாகும். அப்படிப்பட்ட பெரியவரை, அம்மா, ஒரு நாள்கூட


ரசவாதி

 

 “வாங்க சார்.. வாங்க சார்… வாங்க சார்”னு கூப்ட்டு கூப்ட்டு ஓஞ்ச சமயத்துல, “சரி சரி அடுத்த திங்கக்கிழம வரேனு” ஒத்துக்கிட்டாரு எங்க எம்டி.. எதுக்கு எங்க… அப்படீன்னு நான் சொல்றதுக்கு முன்னாடி எங்க எம்டியைப்பத்தி சொல்லீட்றேன்… ஒரே சிடு சிடுன்னு இருப்பாரு… யாருக்கிட்ட எப்ப பேசினாலும் கோபமாவே இருப்பாரு.. அது ஏன்னே யாருக்கும் தெரியாது.. ஆனா ஒரே ஒரு நேரத்தில மாத்திரம் ரொம்ப ஹேப்பியா இருப்பாரு.. அது சாப்படர நேரம்…. நல்ல சாப்பாட்டுப்பிரியர்… அதுவும் மிகச்சிறந்த


கடல் அலை

 

 இருள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையிலும் கடலையே வெறித்து பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த வயதானவரை நேரமாகிவிட்டது என்று குழந்தைகளையும், ஒருசிலர் தங்களுடைய கணவன்மார்களையும் இழுத்துக் கொண்டு சென்றவர்கள் வியப்பாய் பார்த்துக்கொண்டு சென்றார்கள். ஒருசிலர் பாவம் என்ற தோரணையில் கூட பார்த்து சென்றிருக்கலாம். மனிதக் கூட்டங்கள் தன்னை அதிசயமாய் பார்த்து செல்வதையோ இல்லை பாவமாய் பார்த்து செலவதையோ கண்டு கொள்ளும் மனோநிலையில் பெரியவர் இல்லை. இப்பொழுது பெரியவர் இன்னும் வரக் காணோம் என்று பதட்டப்பட்டு தேடுவோர் யாருமில்லை. காணாமல் போய்விட்டார்


அகிலம் மதுரம்

 

 மதுரம் டீச்சரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டான் குமரேசன்! அவனால் பேசமுடியவில்லை! கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது! “டீச்சர்….. டீச்சர் …!…” தொண்டை அடைத்தது! “என்ன தெரியுதா ? இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க!” மதுரத்தின் கண்கள் விரிந்தன! வார்த்தை வராமல் நாக்கு குழறியது! “கு…கு… குமார்.. குமரேசன் ..” “டீச்சர்! என்ன ஞாபகம் வச்சிருக்கீங்களே! எனக்கு அது போதும் டீச்சர்! நான் உங்கள கொஞ்சமாவா படுத்தி வச்சிருக்கேன்! இன்னிக்கு ஒரு மனுஷனா


நிர்மலாவின் கனவு

 

 நிர்மலாவுக்கு கல்யாணமான புதிது. அவளது கணவனின் அம்மா, அத்தை சியாமளா , அவளை தாங்கு தாங்கு என தாங்கினாள். இருக்காதா பின்னே ?. தலையில் சொட்டை விழுந்த, சுமாரான சம்பளத்தில் இருக்கும் 34 வயதான மகனுக்கு, நல்ல வேலையிலிருக்கும் , முப்பதே வயதான நல்ல குடும்பத்து பெண் கிடைப்பது என்பது, குதிரைக் கொம்பாச்சே ! பெண் பார்க்க சுமார் தான். ஆனால் என்ன, தேடி தேடி அலைந்து, நொந்து நூடுல்ஸ் ஆன பிறகு அமைந்த வரன். அதனால்


இருள் மனம்

 

 ஜோதிலிங்கம் அக்கம் பக்கம் பார்த்து இருட்டில் செடி மறைவில் ஜன்னலோர சுவர் ஓரம் பதுங்கி உட்கார்ந்தார். திருட்டு மனம் படபடத்தது. நேற்றுதான் இவர் மோகனைச் சந்தித்தார். அவன் இவரை….தன் வீட்டு வாசல்படியில் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்தான். பின் ஆச்சரியப்பட்டு , சுதாரித்து , சமாளித்து…. “வாங்க ! “வரவேற்றான். “உள்ளே வாங்க..”அழைத்தான். சென்றார்கள். அமர்ந்தார்கள். ஜோதிலிங்கம் வெகுநேர தயக்கத்திற்குப் பிறகு… “தம்பி ! வீட்ல அம்மா, அப்பா இல்லியா..? “கேட்டார். “இல்லே. நான் மட்டும்தான் இருக்கேன்.அவுங்க வெளியூர்


வாழ்க்கை என்னும் என் ஊஞ்சல்…

 

 அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 ஏழு மணி நேரம் ஆனதும் ’லேபர் வார்ட்டில்’ இருந்து ஒரு நர்ஸ் வெளியே வந்து எங்களைப் பார்த்து “அவங்களுக்கு ரெட்டை குழந்தைங்க பொறந்து இருக்கு.ஒரு ஆண் குழந்தேயும்,ஒரு பெண் குழந்தையும் பொறந்து இருக்கு.இன்னும் அரை மணி நேரம் ஆனதும் நான் வந்து சொன்ன பிறகு நீங்க உள்ளே போய் அவங்களேயும், குழந்தேங்களேயும் பாக்கலாம்” என்று சொல்லி விட்டு மறுபடியும் ‘வார்ட்டு’க்குள் போய் விட்டாள். நான் சந்தோஷப் பட்டு நான் வேண்டிக் கொண்டு வந்து


காயத்ரி மந்திரம்

 

 அயோத்தியில் அகன்ற ஸரயு நதி பிரவாகமாக ஓடிக் கொண்டிருந்தது. அப்போது காலை ஒன்பது மணி. வானம் இருட்டி மழை பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. நீளமான வெண் தாடியை நீவி விட்டபடி அந்தச் சாமியார் காவியுடையில் நதிக்கரை குடிலில் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு வயதான பெண்மணி குதிரை வண்டியில் வந்து இறங்கி குடிலின் உள்ளே மெதுவாக எட்டிப் பார்த்தாள். “வாங்கோ…” பவ்யமாக உள்ளே நுழைந்த பெண்மணி, அங்கு தரையில் விரித்திருந்த வெண் பட்டுப் பாயின் மீது அமர்ந்தாள். “சுவாமி தாங்கள்